Thiruppugal 520 Paniyinvindhuli
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனன தந்தன தானனா தனதனன
தனன தந்தன தானனா தனதனன
தனன தந்தன தானனா தனதனன – தனதான
பனியின் விந்துளி போலவே கருவினுறு
மளவி லங்கொரு சூசமாய் மிளகுதுவர்
பனைதெ னங்கனி போலவே பலகனியின் – வயறாகிப்
பருவ முந்தலை கீழதாய் நழுவிநில
மருவி யொன்பது வாசல்சே ருருவமுள
பதுமை யின்செயல் போலவே வளிகயிறி – னுடனாடி
மனவி தந்தெரி யாமலே மலசலமொ
டுடல்ந கர்ந்தழு தாறியே அனைமுலையின்
மயம யின்றொரு பாலனா யிகமுடைய – செயல்மேவி
வடிவ முன்செய்த தீமையா லெயுமுனையும்
அறம றந்தக மீதுபோய் தினதினமு
மனம ழிந்துடல் நாறினே னினியுனது – கழல்தாராய்
தனன தந்தன தானனா தனதனன
தினன திந்தன தீததோ திகுததிகு
தகுத குந்ததி தாகுதோ வெனமுழவு – வளைபேரி
தவில்க ணம்பறை காளமோ டிமிலைதொனி
யினமு ழங்கெழு வேலைபோ லதிரபொரு
சமர்மு கங்களின் மேவியே விருதுசொலு – மவுணோர்கள்
சினம ழிந்திட தேர்கள்தோ லரிபரிகள்
குருதி யெண்டிசை மூடவே அலகைநரி
சிறையி னங்களி கூரவே நகையருளி – விடும்வேலா
சிவன்ம கிழ்ந்தரு ளானைமா முகன்மருவி
மனம கிழ்ந்தருள் கூரவோர் கயிலைமகிழ்
திகழ்கு றிஞ்சியின் மாதுமால் மருவுபுகழ் – பெருமாளே.
பதம் பிரித்தது
தனன தந்தன தானனா தனதனன
தனன தந்தன தானனா தனதனன
தனன தந்தன தானனா தனதனன – தனதான
பனியின் விந்(து) துளி போலவே கருவின் உறு
அளவில் அங்கு ஒரு சூசம் ஆய் மிளகு துவர்
பனை தெ(ன்)னங் கனி போலவே பல கனியின் – வயிறு ஆகி
பருவமும் தலை கீழதாய் நழுவி நிலம்
மருவி ஒன்பது வாசல் சேர் உருவம் உள
பதுமையின் செயல் போலவே வளி கயிறின் – உடன் ஆடி
ம(ன்)ன விதம் தெரியாமலே மல சலமொடு
உடல் நகர்ந்து அழுது ஆறியே அ(ன்)னை முலையின்
மயம் அயின்று ஒரு பாலனாய் இகம் உடைய – செயல் மேவி
வடிவம் முன் செய்த தீமையால் எயும் உனையும்
அற மறந்து அகம் மீது போய் தின(ம்) தினமும்
மனம் அழிந்து உடல் நாறினேன் இனி உனது – கழல் தாராய்
தனன தந்தன தானனா தனதனன
தினன திந்தன தீததோ திகுததிகு
தகுத குந்ததி தாகுதோ என முழவு – வளை பேரி
தவில் கணம் பறை காளமோடு இமிலை தொனி
இனம் முழங்க எழு வேலை போல் அதிர பொரு
சமர் முகங்களின் மேவியே விருது சொலும் – அவுணோர்கள்
சினம் அழிந்திட தேர்கள் தோல் அரி பரிகள்
குருதி எண் திசை மூடவே அலகை நரி
சிறை இனம் களி கூரவே நகை அருளி – விடும் வேலா
சிவன் மகிழ்ந்து அருள் ஆனை முகன் மருவி
மனம் மகிழ்ந்து அருள் கூர ஓர் கயிலை மகிழ்
கழ் குறிஞ்சியின் மாது மால் மருவு புகழ் – பெருமாளே.
English
paniyin vinthuLi pOlavE karuvinuRu
maLavi langoru cUsamAy miLakuthuvar
panaithe nangani pOlavE palakaniyin – vayaRAkip
paruva munthalai keezhathAy nazhuvinila
maruvi yonpathu vAsalsE ruruvamuLa
pathumai yinseyal pOlavE vaLikayiRi – nudanAdi
manavi thantheri yAmalE malacalamo
dudalna karnthazhu thARiyE anaimulaiyin
mayama yinRoru pAlanA yikamudaiya – seyalmEvi
vadiva munseytha theemaiyA leyumunaiyum
aRama Ranthaka meethupOy thinathinamu
manama zhinthudal nARinE niniyunathu – kazhalthArAy
thanana thanthana thAnanA thanathanana
thinana thinthana theethathO thikuthathiku
thakutha kunthathi thAkuthO venamuzhavu – vaLaipEri
thavilka NampaRai kALamO dimilaithoni
yinamu zhangezhu vElaipO lathiraporu
samarmu kangaLin mEviyE viruthusolu – mavuNOrkaL
sinama zhinthida thErkaLthO lariparikaL
kuruthi yeNdisai mUdavE alakainari
siRaiyi nangaLi kUravE nakaiyaruLi – vidumvElA
sivanma kizhntharu LAnaimA mukanmaruvi
manama kizhntharuL kUravOr kayilaimakizh
thikazhku Rinjiyin mAthumAl maruvupukazh – perumALE.
English Easy Version
paniyin vin(thu) thuLi pOlavE karuvin uRu
aLavil angoru cUsamAy miLakuthuvar
panai the(n)nang kani pOlavE pala kaniyin – vayiRu Aki
paruvamum thalai keezhathAy nazhuvi nilam
Maruvi onpathu vAsal sEr uruvam uLa
pathumaiyin seyal pOlavE vaLi kayiRin udan – Adi ma(n)na
vitham theriyAmalE mala salamodu
udal nakarnthu azhuthu AriyE a(n)nai mulaiyin
mayam ayinRu oru pAlanAy ikam udaiya – seyal mEvi
vadivam mun seytha theemaiyAl eyum unaiyum
aRa maRanthu akam meethu pOy thina(m) thinamum
manam azhinthu udal nARinEn ini unathu – kazhal thArAy
thanana thanthana thAnanA thanathanana
thinana thinthana theethathO thikuthathiku
thakutha kunthathi thAkuthO ena muzhavu – vaLai pEri
thavil kaNam paRai kALamOdu imilai thoni
inam muzhanga ezhu vElai pOl athira poru
samar mukangaLin mEviyE viruthu solum – avuNOrkaL
sinam azhinthida thErkaL thOl ari parikaL
kuruthi eN thisai mUdavE alakai nari
siRai inam kaLi kUravE nakai aruLi – vidum vElA
sivan makizhnthu aruL Anai mukan maruvi
manam makizhnthu aruL kUra Or kayilai makizh
thikazh kuRinjiyin mAthu mAl maruvu pukazh – perumALE.