திருப்புகழ் 541 அகத்தினைக் கொண்டு (திருக்கழுக்குன்றம்)

Thiruppugal 541 Agaththinaikkondu

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனத்த தத்தம் தத்தன தானன
தனத்த தத்தம் தத்தன தானன
தனத்த தத்தம் தத்தன தானன தனதான

அகத்தி னைக்கொண் டிப்புவி மேல்சில
தினத்து மற்றொன் றுற்றறி யாதுபின்
அவத்துள் வைக்குஞ் சித்தச னாரடு கணையாலே

அசுத்த மைக்கண் கொட்புறு பாவையர்
நகைத்து ரைக்கும் பொய்க்கடல் மூழ்கியெ
அலக்க ணிற்சென் றுத்தடு மாறியெ சிலநாள்போய்

இகத்தை மெய்க்கொண் டிப்புவி பாலர்பொன்
மயக்கி லுற்றம் பற்றைவி டாதுட
லிளைப்பி ரைப்பும் பித்தமு மாய்நரை முதிர்வாயே

எமக்க யிற்றின் சிக்கினி லாமுனுன்
மலர்ப்ப தத்தின் பத்திவி டாமன
திருக்கு நற்றொண் டர்க்கிணை யாகவு னருள்தாராய்


புகழ்ச்சி லைக்கந் தர்ப்பனு மேபொடி
படச்சி ரித்தண் முப்புர நீறுசெய்
புகைக்க னற்கண் பெற்றவர் காதலி யருள்பாலா

புவிக்குள் யுத்தம் புத்திரர் சேயர
சனைத்து முற்றுஞ் செற்றிட வேபகை
புகட்டி வைக்குஞ் சக்கிர பாணிதன் மருகோனே

திகழ்க்க டப்பம் புட்பம தார்புய
மறைத்து ருக்கொண் டற்புத மாகிய
தினைப்பு னத்தின் புற்றுறை பாவையை யணைசீலா


செகத்தி லுச்சம் பெற்றம ராவதி
யதற்கு மொப்பென் றுற்றழ கேசெறி
திருக்க ழுக்குன் றத்தினில் மேவிய பெருமாளே.

பதம் பிரித்தது

தனத்த தத்தம் தத்தன தானன
தனத்த தத்தம் தத்தன தானன
தனத்த தத்தம் தத்தன தானன தனதான

அகத்தினைக் கொண்டு இப்புவி மேல் சில
தினத்து மற்று ஒன்று உற்று அறியாது பின்
அவத்துள் வைக்கும் சித்தசனார் அடு – கணையாலே

அசுத்த மைக் கண் கொட்பு உறு பாவையர்
நகைத்து உரைக்கும் பொய்க்கடல் மூழ்கியெ
அலக்க(ண்)ணில் சென்றுத் தடுமாறியெ – சில நாள் போய்

இகத்தை மெய்க் கொண்டு இப்புவி பாலர் பொன்
மயக்கில் உற்று அம் பற்றை விடாது உடலில்
இளைப்பு இரைப்பும் பித்தமுமாய் நரை – முதிர்வா(கி)யே

எமக் கயிற்றின் சிக்கி நி(ல்)லா முன்
உன் மலர்ப் பதத்தின் பத்தி விடா மனது
இருக்கு(ம்) நல் தொண்டர்க்கு இணையாக உன் – அருள் தாராய்

புகழ்ச் சிலைக் கந்தர்ப்பனுமே பொடி
படச் சிரித்து அண் முப்புர(ம்) நீறு செய்
புகைக் கனல் கண் பெற்றவர் காதலி – அருள் பாலா

புவிக்குள் யுத்தம் புத்திரர் சேய் அரசு
அனைத்து(ம்) முற்றும் செற்றிடவே பகை
புகட்டி வைக்கும் சக்கிர பாணி தன் – மருகோனே

திகழ்க் கடப்பம் புட்பமது ஆர் புய(ம்)
மறைத்து உருக் கொண்ட அற்புதமாகிய
தினைப் புனத்து இன்புற்று உறை பாவையை – அணை சீலா

செகத்தில் உச்சம் பெற்ற அமராவதி
அதற்கும் ஒப்ப என்று அழகே செறி
திருக் கழுக் குன்றத்தினில் மேவிய – பெருமாளே

English

akaththi naikkoN dippuvi mElsila
thinaththu matRon RutRaRi yAthupin
avaththuL vaikkum chiththasa nAradu kaNaiyAlE

asuththa maikkaN kotpuRu pAvaiyar
nakaiththu raikkum poykkadal mUzhkiye
alakka NiRchen Ruththadu mARiye silanALpOy

ikaththai meykkoN dippuvi pAlarpon
mayakki lutRam patRaivi dAthuda
liLaippi raippum piththamu mAynarai muthirvAyE

emakka yitRin sikkini lAmunun
malarppa thaththin paththivi dAmana
thirukku natRoN darkkiNai yAkavu naruLthArAy

pukazhcchi laikkan tharppanu mEpodi
padacchi riththaN muppura neeRusey
pukaikka naRkaN petRavar kAthali yaruLbAlA

puvikkuL yuththam puththirar sEyara
sanaiththu mutRum chetRida vEpakai
pukatti vaikkum chakkira pANithan marukOnE

thikazhkka dappam putpama thArpuya
maRaiththu rukkoN daRputha mAkiya
thinaippu naththin putRuRai pAvaiyai yaNaiseelA

sekaththi luccham petRama rAvathi
yathaRku moppen RutRazha kEseRi
thirukka zhukkun Raththinil mEviya perumALE.

English Easy Version

akaththinaik koNdu ippuvi mEl sila
thinaththu matRu onRu utRu aRiyAthu pin
avaththuL vaikkum siththasanAr adu – kaNaiyAlE

asuththa maik kaN kodpu uRu pAvaiyar
nakaiththu uraikkum poykkadal mUzhkiye
alakka(N)Nil senRuth thadumARiye – sila nAL pOy

ikaththai meyk koNdu ippuvi pAlar pon
mayakkil utRu am patRai vidAthu udalil
iLaippu iraippum piththamumAy narai – muthirvA(ki)yE

emak kayitRin sikki ni(l)lA mun un
malarp pathaththin paththi vidA manathu
irukku(m) nal thoNdarkku iNaiyAka un – aruL thArAy

pukazhc chilaik kantharppanumE podi
padac chiriththu aN muppura(m) neeRu sey
pukaik kanal kaN petRavar kAthali – aruL pAlA

puvikkuL yuththam puththirar sEy arasu
anaiththu(m) mutRum setRidavE pakai
pukatti vaikkum sakkira pANi than – marukOnE

thikazhk kadappam pudpamathu Ar puya(m)
maRaiththu uruk koNda aRputhamAkiya
thinaip punaththu inputRu uRai pAvaiyai – aNai seelA

sekaththil uccham petRa amarAvathi
athaRkum oppa enRu azhakE seRi
thiruk kazhuk kunRaththinil mEviya – perumALE