Thiruppugal 526 Nechchuppichchi
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தத்தத் தத்தத் தத்தத் தத்தத்
தத்தத் தத்தத் தனதான
தனத்த தனத்த தனத்த தனத்தன
தனதன தனதன தனதன தனதன
தனதன தனதன – தனதான
நெச்சுப் பிச்சிப் புட்பத் தட்பக்
கச்சிக் கச்சுற் றறன்மேவி
நெறித்து வெறித்து இருட்டை வெருட்டிய
நிரைதரு மருமலர் செருகிடு பரிமள
நிறையுறை மதுகர – நெடிதாடி
நிச்சிக் கச்சப் பட்டுச் சிக்கற்
றொப்புக் கொப்புக் குயர்வாகி
நெளித்த சுளித்த விழைக்கு ளழைத்துமை
நிகரென வகருவு முகுபுகை தொகுமிகு
நிகழ்புழு கொழுகிய – குழன்மேலும்
வச்ரப் பச்சைப் பொட்டிட் டப்பொட்
டுக்குட் செக்கர்ப் ப்ரபைபோல
வளைத்த தழைத்த பிறைக்கு முறைக்குமன்
மதசிலை யதுவென மகபதி தனுவென
மதிதில தமும்வதி – நுதன்மேலும்
மச்சச் செச்சைச் சித்ரச் சத்ரப்
பொற்பக் கத்திச் சையனாகி
மனத்தி னனைத்து மணைத்த துணைப்பத
மலரல திலைநிலை யெனமொழி தழியமெய்
வழிபட லொழிவனை – யருள்வாயே
நச்சுத் துச்சொப் பிச்சுக் குட்டத்
துட்டக் கட்டத் தசிகாண
நடத்தி விடத்தை யுடைத்த படத்தினில்
நடநவில் கடலிடை யடுபடை தொடுமுகில்
நகைமுக திருவுறை – மணிமார்பன்
நத்தத் தைச்சக் ரத்தைப் பத்மத்
தைக்கைப் பற்றிப் பொருமாய
னரிக்கு மரிக்கு மெரிக்கும் விருப்புற
நசிதரு நிசிசர ருடகுட லிடல்செய்த
நரகரி யொருதிரு – மருகோனே
கச்சுத் தச்சுப் பொற்கட் டிட்டுப்
பட்டுக் குட்பட் டமுதாலுங்
கருப்பி ரசத்து முருச்செய் துவைச்சிடு
கனதன பரிமள முழுகுப னிருபுய
கனகதி வியமணி – யணிமார்பா
கைச்சத் திக்குக் கெற்சித் தொக்கப்
பட்சிக் கக்கொட் டசுராதி
கறுத்த நிறத்த அரக்கர் குலத்தொடு
கறுவிய சிறியவ கடவைகள் புடைபடு
கடவட மலையுறை – பெருமாளே.
பதம் பிரித்தது
தத்தத் தத்தத் தத்தத் தத்தத்
தத்தத் தத்தத் தனதான
தனத்த தனத்த தனத்த தனத்தன
தனதன தனதன தனதன தனதன
தனதன தனதன – தனதான
நெச்சுப் பிச்சிப் புட்பத் தட்பக்
கச்சிக் கச்சுற்று அறல் மேவி
நெறித்து வெறித்து இருட்டை வெருட்டிய
நிரைதரு மருமலர் செருகிடு பரிமள
நிறையுறை மதுகர – நெடிது ஆடி
நி(ச்)சிக்கு அச்சப் பட்டுச் சிக்கற்று
ஒப்புக்கு ஒப்புக்கு உயர்வாகி
நெளித்த சுளித்த விழைக்குள் அழைத்து மை
நிகரென அகருவும் உகுபுகை தொகுமிகு
நிகழ் புழுகு ஒழுகிய – குழன்மேலும்
வச்ரப் பச்சைப் பொட்டு இட்ட
பொட்டுக்குள் செக்கர்ப் ப்ரபை போல
வளைத்த தழைத்த பிறைக்கும் உறைக்கும்
மன்மதசிலை அதுவென மகபதி தனுவென
மதி திலதமும் வதி – நுதன் மேலும்
மச்சச் செச்சைச் சித்ரச் சத்ரப்
பொன் பக்கத்து இச்சையனாகி
மனத்தின் அனைத்தும் அணைத்த துணைப் பத
மலர் அலது இலைநிலை எனமொழி தழிய மெய்
வழிபடல் ஒழிவனை – அருள்வாயே
நச்சுத் துச் சொப்பிச்சுக் குட்டத்துள்
தக்க அட்டத்து அசிகாண நடத்தி
விடத்தை யுடைத்த படத்தினில்
நட(ம்) நவில் கடலிடை அடுபடை தொடுமுகில்
நகைமுக திருவுறை – மணிமார்பன்
நத்தத்தைச் சக்ரத்தைப் பத்மத்தைக்
கைப் பற்றிப் பொரு மாயன்
நரிக்கும் அரிக்கும் எரிக்கும் விருப்புற
நசிதரு நிசிசரர் உட குடல் இடல் செய்த
நரகரி ஒரு திரு – மருகோனே
கச்சுத் தச்சுப் பொற்கட்டு இட்டுப்
பட்டுக்கு உட்பட்டு அமுது ஆலும்
கருப்பி(ன்) ரசத்தும் உருச்செய்து வைச்சிடு
கனதன பரிமள முழுகு ப(ன்)னிரு புய
கனக தி(வ்)விய மணி – அணிமார்பா
கைச் சத்திக்குக் கெற்சித்து ஒக்கப்
பட்சிக்கக் கொட்ட அசுராதி
கறுத்த நிறத்த அரக்கர் குலத்தொடு
கறுவிய சிறியவ கடவைகள் புடைபடு
கடவட மலையுறை – பெருமாளே.
