திருப்புகழ் 534 கள்ளக் குவால் பை (வள்ளிமலை)

Thiruppugal 534 Kallakkuvalpai

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தய்யத்த தாத்த தய்யத்த தாத்த
தய்யத்த தாத்த – தனதான

கள்ளக்கு வாற்பை தொள்ளைப்பு லாற்பை
துள்ளிக்க னார்க்க – யவுகோப

கள்வைத்த தோற்பை பொள்ளுற்ற காற்பை
கொள்ளைத்து ராற்பை – பசுபாச

அள்ளற்பை மாற்பை ஞெள்ளற்பை சீப்பை
வெள்ளிட்ட சாப்பி – சிதமீரல்

அள்ளச்சு வாக்கள் சள்ளிட்டி ழாப்பல்
கொள்ளப்ப டாக்கை – தவிர்வேனோ

தெள்ளத்தி சேர்ப்ப வெள்ளத்தி மாற்கும்
வெள்ளுத்தி மாற்கு – மருகோனே

சிள்ளிட்ட காட்டி லுள்ளக்கி ரார்க்கொல்
புள்ளத்த மார்க்கம் – வருவோனே

வள்ளிச்சன் மார்க்கம் விள்ளைக்கு நோக்க
வல்லைக்கு ளேற்று – மிளையோனே

வள்ளிக்கு ழாத்து வள்ளிக்கல் காத்த
வள்ளிக்கு வாய்த்த – பெருமாளே.

பதம் பிரித்தது

தய்யத்த தாத்த தய்யத்த தாத்த
தய்யத்த தாத்த – தனதான

கள்ளக் குவால் பை தொள்ளைப் புலால் பை
துள் இக்கனார்க்கு – அயவு கோப

கள் வைத்த தோல் பை பொள்ளுற்ற கால் பை
கொள்ளைத் துரால் பை – பசு பாச

அள்ளல் பை மால் பை ஞெள்ளல் பை சீப் பை
வெள்ளிட்ட அசா – பிசிதம் ஈரல்

அள்ளச் சுவாக்கள் சள்ளிட்டு இழா பல்
கொள்ளப்படு யாக்கை – தவிர்வேனோ

தெள் அத்தி சேர்ப்ப வெள் அத்தி மாற்கும்
வெள் உத்தி மாற்கும் – மருகோனே

சிள் இட்ட காட்டில் உள்ளக் கிரார் கொல்
புள் அத்த மார்க்கம் – வருவோனே

வள்ளிச் சன்மார்க்கம் விள் ஐக்கு நோக்க
வல்லைக்குள் ஏற்றும் – இளையோனே

வள்ளிக் குழாத்து வள்ளிக் கல் காத்த
வள்ளிக்கு வாய்த்த – பெருமாளே

English

kaLLakku vARpai thoLLaippu lARpai
thuLLikka nArkka – yavukOpa

kaLvaiththa thORpai poLLutRa kARpai
koLLaiththu rARpai – pasupAsa

aLLaRpai mARpai njeLLaRpai seeppai
veLLitta sAppi – sithameeral

aLLacchu vAkkaL caLLitti zhAppal
koLLappa dAkkai – thavirvEnO

theLLaththi sErppa veLLaththi mARkum
veLLuththi mARku – marukOnE

ciLLitta kAtti luLLakki rArkkol
puLLaththa mArkkam – varuvOnE

vaLLicchan mArkkam viLLaikku nOkka
vallaikku LEtRu – miLaiyOnE

vaLLikku zhAththu vaLLikkal kAththa
vaLLikku vAyththa – perumALE.

English Easy Version

kaLLak kuvAl pai thoLLaip pulAl pai
thuL ikkanArkku – ayavu kOpa

kaL vaiththa thOl pai poLLutRa kAl pai
koLLaith thurAl pai – pasu pAsa

aLLal pai mAl pai njeLLal pai seep pai
veLLitta asA pisitham – eeral

aLLac cuvAkkaL saLLittu izhA pal
koLLappadu yAkkai – thavirvEnO

theL aththi sErppa veL aththi mARkum
veL uththi mARkum – marukOnE

siL itta kAttil uLLak kirAr kol
puL aththa mArkkam – varuvOnE

vaLLis sanmArkkam* viL aikku nOkka
vallaikkuL EtRum – iLaiyOnE

vaLLik kuzhAththu vaLLik kal kAththa
vaLLikku vAyththa – perumALE.