Thiruppugal 544 Vedhaverpile
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தான தத்த தான தத்த தான தத்த தனதான
தான தத்த தான தத்த தான தத்த தனதான
வேத வெற்பி லேபு னத்தில் மேவி நிற்கு மபிராம
வேடு வச்சி பாத பத்ம மீது செச்சை முடிதோய
ஆத ரித்து வேளை புக்க ஆறி ரட்டி புயநேய
ஆத ரத்தோ டாத ரிக்க ஆன புத்தி புகல்வாயே
காது முக்ர வீர பத்ர காளி வெட்க மகுடாமா
காச முட்ட வீசி விட்ட காலர் பத்தி யிமையோரை
ஓது வித்த நாதர் கற்க வோது வித்த முநிநாண
ஓரெ ழுத்தி லாறெ ழுத்தை யோது வித்த பெருமாளே.
பதம் பிரித்தது
தான தத்த தான தத்த தான தத்த தனதான
தான தத்த தான தத்த தான தத்த தனதான
வேத வெற்பிலே புனத்தில் மேவி நிற்கும் – அபிராம
வேடுவச்சி பாத பத்ம மீது செச்சை – முடிதோய
ஆதரித்து வேளை புக்க ஆறிரட்டி – புயநேய
ஆதரத்தோடு ஆதரிக்க ஆன புத்தி – புகல்வாயே
காதும் உக்ர வீர பத்ர காளி வெட்க – மகுடத்தை
ஆகாச முட்ட வீசி விட்ட காலர் பத்தி – இமையோரை
ஓது வித்த நாதர் கற்க ஓது வித்த – முநிநாண
ஓரெழுத்தில் ஆறெழுத்தை ஓது வித்த – பெருமாளே
English
vEdha veRpilE punaththil mEvi niRkum abirAma
vEdu vacchi pAdha padhma meedhu checchai mudithOya
Adhariththu vELai pukka ARiratti buyanEya
AdharaththodA dharikka Ana budhdhi pugalvAyE
kAdhu mugra veera badhra kALi vetka makudAm
AkAsa mutta veesi vitta kAlar baththi imaiyOrai
Odhuviththa nAdhar kaRka Odhuviththa muni nANa
Orezhuththil ARezhuththai Odhuviththa perumALE.
English Easy Version
vEdha veRpilE punaththil mEvi niRkum – abirAma
vEdu vacchi pAdha padhma meedhu checchai – mudithOya
Adhariththu vELai pukka ARiratti – buyanEya
AdharaththodA dharikka Ana budhdhi – pugalvAyE
kAdhu mugra veera badhra kALi vetka – makudAm
AkAsa mutta veesi vitta kAlar baththi – imaiyOrai
Odhuviththa nAdhar kaRka Odhuviththa – muni nANa
Orezhuththil ARezhuththai Odhuviththa – perumALE,