திருப்புகழ் 524 கறுத்ததலை வெளிறு (திருவேங்கடம்)

Thiruppugal 524 Karuththathalaiveliru

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனத்ததன தனதன தனந்த
தனத்ததன தனதன தனந்த
தனத்ததன தனதன தனந்த – தனதான

கறுத்ததலை வெளிறு மிகுந்து
மதர்த்த இணை விழிகள் குழிந்து
கதுப்பிலுறு தசைகள் வறண்டு – செவிதோலாய்க்

கழுத்தடியு மடைய வளைந்து
கனத்தநெடு முதுகு குனிந்து
கதுப்புறுப லடைய விழுந்து – தடுநீர்சோர்

உறக்கம்வரு மளவி லெலும்பு
குலுக்கிவிடு மிருமல் தொடங்கி
உரத்தகன குரலு நெரிந்து – தடிகாலாய்

உரத்தநடை தளரு முடம்பு
பழுத்திடுமுன் மிகவும் விரும்பி
உனக்கடிமை படுமவர் தொண்டு – புரிவேனோ

சிறுத்தசெலு வதனு ளிருந்து
பெருத்ததிரை யுததி கரந்து
செறித்தமறை கொணர நிவந்த – ஜெயமாலே

செறித்தவளை கடலில் வரம்பு
புதுக்கியிளை யவனோ டறிந்து
செயிர்த்தஅநு மனையு முகந்து – படையோடி

மறப்புரிசை வளையு மிலங்கை
யரக்கனொரு பதுமுடி சிந்த
வளைத்தசிலை விஜய முகுந்தன் – மருகோனே

மலர்க்கமல வடிவுள செங்கை
அயிற்குமர குகைவழி வந்த
மலைச்சிகர வடமலை நின்ற – பெருமாளே.

பதம் பிரித்தது

தனத்ததன தனதன தனந்த
தனத்ததன தனதன தனந்த
தனத்ததன தனதன தனந்த – தனதான

கறுத்ததலை வெளிறு மிகுந்து
மதர்த்த இணை விழிகள் குழிந்து
கதுப்பிலுறு தசைகள் வறண்டு – செவிதோலாய்

கழுத்தடியும் அடைய வளைந்து
கனத்தநெடு முதுகு குனிந்து
கதுப்புறு பல் அடைய விழுந்(து) – உதடுநீர்சோர்

உறக்கம்வரும் அளவில் எலும்பு
குலுக்கிவிடும் இருமல் தொடங்கி
உரத்தகன குரலு நெரிந்து – தடிகாலாய்

உரத்தநடை தளரும் உடம்பு
பழுத்திடுமுன் மிகவும் விரும்பி
உனக்கடிமை படும் அவர் தொண்டு – புரிவேனோ

சிறுத்த செலு அதனுள் இருந்து
பெருத்ததிரை யுததி கரந்து
செறித்த மறை கொணர நிவந்த – ஜெயமால்

ஏ செறித்து அ(வ்)வளை கடலில் வரம்பு
புதுக்கி இளையவனோடு அறிந்து
செயிர்த்த அநு மனையும் உகந்து – படையோடி

மறப்புரிசை வளையும் இலங்கை
அரக்கனொரு பதுமுடி சிந்த
வளைத்தசிலை விஜய முகுந்தன் – மருகோனே

மலர்க்கமல வடிவுள செங்கை
அயிற்குமர குகைவழி வந்த
மலைச்சிகர வடமலை நின்ற – பெருமாளே

English

kaRuththathalai veLiRu migundhu
madharththa iNai vizhigaL kuzhindhu
kadhuppiluRu dhasaigaL vaRaNdu – sevithOlAy

kazhuththadiyu madaiya vaLaindhu
ganaththanedu mudhugu kunindhu
kadhuppuRupa ladaiya vizhundh – udhaduneersOr

uRakkamvarum aLavil elumbu
kulukkividum irumal thodangi
uraththagana kuralu nerindhu – thadikAlAy

uraththanadai thaLarum udambu
pazhuththidumun migavum virumbi
unakkadimai padumavar thoNdu – purivEnO

siRuththaselu vadhanuL irundhu
peruththathirai yudhadhi karandhu
seRiththamaRai koNara nivandha – jeyamAlE

seRiththavaLai kadalil varambu
pudhukki iLai yavano daRindhu
seyirththa anumanaiyum ugandhu – padaiyOdi

maRappurisai vaLaiyum ilangai
arakkanoru padhumudi sindha
vaLaiththasilai vijaya mukundhan – marugOnE

malarkkamala vadivuLa sengai
ayiRkumara gugaivazhi vandha
malaisikara vadamalai nindra – perumALE.

English Easy Version

kaRuththathalai veLiRu migundhu
madharththa iNai vizhigaL kuzhindhu
kadhuppiluRu dhasaigaL vaRaNdu – sevithOlAy

kazhuththadiyu madaiya vaLaindhu
ganaththanedu mudhugu kunindhu
kadhuppuRupa ladaiya vizhundhu – udhaduneersOr

uRakkamvarum aLavil elumbu
kulukkividum irumal thodangi
uraththagana kuralu nerindhu – thadikAlAy

uraththanadai thaLarum udambu
Pazhuththidumun migavum virumbi
unakkadimai padumavar thoNdu – purivEnO

siRuththaselu vadhanuL irundhu
peruththathirai yudhadhi karandhu
seRiththa maRai koNara nivandha – jeyamAl

EyseRiththavaLai kadalil varambu
Pudhukki iLai yavanodu aRindhu
seyirththa anumanaiyum ugandhu – padaiyOdu

maRappurisai vaLaiyum ilangai
arakkanoru padhumudi sindha
vaLaiththasilai vijaya mukundhan – marugOnE

malarkkamala vadivuLa sengai
ayiRkumara gugaivazhi vandha
malaisikara vadamalai nindra – perumALE