திருப்புகழ் 537 அல் அசல் அடைந்த (வள்ளிமலை)

Thiruppugal 537 Alasaladaindha

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தய்யதன தந்த தய்யதன தந்த
தய்யதன தந்த – தனதான

அல்லசல டைந்த வில்லடல நங்கன்
அல்லிமல ரம்பு – தனையேவ

அள்ளியெரி சிந்த பிள்ளைமதி தென்ற
லையமது கிண்ட – அணையூடே

சொல்லுமர விந்த வல்லிதனி நின்று
தொல்லைவினை யென்று – முனியாதே

துய்யவரி வண்டு செய்யமது வுண்டு
துள்ளியக டம்பு – தரவேணும்

கல்லசல மங்கை யெல்லையில்வி ரிந்த
கல்விகரை கண்ட – புலவோனே

கள்ளொழுகு கொன்றை வள்ளல்தொழ அன்று
கல்லலற வொன்றை – யருள்வோனே

வல்லசுர ரஞ்ச நல்லசுரர் விஞ்ச
வல்லமைதெ ரிந்த – மயில்வீரா

வள்ளிபடர் கின்ற வள்ளிமலை சென்று
வள்ளியைம ணந்த – பெருமாளே.

பதம் பிரித்தது

தய்யதன தந்த தய்யதன தந்த
தய்யதன தந்த – தனதான

அல் அசல் அடைந்த வில் அடல் அநங்கன்
அல்லி மலர் அம்பு – தனை ஏவ

பிள்ளை மதி அள்ளி எரி சிந்த தென்றல்
ஐயம் அது கிண்ட – அணையூடே

சொல்லும் அரவிந்த வல்லி தனி நின்று
தொல்லை வினை என்று – முனியாதே

துய்ய வரி வண்டு செய்ய மது உண்டு
துள்ளிய கடம்பு – தரவேணும்

கல் அசல மங்கை எல்லையில் விரிந்த
கல்வி கரை கண்ட – புலவோனே

கள் ஒழுகு கொன்றை வள்ளல் தொழ அன்று
கல்லல் அற ஒன்றை – அருள்வோனே

வல் அசுரர் அஞ்ச நல்ல சுரர் விஞ்ச
வல்லமை தெரிந்த – மயில் வீரா

வள்ளி படர்கின்ற வள்ளி மலை சென்று
வள்ளியை மணந்த – பெருமாளே

English

allasala daintha villadala nangan
allimala rampu – thanaiyEva

aLLiyeri sintha piLLaimathi thenRa
laiyamathu kiNda – aNaiyUdE

sollumara vintha vallithani ninRu
thollaivinai yenRu – muniyAthE

thuyyavari vaNdu seyyamathu vuNdu
thuLLiyaka dampu – tharavENum

kallasala mangai yellaiyilvi rintha
kalvikarai kaNda – pulavOnE

kaLLozhuku konRai vaLLalthozha anRu
kallalaRa vonRai – yaruLvOnE

vallasura ranja nallasurar vinja
vallamaithe rintha – mayilveerA

vaLLipadar kinRa vaLLimalai senRu
vaLLiyaima Nantha – perumALE.

English Easy Version

al asal adaintha vil adal anangan
alli malar ampu – thanai Eva

piLLai mathi aLLi eri sintha thenRal
aiyam athu kiNda – aNaiyUdE

sollum aravintha valli thani ninRu
thollai vinai enRu – muniyAthE

thuyya vari vaNdu seyya mathu uNdu
thuLLiya kadampu – tharavENum

kal asala mangai ellaiyil virintha
kalvi karai kaNda – pulavOnE

kaL ozhuku konRai vaLLal thozha anRu
kallal aRa onRai – aruLvOnE

val asurar anja nalla surar vinja
vallamai therintha – mayil veerA

vaLLi padarkinRa vaLLi malai senRu
vaLLiyai maNantha – perumALE