திருப்புகழ் 540 வரைவில் பொய் (வள்ளிமலை)

Thiruppugal 540 Varaivilpoi

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதன தந்தன தந்த தந்தன
தனதன தந்தன தந்த தந்தன
தனதன தந்தன தந்த தந்தன – தனதான

வரைவில்பொய் மங்கையர் தங்க ளஞ்சன
விழியையு கந்துமு கந்து கொண்டடி
வருடிநி தம்பம ளைந்து தெந்தென – அளிகாடை

மயில்குயி லன்றிலெ னும்பு ளின்பல
குரல்செய்தி ருந்துபி னுந்தி யென்கிற
மடுவில்வி ழுந்துகி டந்து செந்தழல் – மெழுகாகி

உருகியு கந்திதழ் தின்று மென்றுகை
யடியின கங்கள்வ ரைந்து குங்கும
உபயத னங்கள்த தும்ப அன்புட – னணையாமஞ்

சுலவிய கொண்டைகு லைந்த லைந்தெழ
அமளியில் மின்சொல்ம ருங்கி லங்கிட
உணர்வழி யின்பம றந்து நின்றனை – நினைவேனோ

விரவி நெருங்குகு ரங்கி னங்கொடு
மொகுமொகெ னுங்கட லுங்க டந்துறு
விசைகொடி லங்கைபு குந்த ருந்தவர் – களிகூர

வெயில்நில வும்பரு மிம்ப ரும்படி
ஜெயஜெய வென்றுவி டுங்கொ டுங்கணை
விறல்நிரு தன்தலை சிந்தி னன்திரு – மருகோனே

அருகர்க ணங்கள்பி ணங்கி டும்படி
மதுரையில் வெண்பொடி யும்ப ரந்திட
அரகர சங்கர வென்று வென்றருள் – புகழ்வேலா

அறம்வளர் சுந்தரி மைந்த தண்டலை
வயல்கள்பொ ருந்திய சந்த வண்கரை
யரிவைவி லங்கலில் வந்து கந்தருள் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதன தந்தன தந்த தந்தன
தனதன தந்தன தந்த தந்தன
தனதன தந்தன தந்த தந்தன – தனதான

வரைவில் பொய் மங்கையர் தங்கள் அஞ்சன
விழியை உகந்து முகந்து கொண்டு அடி
வருடி நிதம்பம் அளைந்து தெந்தென – அளிகாடை

மயில் குயில் அன்றில் எனும் பு(ள்)ளின் பல
குரல் செய்து இருந்து பின் உந்தி என்கிற
மடுவில் விழுந்து கிடந்து செம் தழல் – மெழுகாகி

உருகி உகந்து இதழ் தின்று மென்று
கையடியில் நகங்கள் வரைந்து குங்கும
உபய தனங்கள் ததும்ப அன்புடன் – அணையா மஞ்சு

உலவிய கொண்டை குலைந்து அலைந்து எழ
அமளியில் மின் சொல் மருங்குல் இலங்கிட
உணர்வு அழி இன்பம் மறந்து நின் தனை – நினைவேனோ

விரவி நெருங்கு குரங்கு இனம் கொடு
மொகுமொகு எனும் கடலும் கடந்து உறு
விசை கொடு இலங்கை புகுந்து அரும் தவர் – களி கூர

வெயில் நிலவு உம்பரும் இம்பரும் படி
ஜெயஜெய என்று விடும் கொடும் கணை
விறல் நிருதன் தலை சிந்தினன் திரு – மருகோனே

அருகர் கணங்கள் பிணங்கிடும்படி
மதுரையில் வெண் பொடியும் பரந்திட
அரகர சங்கர என்று வென்று அருள் – புகழ் வேலா

அறம் வளர் சுந்தரி மைந்த தண்டலை
வயல்கள் பொருந்திய சந்த வண் கரை
அரிவை விலங்கலில் வந்து உகந்து அருள் – பெருமாளே.

English

varaivilpoi mangaiyar thanga Lanjana
vizhiyaiyu kanthumu kanthu koNdadi
varudini thampama Lainthu thenthena – aLikAdai

mayilkuyi lanRile numpu Linpala
kuralseythi runthupi nunthi yenkiRa
maduvilvi zhunthuki danthu senthazhal – mezhukAki

urukiyu kanthithazh thinRu menRukai
yadiyina kangaLva rainthu kunguma
upayatha nangaLtha thumpa anpuda – naNaiyAmanj

chulaviya koNdaiku laintha lainthezha
amaLiyil minsolma rungi langida
uNarvazhi yinpama Ranthu ninRanai – ninaivEnO

viravi nerunguku rangi nangodu
mokumoke nungada lumka danthuRu
visaikodi langaipu kuntha runthavar – kaLikUra

veyilnila vumparu mimpa rumpadi
jeyajeya venRuvi dumko dumkaNai
viRalniru thanthalai sinthi nanthiru – marukOnE

arukarka NangaLpi Nangi dumpadi
mathuraiyil veNpodi yumpa ranthida
arakara sankara venRu venRaruL – pukazhvElA

aRamvaLar sunthari maintha thaNdalai
vayalkaLpo runthiya santha vaNkarai
yarivaivi langalil vanthu kantharuL – perumALE.

English Easy Version

varaivil poi mangaiyar thangaL anjana
vizhiyai ukanthu mukanthu koNdu adi
varudi nithampam aLainthu thenthena – aLikAdai

mayil kuyil anRil enum pu(L)Lin pala
kural seythu irunthu pin unthi enkiRa
maduvil vizhunthu kidanthu sem thazhal – mezhukAki

uruki ukanthu ithazh thinRu menRu kaiyadiyil
nakangaL varainthu kunguma
upaya thanangaL thathumpa anpudan – aNaiyA manju

ulaviya koNdai kulainthu alainthu ezha
amaLiyil min sol marungul ilangida
uNarvu azhi inpam maRanthu nin thanai – ninaivEnO

viravi nerungu kurangu inam kodu
mokumoku enum kadalum kadanthu uRu
visai kodu ilangai pukunthu arum thavar – kaLi kUra

veyil nilavu umparum imparum padi
jeyajeya enRu vidum kodum kaNai
viRal niruthan thalai sinthinan thiru – marukOnE

arukar kaNangaL piNangidumpadi
mathuraiyil veN podiyum paranthida
arakara sangara enRu venRu aruL – pukazh vElA

aRam vaLar sunthari maintha thaNdalai
vayalkaL porunthiya santha vaN karai
arivai vilangalil vanthu ukanthu aruL – perumALE