Thiruppugal 527 Kongkilaneerilaga
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தாந்தன தானதன தாந்தன தானதன
தாந்தன தானதன – தனதான
கோங்கிள நீரிளக வீங்குப யோதரமும்
வாங்கிய வேல்விழியும் – இருள்கூருங்
கூந்தலு நீள்வளைகொள் காந்தளு நூலிடையும்
மாந்தளிர் போல்வடிவும் – மிகநாடிப்
பூங்கொடி யார்கலவி நீங்கரி தாகிமிகு
தீங்குட னேயுழலும் – உயிர்வாழ்வு
பூண்டடி யேனெறியில் மாண்டிங னேநரகில்
வீழ்ந்தலை யாமலருள் – புரிவாயே
பாங்கியும் வேடுவரும் ஏங்கிட மாமுநியும்
வேங்கையு மாய்மறமி – னுடன்வாழ்வாய்
பாண்டவர் தேர்கடவும் நீண்டபி ரான்மருக
பாண்டிய னீறணிய – மொழிவோனே
வேங்கையும் வாரணமும் வேங்கையு மானும்வளர்
வேங்கட மாமலையி – லுறைவோனே
வேண்டிய போதடியர் வேண்டிய போகமது
வேண்டவெ றாதுதவு – பெருமாளே.
பதம் பிரித்தது
தாந்தன தானதன தாந்தன தானதன
தாந்தன தானதன – தனதான
கோங்கு இள நீர் இளக வீங்கு பயோதரமும்
வாங்கிய வேல் விழியும் – இருள் கூரும்
கூந்தலும் நீள் வளை கொள் காந்தளு(ம்) நூல் இடையும்
மாந்தளிர் போல் வடிவும் – மிக நாடி
பூங்கொடியார் கலவி நீங்க அரிதாகி மிகு
தீங்குடனே உழலும் – உயிர் வாழ்வு
பூண்டு அடியேன் எறியில் மாண்டு இ(ங்)ஙனே நரகில்
வீழ்ந்து அலையாமல் – அருள் புரிவாயே
பாங்கியும் வேடுவரும் ஏங்கிட மா முநியும்
வேங்கையுமாய் மற மி(ன்)னுடன் – வாழ்வாய்
பாண்டவர் தேர் கடவும் நீண்ட பிரான் மருக
பாண்டியன் நீறு அணிய – மொழிவோனே
வேங்கையும் வாரணமும் வேங்கையும் மானும் வளர்
வேங்கட மா மலையில் – உறைவோனே
வேண்டிய போது அடியர் வேண்டிய போகம் அது
வேண்ட வெறாது உதவு(ம்) – பெருமாளே.
English
kOngiLa neeriLaka veengupa yOtharamum
vAngiya vElvizhiyum – iruLkUrung
kUnthalu neeLvaLaikoL kAnthaLu nUlidaiyum
mAnthaLir pOlvadivum – mikanAdip
pUngodi yArkalavi neengari thAkimiku
theenguda nEyuzhalum – uyirvAzhvu
pUNdadi yEneRiyil mANdinga nEnarakil
veezhnthalai yAmalaruL – purivAyE
pAngiyum vEduvarum Engida mAmuniyum
vEngaiyu mAymaRami – nudanvAzhvAy
pANdavar thErkadavum neeNdapi rAnmaruka
pANdiya neeRaNiya – mozhivOnE
vEngaiyum vAraNamum vEngaiyu mAnumvaLar
vEngada mAmalaiyi – luRaivOnE
vENdiya pOthadiyar vENdiya pOkamathu
vENdave RAthuthavu – perumALE.
English Easy Version
kOngu iLa neer iLaka veengu payOtharamum
vAngiya vEl vizhiyum – iruL kUrum
kUnthalum neeL vaLai koL kAnthaLu(m) nUl idaiyum
mAnthaLir pOl vadivum – mika nAdi
pUngodiyAr kalavi neenga arithAki miku
theengudanE uzhalum – uyir vAzhvu
pUNdu adiyEn eRiyil mANdu i(ng)nganE narakil
veezhnthu alaiyAmal aruL – purivAyE
pAngiyum vEduvarum Engida mA muniyum
vEngaiyumAy maRa mi(n) – nudan vAzhvAy
pANdavar thEr kadavum neeNda pirAn maruka
pANdiyan neeRu aNiya – mozhivOnE
vEngaiyum vAraNamum vEngaiyum mAnum vaLar
vEngada mA malaiyil – uRaivOnE
vENdiya pOthu adiyar vENdiya pOkam athu
vENda veRAthu uthavu(m) – perumALE.