திருப்புகழ் 539 சிரம் அங்கம் அம் கை (வள்ளிமலை)

Thiruppugal 539 Siramangkamamkai

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதந்த தந்தனம் தனதந்த தந்தனம்
தனதந்த தந்தனம் – தனதான

சிரமங்க மங்கைகண் செவிவஞ்ச நெஞ்சுசெஞ்
சலமென்பு திண்பொருந் – திடுமாயம்

சிலதுன்ப மின்பமொன் றிறவந்து பின்புசெந்
தழலிண்கண் வெந்துசிந் – திடஆவி

விரைவின்க ணந்தகன் பொரவந்த தென்றுவெந்
துயர்கொண்ட லைந்துலைந் – தழியாமுன்

வினையொன்று மின்றிநன் றியலொன்றி நின்பதம்
வினவென்று அன்புதந் – தருள்வாயே

அரவின்கண் முன்துயின் றருள்கொண்ட லண்டர்கண்
டமரஞ்ச மண்டிவந் – திடுசூரன்


அகலம்பி ளந்தணைந் தகிலம்ப ரந்திரங்
கிடஅன்று டன்றுகொன் – றிடும்வேலா

மரைவெங்க யம்பொருந் திடவண்டி னங்குவிந்
திசையொன்ற மந்திசந் – துடனாடும்

வரையின்கண் வந்துவண் குறமங்கை பங்கயம்
வரநின்று கும்பிடும் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதந்த தந்தனம் தனதந்த தந்தனம்
தனதந்த தந்தனம் – தனதான

சிரம் அங்கம் அம் கை கண் செவி வஞ்ச நெஞ்சு செம்சலம்
என்பு திண் பொருந்திடு – மாயம்

சில துன்பம் இன்பம் ஒன்றி இற வந்து பின்பு செம்
தழலின் கண் வெந்து சிந்திட – ஆவி

விரைவின் கண் அந்தகன் பொர வந்தது என்று வெம்
துயர் கொண்டு அலைந்து – அழியா முன்

வினை ஒன்றும் இன்றி நன்று இயல் ஒன்றி நின் பதம்
வினவ என்று அன்பு தந்து – அருள்வாயே

அரவின் கண் முன் துயின்று அருள் கொண்டல் அண்டர்கண்டு
அமர் அஞ்ச மண்டி – வந்திடு சூரன்

அகலம் பிளந்து அணைந்து அகிலம் பரந்து இரங்கிட
அன்று உடன்று கொன்றிடும் – வேலா

மரை வெம் கயம் பொருந்திட வண்டு இனம் குவிந்து
இசை ஒன்ற மந்தி சந்துடன் – ஆடும்

வரையின் கண் வந்து வண் குற மங்கை பங்கயம்
வர நின்று கும்பிடும் – பெருமாளே,

English

siramangka mangkaikaN sevivanja nenjusem
calamenpu thiNporun – thidumAyam

silathunpa minpamon RiRavanthu pinpusen
thazhaliNkaN venthusin – thidaAvi

viraivinka Nanthakan poravantha thenRuven
thuyarkoNda lainthulain – thazhiyAmun

vinaiyonRu minRinan RiyalonRi ninpatham
vinavenRu anputhan – tharuLvAyE

aravinkaN munthuyin RaruLkoNda laNdarkaN
damaranja maNdivan – thiducUran

akalampi LanthaNain thakilampa ranthirang
kida anRu danRukon – RidumvElA

maraivenga yamporun thidavaNdi nanguvin
thisaiyonRa manthisan – thudanAdum

varaiyinkaN vanthuvaN kuRamangai pangayam
varaninRu kumpidum – perumALE.

English Easy Version

siram angam am kai kaN sevi vanja nenju
semcalam enpu thiN porunthidu – mAyam

sila thunpam inpam onRi iRa vanthu pinpu sem
thazhalin kaN venthu – sinthida Avi

Viraivin kaN anthakan pora vanthath enRu ven
Thuyar koNdalainthu – lainthazhiyAmun

vinai onRum inRi nanRu iyal onRi nin patham
vinava enRu anpu thanthu – aruLvAyE

aravin kaN mun thuyinRu aruL koNdal aNdarkaNdu
amar anja maNdi – vanthidu cUran

akalam piLanthu aNainthu akilam paranthu irangida
anRu udanRu – konRidum vElA

marai vem kayam porunthida vaNdu inam kuvinthu
isai onRa manthi santhudan – Adum

varaiyin kaN vanthu vaN kuRa mangai pangayam
vara ninRu kumpidum – perumALE.