Thiruppugazh 531 aiyumuRunOyum
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தய்யதன தான தய்யதன தான
தய்யதன தானத் – தனதான
ஐயுமுறு நோயு மையலும வாவி
னைவருமு பாயப் – பலநூலின்
அள்ளல்கட வாது துள்ளியதில் மாயு
முள்ளமுமில் வாழ்வைக் – கருதாசைப்
பொய்யுமக லாத மெய்யைவள ராவி
உய்யும்வகை யோகத் – தணுகாதே
புல்லறிவு பேசி யல்லல் படு வேனை
நல்லஇரு தாளிற் – புணர்வாயே
மெய்யபொழில் நீடு தையலைமு நாலு
செய்யபுய மீதுற் – றணைவோனே
வெள்ளையிப மேறு வள்ளல்கிளை வாழ
வெள்ளமுது மாவைப் – பொருதோனே
வையமுழு தாளு மையமயில் வீர
வல்லமுரு காமுத் – தமிழ்வேளே
வள்ளிபடர் சாரல் வள்ளிமலை மேவு
வள்ளிமண வாளப் – பெருமாளே.
பதம் பிரித்தது
தய்யதன தான தய்யதன தான
தய்யதன தானத் – தனதான
ஐயும் உறு நோயும் மையலும் அவாவின்
ஐவரும் உபாயப் – பலநூலின்
அள்ளல் கடவாது துள்ளியதில் மாயும்
உள்ளமும் இல் வாழ்வைக் – கருதாசைப்
பொய்யும் அகலாத மெய்யைவளர் ஆவி
உய்யும்வகை யோகத்து – அணுகாதே
புல்லறிவு பேசி யல்லல் படுவேனை
நல்லஇரு தாளிற் – புணர்வாயே
மெய்ய பொழில் நீடு தையலை மு(ந்)நாலு
செய்யபுய மீதுற்று – அணைவோனே
வெள்ளையிப மேறு வள்ளல்கிளை வாழ
வெள்ள முது மாவைப் – பொருதோனே
வையமுழுதாளும் ஐய மயில் வீர
வல்லமுருகா முத் – தமிழ்வேளே
வள்ளிபடர் சாரல் வள்ளிமலை மேவு
வள்ளிமணவாளப் – பெருமாளே.
English
aiyumuRu nOyu maiyalum avAvin
aivarumu bAyap – palanUlin
aLLalkada vAdhu thuLLiyadhil mAyum
uLLamumil vazhvaik – karudhAsaip
poyyumaga lAdha meiyyaivaLa rAvi
uyyumvagai yOghath – thaNugAdhE
pullaRivu pEsi allalpadu vEnai
nalla iru thALiR – puNarvAyE
meyyapozhil needu thaiyalaimu nAlu
seyyabuya meethutru – aNaivOnE
veLLaiyiba mERu vaLLalkiLai vAzha
veLLamudhu mAvaip – porudhOnE
vaiyyamuzhu dhALu maiyamayil veera
vallamuru gAmuth – thamizhvELE
vaLLipadar sAral vaLLimalai mEvu
vaLLimaNa vALap – perumALE
English Easy Version
aiyumuRu nOyu maiyalum avAvin
Aivarum ubAyap – palanUlin
aLLalkada vAdhu thuLLiyadhil mAyum
uLLamum il vazhvaik – karudhAsaip
poyyum aga lAdha meiyyaivaLar Avi
uyyumvagai yOghath – thaNugAdhE
pullaRivu pEsi allalpadu vEnai
nalla iru thALiR – puNarvAyE
meyya pozhil needu thaiyalai mu nAlu
seyyabuya meethutru – aNaivOnE
veLLaiyiba mERu vaLLalkiLai vAzha
veLLamudhu mAvaip – porudhOnE
vaiyyamuzhu dhALu maiyamayil veera
vallamuru gAmuth – thamizhvELE
vaLLipadar sAral vaLLimalai mEvu
vaLLimaNa vALap – perumALE