திருப்புகழ் 533 முல்லைக்கும் மாரன் (வள்ளிமலை)

Thiruppugal 533 Mullaikkummaran

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தய்யத்த தான தந்த தய்யத்த தான தந்த
தய்யத்த தான தந்த – தனதான

முல்லைக்கு மார னங்கை வில்லுக்கு மாதர் தங்கள்
பல்லுக்கும் வாடி யின்ப – முயலாநீள்

முள்ளுற்ற கால்ம டிந்து கொள்ளிக்குள் மூழ்கி வெந்து
பள்ளத்தில் வீழ்வ தன்றி – யொருஞான

எல்லைக்கு மார ணங்கள் சொல்லித்தொ ழாவ ணங்கு
மெல்லைக்கும் வாவி நின்ற – னருள்நாமம்

எள்ளற்கு மால யர்ந்து வுள்ளத்தி லாவ என்று
முள்ளப்பெ றாரி ணங்கை – யொழிவேனோ

அல்லைக்க வானை தந்த வல்லிக்கு மார்பி லங்க
அல்லிக்கொள் மார்ப லங்கல் – புனைவோனே

அள்ளற்ப டாத கங்கை வெள்ளத்து வாவி தங்கி
மெள்ளச்ச ரோரு கங்கள் – பயில்நாதா

வல்லைக்கு மார கந்த தில்லைப்பு ராரி மைந்த
மல்லுப்பொ ராறி ரண்டு – புயவீரா

வள்ளிக்கு ழாம டர்ந்த வள்ளிக்கல் மீது சென்று
வள்ளிக்கு வேடை கொண்ட – பெருமாளே.

பதம் பிரித்தது

தய்யத்த தான தந்த தய்யத்த தான தந்த
தய்யத்த தான தந்த – தனதான

முல்லைக்கும் மாரன் அம் கை வில்லுக்கும் மாதர் தங்கள்
பல்லுக்கும் வாடி இன்பம் – முயலா நீள்

முள் உற்ற கால் மடிந்து கொள்ளிக்குள் மூழ்கி வெந்து
பள்ளத்தில் வீழ்வது அன்றி – ஒரு ஞான

எல்லைக்கும் ஆரணங்கள் சொல்லித் தொழா வணங்கும்
எல்லைக்கும் வாவி நின்றன் – அருள் நாமம்

எள்ளற்கு மால் அயர்ந்து உள்ளத்தில் ஆவ என்றும்
உள்ளப் பெறா இணங்கை – ஒழிவேனோ

அல்லைக்கு அவ் ஆனை தந்த வல்லிக்கு மார்பு இலங்க
அல்லிக் கொள் மார்பு அலங்கல் – புனைவோனே

அள்ளல் படாத கங்கை வெள்ளத்து வாவி தங்கி
மெள்ளச் சரோருகங்கள் – பயில் நாதா

வல்லைக் குமார கந்த தில்லைப் புராரி மைந்த
மல்லுப் பொரு ஆறிரண்டு – புய வீரா

வள்ளிக் குழாம் அடர்ந்த வள்ளிக் கல் மீது சென்று
வள்ளிக்கு வேடை கொண்ட – பெருமாளே

English

mullaikku mAra nangai villukku mAthar thangaL
pallukkum vAdi yinpa – muyalAneeL

muLLutRa kAlma dinthu koLLikkuL mUzhki venthu
paLLaththil veezhva thanRi – yorunjAna

ellaikku mAra NangaL solliththo zhAva Nangu
mellaikkum vAvi ninRa – naruLnAmam

eLLaRku mAla yarnthu vuLLaththi lAva enRum
uLLappe RAri Nangai – yozhivEnO

allaikka vAnai thantha vallikku mArpi langa
allikkoL mArpa langal – punaivOnE

aLLaRpa dAtha gangai veLLaththu vAvi thangi
meLLaccha rOru kangaL – payilnAthA

vallaikku mAra kantha thillaippu rAri maintha
malluppo rARi raNdu – puyaveerA

vaLLikku zhAma darntha vaLLikkal meethu senRu
vaLLikku vEdai koNda – perumALE.

English Easy Version

mullaikkum mAran am kai villukkum mAthar thangaL
pallukkum vAdi inpam – muyalA neeL

muL utRa kAl madinthu koLLikkuL mUzhki venthu
paLLaththil veezhvathu anRi – oru njAna

ellaikkum AraNangaL sollith thozhA vaNangum
ellaikkum vAvi ninRan – aruL nAmam

eLLaRku mAl ayarnthu uLLaththil Ava enRum
uLLap peRA iNangai – ozhivEnO

allaikku av Anai thantha vallikku mArpu ilanga
allik koL mArpu alangal – punaivOnE

aLLal padAtha gangkai veLLaththu vAvi thangi
meLLac carOrukangaL – payil nAthA

vallaik kumAra kantha thillaip purAri maintha
mallup poru ARiraNdu – puya veerA

vaLLik kuzhAm adarntha vaLLik kal meethu senRu
vaLLikku vEdai koNda perumALE