திருப்புகழ் 528 சாந்தமில் மோகவெரி (திருவேங்கடம்)

Thiruppugal 528 Sandhamilmogaveri

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தாந்தன தானதன தாந்தன தானதன
தாந்தன தானதன – தனதான

சாந்தமில் மோகவெரி காந்திய வாவனில
மூண்டவி யாதசம – யவிரோத

சாங்கலை வாரிதியை நீந்தவொ ணாதுலகர்
தாந்துணை யாவரென – மடவார்மேல்

ஏந்திள வார்முளரி சாந்தணி மார்பினொடு
தோய்ந்துரு காவறிவு – தடுமாறி

ஏங்கிட ஆருயிரை வாங்கிய காலன்வசம்
யான்தனி போய்விடுவ – தியல்போதான்

காந்தளி னானகர மான்தரு கானமயில்
காந்தவி சாகசர – வணவேளே

காண்டகு தேவர்பதி யாண்டவ னேசுருதி
யாண்டகை யேயிபமின் – மணவாளா

வேந்தகு மாரகுக சேந்தம யூரவட
வேங்கட மாமலையி – லுறைவோனே

வேண்டிய போதடியர் வேண்டிய போகமது
வேண்டவெ றாதுதவு – பெருமாளே.

பதம் பிரித்தது

தாந்தன தானதன தாந்தன தானதன
தாந்தன தானதன – தனதான

சாந்தமில் மோக எரி காந்தி அவாவனில
மூண்டு அவியாத – சமயவிரோத

சாங்கலை வாரிதியை நீந்தவொணாது உலகர்
தாந்துணை யாவரென – மடவார் மேல்

ஏந்திள வார்முளரி சாந்தணி மார்பினொடு
தோய்ந்து உருகா அறிவு – தடுமாறி

ஏங்கிட ஆருயிரை வாங்கிய காலன்வசம்
யான்தனி போய்விடுவது – இயல்போதான்

காந்தளின் ஆனகர மான்தரு கானமயில்
காந்த விசாக – சரவணவேளே

காண்டகு தேவர்பதி யாண்டவனே சுருதி
யாண்டகையே இபமின் – மணவாளா

வேந்த குமார குக சேந்த மயூர வட
வேங்கட மாமலையில் – உறைவோனே

வேண்டிய போதடியர் வேண்டிய போகமது
வேண்ட வெறாது உதவு – பெருமாளே

English

sAnthamil mOhaveri kAnthiya vavanila
mUNda viyAdha samaya – virOdha

sAngalai vAridhiyai neendhavo NAdhulagar
thAnthuNai yAvarena – madavArmEl

EndhiLa vArmuLari sAndhaNi mArbinodu
thOyndhurugA aRivu – thadumARi

Engida Aruyirai vAngiya kAlanvasam
yAnthani pOyviduva – dhiyalpOthAn

kAndhaLi nAnakara mAntharu kAnamayil
kAntha visAka sara – vaNavELE

kANdaku dhEvarpadhi ANdava nEsurudhi
ANdakai yEyibamin – maNavALA

vEndha kumAra guha sEndha mayUra vada
vEnkada mAmalaiyil – uRaivOnE

vENdiya pOdhadiyar vENdiya bOgamadhu
vENdave Radhudhavu – perumALE.

English Easy Version

sAnthamil mOhaveri kAnthi avavanila
mUNdu aviyAdha samaya – virOdha

sAngalai vAridhiyai neendhavoNAdhu
ulagar thAnthuNai yAvarena – madavArmEl

EndhiLa vArmuLari sAndhaNi mArbinodu
thOyndhurugA aRivu – thadumARi

Engida Aruyirai vAngiya kAlanvasam
yAnthani pOyviduva – dhiyalpOthAn

kAndhaLi nAnakara mAntharu kAnamayil
kAntha visAka – saravaNavELE

kANdaku dhEvarpadhi ANdavanE surudhi
ANdakaiyE yibamin – maNavALA

vEndha kumAra guha sEndha mayUra
vada vEnkada mAmalaiyil – uRaivOnE

vENdiya pOdhadiyar vENdiya bOgamadhu
vENda veRadhudhavu – perumALE.