Thiruppugal 550 Azhudhuazhudhuasara
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனதன தானான தானன தனதன தானான தானன
தனதன தானான தானன தந்ததான
அழுதழு தாசார நேசமு முடையவர் போலேபொய் சூழ்வுறும்
அசடிகள் மாலான காமுகர் பொன்கொடாநாள்
அவருடன் வாய்பேசி டாமையு முனிதலு மாறாத தோஷிகள்
அறுதியில் காசாசை வேசைகள் நஞ்சுதோயும்
விழிகளி னால்மாட வீதியில் முலைகளை யோராம லாரொடும்
விலையிடு மாமாய ரூபிகள் பண்பிலாத
விரகிகள் வேதாள மோவென முறையிடு கோமாள மூளிகள்
வினைசெய லாலேயெ னாவியு யங்கலாமோ
வழியினில் வாழ்ஞான போதக பரமசு வாமீவ ரோதய
வயலியில் வேலாயு தாவரை யெங்குமானாய்
மதுரையின் மீதால வாயினில் எதிரம ணாரோரெ ணாயிரர்
மறிகழு மீதேற நீறுப ரந்துலாவச்
செழியனு மாளாக வாதுசெய் கவிமத சீகாழி மாமுனி
சிவசிவ மாதேவ காவென வந்துபாடும்
திருவுடை யாய்தீதி லாதவர் உமையொரு பாலான மேனியர்
சிரகிரி வாழ்வான தேவர்கள் தம்பிரானே.
பதம் பிரித்தது
தனதன தானான தானன தனதன தானான தானன
தனதன தானான தானன தந்ததான
அழுது அழுது ஆசார நேசமும் உடையவர் போலே பொய் சூழ்வுறும்
அசடிகள் மால் ஆன காமுகர் பொன் – கொடா நாள்
அவருடன் வாய் பேசிடாமையும் முனிதலும் மாறாத தோஷிகள்
அறுதி இல் காசு ஆசை வேசைகள் – நஞ்சு தோயும்
விழிகளினால் மாட வீதியில் முலைகளை ஓராமல் ஆரோடும்
விலை இடு மா மாய ரூபிகள் – பண்பிலாத
விரகிகள் வேதாளமோ என முறையிடு கோமாள மூளிகள்
வினை செயலாலே என் ஆவியும் – உயங்கலாமோ
வழியினில் வாழ் ஞான போதக பரம சுவாமீ வரோதய
வயலியில் வேலாயுத வரை – எங்கும் ஆனாய்
மதுரையின் மீது ஆலவாயினில் எதிர் அமணர் ஓரோர்
எ(ண்)ணாயிரர் மறி கழு மீது ஏற நீறு – பரந்து உலாவ
செழியனும் ஆளாக வாது செய் கவி மத சீகாழி மாமுனி
சிவசிவ மா தேவ கா என – வந்து பாடும்
திரு உடையாய் தீது இலாதவர் உமை ஒரு பாலான மேனியர்
சிர கிரி வாழ்வான தேவர்கள் – தம்பிரானே
English
azhuthazhu thAsAra nEsamu mudaiyavar pOlEpoy sUzhvuRum
asadikaL mAlAna kAmukar ponkodAnAL
avarudan vAypEsi dAmaiyu munithalu mARAtha thOshikaL
aRuthiyil kAsAsai vEsaikaL nanjuthOyum
vizhikaLi nAlmAda veethiyil mulaikaLai yOrAma lArodum
vilaiyidu mAmAya rUpikaL paNpilAtha
virakikaL vEthALa mOvena muRaiyidu kOmALa mULikaL
vinaiseya lAlEye nAviyu yangalAmO
vazhiyinil vAzhnjAna pOthaka paramasu vAmeeva rOthaya
vayaliyil vElAyu thAvarai yengumAnAy
mathuraiyin meethAla vAyinil ethirama NArOre NAyirar
maRikazhu meethERa neeRupa ranthulAva
sezhiyanu mALAka vAthusey kavimatha seekAzhi mAmuni
sivasiva mAthEva kAvena vanthupAdum
thiruvudai yAytheethi lAthavar umaiyoru pAlAna mEniyar
sirakiri vAzhvAna thEvarkaL thambirAnE.
English Easy Version
azhuthu azhuthu AsAra nEsamum udaiyavar pOlE poy sUzhvuRum
asadikaL mAl Ana kAmukar pon – kodA nAL
avarudan vAy pEsidAmaiyum munithalum mARAtha thOshikaL
aRuthi il kAsu Asai vEsaikaL – nanju thOyum
vizhikaLinAl mAda veethiyil mulaikaLai OrAmal ArOdum
vilai idu mA mAya rUpikaL – paNpilAtha
virakikaL vEthALamO ena muRaiyidu kOmALa mULikaL
vinai seyalAlE en Aviyum – uyangalAmO
vazhiyinil vAzh njAna pOthaka parama suvAmee varOthaya
vayaliyil vElAyutha varai – engum AnAy
mathuraiyin meethu AlavAyinil ethir amaNar OrOr e(N)NAyirar
maRi kazhu meethu ERa neeRu – paranthu ulAva
sezhiyanum ALAka vAthu sey kavi matha seekAzhi mAmuni
sivasiva mA thEva kA ena – vanthu pAdum
thiru udaiyAy theethu ilAthavar umai oru pAlAna mEniyar
sira kiri vAzhvAna thEvarkaL – thambirAnE