Thiruppugal 543 Olamittasurumbu
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தான தத்த தனந்த தனா தனாதன
தான தத்த தனந்த தனா தனாதன
தான தத்த தனந்த தனா தனாதன தனனதான
ஓல மிட்ட சுரும்பு தனா தனாவென
வேசி ரத்தில் விழுங்கை பளீர் பளீரென
வோசை பெற்ற சிலம்பு கலீர் கலீரென விரகலீலை
ஓர்மி டற்றி லெழும்புள் குகூ குகூவென
வேர்வை மெத்த வெழுந்து சலா சலாவென
ரோம குச்சு நிறைந்து சிலீர் சிலீரென அமுதமாரன்
ஆல யத்து ளிருந்து குபீர் குபீரென
வேகு திக்க வுடம்பு விரீர் விரீரென
ஆர முத்த மணிந்து அளா வளாவென மருவுமாதர்
ஆசை யிற்கை கலந்து சுமா சுமாபவ
சாக ரத்தி லழுந்தி எழா எழாதுளம்
ஆறெ ழுத்தை நினைந்து குகா குகாவென வகைவராதோ
மாலை யிட்ட சிரங்கள் செவேல் செவேலென
மேலெ ழுச்சி தரும்பல் வெளேல் வெளேலென
வாகை பெற்ற புயங்கள் கறேல் கறேலென எதிர்கொள்சூரன்
மார்பு மொக்க நெரிந்து கரீல் கரீலென
பேய்கு திக்க நிணங்கள் குழூ குழூவென
வாய்பு தைத்து விழுந்து ஐயோ ஐயோவென உதிரமாறாய்
வேலை வற்றி வறண்டு சுறீல் சுறீலென
மாலை வெற்பு மிடிந்து திடீல் திடீலென
மேன்மை பெற்ற ஜனங்கள் ஐயா ஐயாவென விசைகள்கூற
வேலெ டுத்து நடந்த திவா கராசல
வேடு வப்பெண் மணந்த புயா சலாதமிழ்
வேத வெற்பி லமர்ந்த க்ருபா கராசிவ குமரவேளே.
பதம் பிரித்தது
தான தத்த தனந்த தனா தனாதன
தான தத்த தனந்த தனா தனாதன
தான தத்த தனந்த தனா தனாதன தனனதான
ஓலம் இட்ட சுரும்பு தனா தனா எனவே
சிரத்தில் விழும் கை பளீர் பளீர் என
ஓசை பெற்ற சிலம்பு கலீர் கலீர் என – விரக லீலை
ஓர் மிடற்றில் எழும் புள் குகூ குகூ என
வேர்வை மெத்த எழுந்து சலா சலா என
ரோம குச்சு நிறைந்து சிலீர் சிலீர் என – அமுதமாரன்
ஆலயத்துள் இருந்து குபீர் குபீர் எனவே
குதிக்க உடம்பு விரீர் விரீர் என
ஆர முத்தம் அணிந்து அளா அளா என – மருவு மாதர்
ஆசையில் கை கலந்து சுமா சுமா பவ
சாகரத்தில் அழுந்தி எழா எழாது உளம்
ஆறு எழுத்தை நினைந்து குகா குகா என – வகை வராதோ
மாலை இட்ட சிரங்கள் செவேல் செவேல் என
வேல் எழுச்சி தரும் பல் வெளேல் வெளேல் என
வாகை பெற்ற புயங்கள் கறேல் கறேல் என – எதிர் கொள் சூரன்
மார்பும் ஒக்க நெரிந்து கரீல் கரீல் என
பேய் குதிக்க நிணங்கள் குழூ குழூ என
வாய் புதைத்து விழுந்து ஐயோ ஐயோ என – உதிரம் ஆறாய்
வேலை வற்றி வறண்டு சுறீல் சுறீல் என
மாலை வெற்பும் இடிந்து திடீல் திடீல் என
மேன்மை பெற்ற ஜனங்கள் ஐயா ஐயா என – இசைகள் கூற
வேல் எடுத்து நடந்த திவாகரா அசல
வேடுவப் பெண் மணந்த புய அசலா தமிழ்
வேத வெற்பில் அமர்ந்த க்ருபாகரா சிவ – குமர வேளே
English
Ola mitta surumpu thanA thanAvena
vEsi raththil vizhungkai paLeer paLeerena
vOsai petRa silampu kaleer kaleerena virakaleelai
Ormi datRi lezhumpuL kukU kukUvena
vErvai meththa vezhunthu salA salAvena
rOma kucchu niRainthu sileer sileerena amuthamAran
Ala yaththu Lirunthu kupeer kupeerena
vEku thikka vudampu vireer vireerena
Ara muththa maNinthu aLA vaLAvena maruvumAthar
Asai yiRkai kalanthu sumA sumApava
sAka raththi lazhunthi ezhA ezhAthuLam
ARe zhuththai ninainthu kukA kukAvena vakaivarAthO
mAlai yitta sirangaL sevEl sevElena
mEle zhucchi tharumpal veLEl veLElena
vAkai petRa puyangaL kaREl kaRElena ethirkoLcUran
mArpu mokka nointhu kareel kareelena
pEyku thikka niNangaL kuzhU kuzhUvena
vAypu thaiththu vizhunthu aiyO aiyOvena uthiramARAy
vElai vatRi vaRaNdu suReel suReelena
mAlai veRpu midinthu thideel thideelena
mEnmai petRa janangaL aiyA aiyAvena visaikaLkURa
vEle duththu nadantha thivA karAchala
vEdu vappeN maNantha puyA chalAthamizh
vEtha veRpi lamarntha krupA karAsiva kumaravELE.
English Easy Version
Olam itta surumpu thanA thanA enavE
siraththil vizhum kai paLeer paLeer ena
Osai petRa silampu kaleer kaleer ena – viraka leelai
Or midatRil ezhum puL kukU kukU ena
vErvai meththa ezhunthu salA salA ena
rOma kucchu niRainthu sileer sileer ena – amuthamAran
AlayaththuL irunthu kupeer kupeer enavE
kuthikka udampu vireer vireer ena Ara
muththam aNinthu aLA aLA ena – maruvu mAthar
Asaiyil kai kalanthu sumA sumA pava
sAkaraththil azhunthi ezhA ezhAthu uLam
ARu ezhuththai ninainthu kukA kukA ena – vakai varAthO
mAlai itta sirangaL sevEl sevEl ena
vEl ezhucchi tharum pal veLEl veLEl ena
vAkai petRa puyangaL kaREl kaREl ena – ethir koL cUran
mArpum okka nerinthu kareel kareel ena
pEy kuthikka niNangkaL kuzhU kuzhU ena
vAy puthaiththu vizhunthu aiyO aiyO ena – uthiram ARAy
vElai vatRi vaRaNdu suReel suReel ena
mAlai veRpum idinthu thideel thideel ena
mEnmai petRa janangkaL aiyA aiyA ena – isaikaL kURa
vEl eduththu nadantha thivAkarA asala
vEduvap peN maNantha puya asalA thamizh
vEtha veRpil amarntha krupAkarA siva – kumara vELE