English
necchup picchip putpath thatpak
kacchik kacchut RaRanmEvi
neRiththu veRiththu iruttai veruttiya
niraitharu marumalar serukidu parimaLa
niRaiyuRai mathukara – nedithAdi
nicchik kacchap pattuc chikkat
Roppuk koppuk kuyarvAki
neLiththa suLiththa vizhaikku Lazhaiththumai
nikarena vakaruvu mukupukai thokumiku
nikazhpuzhu kozhukiya – kuzhanmElum
vachrap pacchaip pottit tappot
tukkut chekkarp prapaipOla
vaLaiththa thazhaiththa piRaikku muRaikkuman
mathasilai yathuvena makapathi thanuvena
mathithila thamumvathi – nuthanmElum
macchac checchaic chithrac chathrap
poRpak kaththic chaiyanAki
manaththi nanaiththu maNaiththa thuNaippatha
malarala thilainilai yenamozhi thazhiyamey
vazhipada lozhivanai – yaruLvAyE
nacchuth thucchop picchuk kuttath
thuttak kattath thasikANa
nadaththi vidaththai yudaiththa padaththinil
nadanavil kadalidai yadupadai thodumukil
nakaimuka thiruvuRai – maNimArpan
naththath thaicchak raththaip pathmath
thaikkaip patRip porumAya
narikku marikku merikkum viruppuRa
nasitharu nisisara rudakuda lidalseytha
narakari yoruthiru – marukOnE
kacchuth thacchup poRkat tittup
pattuk kutpat tamuthAlum
karuppi rasaththu murucchey thuvaicchidu
kanathana parimaLa muzhukupa nirupuya
kanakathi viyamaNi – yaNimArpA
kaicchath thikkuk keRchith thokkap
patchik kakkot tasurAthi
kaRuththa niRaththa arakkar kulaththodu
kaRuviya siRiyava kadavaikaL pudaipadu
kadavada malaiyuRai – perumALE.
English Easy Version
necchup picchip putpath thatpak
kacchik kacchutRu aRal mEvi
neRiththu veRiththu iruttai veruttiya
niraitharu marumalar serukidu parimaLa
niRaiyuRai mathukara – nedithu Adi
ni(c)chikku acchap pattuc chikkatRu
oppukku oppukku uyarvAki
neLiththa suLiththa vizhaikkuL azhaiththu mai
nikarena akaruvum ukupukai thokumiku
nikazh puzhuku ozhukiya – kuzhanmElum
vachrap pacchaip pottu itta
pottukkuL sekkarp prapai pOla
vaLaiththa thazhaiththa piRaikkum uRaikkum
manmathachilai athuvena makapathi thanuvena
mathi thilathamum vathi – nuthan mElum
macchacc checchaic chithrac chathrap
pon pakkaththu icchaiyanAki
manaththin anaiththum aNaiththa thuNaip
pathamalar alathu ilainilai enamozhi thazhiya mey
vazhipadal ozhivanai – aruLvAyE
nacchuth thuc choppicchuk kuttaththuL
thakka attaththu asikANa
Nadaththi vidaththai yudaiththa padaththinil
nada(m)navil kadalidai adupadai thodumukil
nakaimuka thiruvuRai – maNimArpan
naththaththaic chakraththaip pathma
ththaik kaip patRip poru mAyan
narikkum arikkum erikkum viruppuRa
nasitharu nisisarar uda kudal idal seytha
narakari oru thiru – marukOnE
kacchuth thacchup poRkattu ittup
pattukku utpattu amuthu Alum
karuppi(n) rasaththum uruccheythu vaicchidu
kanathana parimaLa muzhuku pa(n)niru puya
kanaka thi(v)viya maNi – aNimArpA
kaic chaththikkuk keRchiththu okkap
patchikkak kotta asurAthi
kaRuththa niRaththa arakkar kulaththodu
kaRuviya siRiyava kadavaikaL pudaipadu
kadavada malaiyuRai – perumALE.