திருப்புகழ் 522 முகத்தைப் பிலுக்கி (கயிலைமலை)

Thiruppugal 522 Mugaththaippilukki

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனத்தத் தனத்த தத்த தனத்தத் தனத்த தத்த
தனத்தத் தனத்த தத்த – தனதான

முகத்தைப் பிலுக்கி மெத்த மினுக்கித் தொடைத்து ரத்ந
முலைக்கச் சவிழ்த்த சைத்து – முசியாதே

முழுக்கக் கழப்பி யெத்தி மழுப்பிப் பொருட்ப றித்து
மொழிக்குட் படுத்த ழைத்த – மளிமீதே

நகைத்திட் டழுத்தி முத்த மளித்துக் களித்து மெத்த
நயத்திற் கழுத்தி றுக்கி – யணைவார்பால்

நடுக்குற் றவர்க்கு மெத்த மனத்தைப் பெருக்க வைத்து
நயத்துத் தியக்கி நித்த – மழிவேனோ

செகக்கச் செகக்க செக்க தரிக்கத் தரிக்க தக்க
திமித்தித் திமித்தி தித்தி – யெனஆடும்

செகத்துக் கொருத்தர் புத்ர நினைத்துத் துதித்த பத்த
ஜெனத்துக் கினித்த சித்தி – யருள்வோனே

மிசைத்துத் திடத்தொ டுற்று அசைத்துப் பொறுத்த ரக்கன்
மிகுத்துப் பெயர்த்தெ டுத்த – கயிலாய


மிசைக்குற் றடுத்து மற்ற பொருப்பைப் பொடித்தி டித்து
மிதித்துத் துகைத்து விட்ட – பெருமாளே.

பதம் பிரித்தது

தனத்தத் தனத்த தத்த தனத்தத் தனத்த தத்த
தனத்தத் தனத்த தத்த – தனதான

முகத்தைப் பிலுக்கி மெத்த மினுக்கித் தொடைத்து ரத்ந
முலைக் கச்சு அவிழ்த்து அசைத்து – முசியாதே

முழுக்கக் கழப்பி எத்தி மழுப்பிப் பொருள் பறித்து
மொழிக்குள் படுத்தி அழைத்து – அமளி மீதே

நகைத்திட்டு அழுத்தி முத்தம் அளித்துக் களித்து மெத்த
நயத்தில் கழுத்து இறுக்கி – அணைவார் பால்

நடுக்கு உற்று அவர்க்கு மெத்த மனத்தைப் பெருக்க வைத்து
நயத்துத் தியக்கி நித்தம் – அழிவேனோ

செகக்கச் செகக்க செக்க தரிக்கத் தரிக்க தக்க
திமித்தித் திமித்தி தித்தி – என ஆடும்

கத்துக்கு ஒருத்தர் புத்ர நினைத்துத் துதித்த பத்த
ஜெனத்துக்கு இனித்த சித்தி – அருள்வோனே

மிகைத்துத் திடத்தொடு உற்று அசைத்துப் பொறுத்த அரக்கன்
மிகுத்து பெயர்த்து எடுத்த – கயிலாய

மிசைக்கு உற்று அடுத்து மற்ற பொருப்பைப் பொடித்து இடித்து
மிதித்துத் துகைத்து விட்ட – பெருமாளே

English

mukaththaip pilukki meththa minukkith thodaiththu rathna
mulaikkac chavizhththa saiththu – musiyAthE

muzhukkak kazhappi yeththi mazhuppip porutpa Riththu
mozhikkut paduththa zhaiththa – maLimeethE

nakaiththit tazhuththi muththa maLiththuk kaLiththu meththa
nayaththiR kazhuththi Rukki – yaNaivArpAl


nadukkut Ravarkku meththa manaththaip perukka vaiththu
nayaththuth thiyakki niththa – mazhivEnO

sekakkac chekakka chekka tharikkath tharikka thakka
thimiththith thimiththi thiththi – yenaAdum

sekaththuk koruththar puthra ninaiththuth thuthiththa paththa
jenaththuk kiniththa siththi – yaruLvOnE

misaiththuth thidaththo dutRu asaiththup poRuththa rakkan
mikuththup peyarththe duththa – kayilAya


misaikkut Raduththu matRa poruppaip podiththi diththu
mithiththuth thukaiththu vitta – perumALE.

English Easy Version

mukaththaip pilukki meththa minukkith thodaiththu rathna
mulaik kacchu avizhththu asaiththu – musiyAthE

muzhukkak kazhappi eththi mazhuppip poruL paRiththu
mozhikkuL paduththi azhaiththu – amaLi meethE

nakaiththittu azhuththi muththam aLiththuk kaLiththu meththa
nayaththil kazhuththu iRukki – aNaivAr pAl

nadukku utRu avarkku meththa manaththaip perukka vaiththu
nayaththuth thiyakki niththam – azhivEnO

sekakkac chekakka chekka tharikkath tharikka thakka
thimiththith thimiththi thiththi – ena Adum

sekaththukku oruththar puthra ninaiththuth thuthiththa paththa
jenaththukku iniththa siththi – aruLvOnE

mikaiththuth thidaththodu utRu asaiththup poRuththa arakkan
mikuththu peyarththu eduththa – kayilAya

misaikku utRu aduththu matRa poruppaip podiththu idiththu
mithiththuth thukaiththu vitta – perumALE