திருப்புகழ் 551 இளையவர் நெஞ்ச (திருசிராப்பள்ளி)

Thiruppugal 551 Ilaiyavarnenja

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதன தந்தத் தனதன தந்தத்
தனதன தந்தத் தனதான

இளையவர் நெஞ்சத் தளையமெ னுஞ்சிற்
றிடைகொடு வஞ்சிக் – கொடிபோல்வார்

இணையடி கும்பிட் டணியல்குல் பம்பித்
திதழமு துந்துய்த் – தணியாரக்

களபசு கந்தப் புளகித இன்பக்
கனதன கும்பத் – திடைமூழ்குங்

கலவியை நிந்தித் திலகிய நின்பொற்
கழல்தொழு மன்பைத் – தருவாயே

தளர்வறு மன்பர்க் குளமெனு மன்றிற்
சதுமறை சந்தத் – தொடுபாடத்

தரிகிட தந்தத் திரிகிட திந்தித்
தகுர்தியெ னுங்கொட் – டுடனாடித்

தெளிவுற வந்துற் றொளிர்சிவ னன்பிற்
சிறுவஅ லங்கற் – றிருமார்பா

செழுமறை யஞ்சொற் பரிபுர சண்டத்
திரிசிர குன்றப் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதன தந்தத் தனதன தந்தத்
தனதன தந்தத் தனதான

இளையவர் நெஞ்சத் தளையம் எனும்
சிற்றிடை கொடு வஞ்சிக் – கொடி போல்வார்

இணை அடி கும்பிட்டு அணி அல்குல் பம்பித்து
இதழ் அமுது உந்து உய்த்து – அணி ஆரக்

களப சுகந்தப் புளகித இன்பக்
கன தன கும்பத்து – இடை மூழ்கும்

கலவியை நிந்தித்து இலகிய நின் பொன்
கழல் தொழும் அன்பைத் – தருவாயே

தளர்வு அறும் அன்பர்க்கு உளம் எனும் மன்றில்
சது மறை சந்தத் – தொடு பாட

தரிகிட தந்தத் திரிகிட திந்தித்
தகுர்தி எனும் – கொட்டுடன் ஆடித்

தெளிவுற வந்துற்று ஒளிர் சிவன் அன்பில்
சிறுவ அலங்கல் – திரு மார்பா

செழு மறை அம் சொல் பரிபுர சண்ட
திரிசிர குன்ற – பெருமாளே

English

iLaiyavar nenjath thaLaiyame nunjit
Ridaikodu vanjik – kodipOlvAr

iNaiyadi kumbit taNiyalkul pampith
thithazhamu thunthuyth – thaNiyArak

kaLapasu kanthap puLakitha inpak
kanathana kumpath – thidaimUzhkung

kalaviyai ninthith thilakiya ninpoR
kazhalthozhu manpaith – tharuvAyE

thaLarvaRu manpark kuLamenu manRiR
chathumaRai santhath – thodupAdath

tharikida thanthath thirikida thinthith
thakurthiye nungkot – tudanAdith

theLivuRa vanthut RoLirsiva nanpiR
chiRuva-a langat – RirumArpA

sezhumaRai yanjoR paripura saNdath
thirisira kunRap – perumALE.

English Easy Version

iLaiyavar nenjath thaLaiyam enum
sitRidai kodu vanjik – kodi pOlvAr

iNai adi kumpittu aNi alkul pampiththu ithazh
amuthu unthu uyththu – aNi Arak

kaLapa sukanthap puLakitha inpak
kana thana kumpaththu – idai mUzhkum

kalaviyai ninthiththu ilakiya nin pon
kazhal thozhum anpaith – tharuvAyE

thaLarvu aRum anparkku uLam enum manRil
chathu maRai santhath – thodu pAda

tharikida thanthath thirikida thinthith
thakurthi enum – kottudan Adith

thauivuRa vanthutRu oLir sivan anpil
chiRuva alangal – thiru mArpA

sezhu maRai am sol paripura saNda
thirisira kunRa – perumALE,