திருப்புகழ் 532 கை ஒத்து வாழும் (வள்ளிமலை)

Thiruppugal 532 Kaioththuvazhum

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தய்யத்த தான தந்த தய்யத்த தான தந்த
தய்யத்த தான தந்த – தனதான

கையொத்து வாழு மிந்த மெய்யொத்த வாழ்வி கந்து
பொய்யொத்த வாழ்வு கண்டு – மயலாகிக்

கல்லுக்கு நேரும் வஞ்ச வுள்ளத்தர் மேல்வி ழுந்து
கள்ளப்ப யோத ரங்க – ளுடன்மேவி

உய்யப்ப டாமல் நின்று கையர்க்கு பாய மொன்று
பொய்யர்க்கு மேய யர்ந்து – ளுடைநாயேன்

உள்ளப்பெ றாக நின்று தொய்யப்ப டாம லென்று
முள்ளத்தின் மாய்வ தொன்றை – மொழியாயோ

ஐயப்ப டாத ஐந்து பொய்யற்ற சோலை தங்கு
தெய்வத்தெய் வானை கொங்கை – புணர்வோனே

அல்லைப்பொ றாமு ழங்கு சொல்லுக்ர சேவ லொன்று
வெல்லப்ப தாகை கொண்ட – திறல்வேலா

வையத்தை யோடி யைந்து கையற்கு வீசு தந்தை
மெய்யொத்த நீதி கண்ட – பெரியோனே

வள்ளிக்கு ழாம டர்ந்த வள்ளிக்கல் மீது சென்று
வள்ளிக்கு வேடை கொண்ட – பெருமாளே.

பதம் பிரித்தது

தய்யத்த தான தந்த தய்யத்த தான தந்த
தய்யத்த தான தந்த – தனதான

கை ஒத்து வாழும் இந்த மெய் ஒத்த வாழ்வு இகந்து
பொய் ஒத்த வாழ்வு கண்டு – மயலாகி

கல்லுக்கு நேரும் வஞ்ச உள்ளத்தர் மேல் விழுந்து
கள்ளப் பயோதரங்கள் – உடன் மேவி

உய்யப் படாமல் நின்று கையர்க்கு உபாயம் ஒன்று
பொய்யர்க்குமே அயர்ந்து உள் – உடை நாயேன்

உள்ளப் பெறாக நின்று தொய்யப்படாமல் என்றும்
உள்ளத்தின் மாய்வது ஒன்றை – மொழியாயோ

ஐயப் படாத ஐந்து பொய் அற்ற சோலை தங்கு
தெய்வத் தெய்வானை கொங்கை – புணர்வோனே

அல்லைப் பொறா முழங்கு சொல் உக்ர சேவல் ஒன்று
வெல்லப் பதாகை கொண்ட – திறல் வேலா

வையத்தை ஓடி ஐந்து கையற்கு வீசு தந்தை
மெய் ஒத்த நீதி கண்ட – பெரியோனே

வள்ளிக் குழாம் அடர்ந்த வள்ளிக்கல் மீது சென்று
வள்ளிக்கு வேடை கொண்ட – பெருமாளே

English

kaiyoththu vAzhu mintha meyyoththa vAzhvi kanthu
poyyoththa vAzhvu kaNdu – mayalAki

kallukku nErum vanja vuLLaththar mElvi zhunthu
kaLLappa yOtha ranga – LudanmEvi

uyyappa dAmal ninRu kaiyarkku pAya monRu
poyyarkku mEya yarnthu – LudainAyEn

uLLappe RAka ninRu thoyyappa dAma lenRu
muLLaththin mAyva thonRai – mozhiyAyO

aiyappa dAtha ainthu poyyatRa sOlai thangu
theyvaththey vAnai kongai – puNarvOnE

allaippo RAmu zhangu sollukra sEva lonRu
vellappa thAkai koNda – thiRalvElA

vaiyaththai yOdi yainthu kaiyaRku veesu thanthai
meyyoththa neethi kaNda – periyOnE

vaLLikku zhAma darntha vaLLikkal meethu senRu
vaLLikku vEdai koNda – perumALE.

English Easy Version

kaiyoththu vAzhu mintha meyyoththa vAzhvi kanthu
poyyoththa vAzhvu kaNdu – mayalAki

kallukku nErum vanja vuLLaththar mElvi zhunthu
kaLLappa yOtha ranga – LudanmEvi

uyyappa dAmal ninRu kaiyarkku pAya monRu
poyyarkku mEya yarnthu – uLudainAyEn

uLLappe RAka ninRu thoyyappa dAma lenRum
uLLaththin mAyva thonRai – mozhiyAyO

aiyappa dAtha ainthu poyyatRa sOlai thangu
theyvaththey vAnai kongai – puNarvOnE

allaippo RAmu zhangu sollukra sEva lonRu
vellappa thAkai koNdathiRa – lvElA

vaiyaththai yOdi yainthu kaiyaRku veesu thanthai
meyyoththa neethi kaNda – periyOnE

vaLLikku zhAma darntha vaLLikkal meethu senRu
vaLLikku vEdai koNda – perumALE