Thiruppugal 552 Pagalavanokkum
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனதன தத்தம் தனதன தத்தம்
தனதன தத்தம் தனதான
பகலவ னொக்குங் கனவிய ரத்னம்
பவளவெண் முத்தந் – திரமாகப்
பயிலமு லைக்குன் றுடையவர் சுற்றம்
பரிவென வைக்கும் – பணவாசை
அகமகிழ் துட்டன் பகிடிம ருட்கொண்
டழியும வத்தன் – குணவீனன்
அறிவிலி சற்றும் பொறையிலி பெற்றுண்
டலைதலொ ழித்தென் – றருள்வாயே
சகலரு மெச்சும் பரிமள பத்மந்
தருணப தத்திண் – சுரலோகத்
தலைவர்ம கட்குங் குறவர்ம கட்குந்
தழுவஅ ணைக்குந் – திருமார்பா
செகதல மெச்சும் புகழ்வய லிக்குந்
திகுதிகெ னெப்பொங் – கியவோசை
திமிலைத விற்றுந் துமிகள்மு ழக்குஞ்
சிரகிரி யிற்கும் – பெருமாளே.
பதம் பிரித்தது
தனதன தத்தம் தனதன தத்தம்
தனதன தத்தம் தனதான
பகலவன் ஒக்கும் கனவிய ரத்னம்
பவள வெண் முத்தம் – திரமாகப்
பயில முலைக் குன்று உடையவர் சுற்றம்
பரிவு என வைக்கும் – பண ஆசை
அகம் மகிழ் துட்டன் பகிடி மருள் கொண்டு
அழியும் அவத்தன் – குண வீனன்.
அறிவிலி சற்றும் பொறை இலி பெற்று உண்டு
அலைதல் ஒழித்து என்று – அருள்வாயே
சகலரும் மெச்சும் பரிமள பத்மம்
தருண பதத் திண் – சுர லோகத்
தலைவர் மகட்கும் குறவர் மகட்கும்
தழுவ அணைக்கும் – திரு மார்பா
செக தலம் மெச்சும் புகழ் வயலிக்கும்
திகுதிகு எனப் பொங் – கிய ஓசை
திமிலை தவில் துந்துமிகள் முழக்கும்
சிரகிரியிற்கும் – பெருமாளே
English
pakalava nokkung kanaviya rathnam
pavaLaveN muththan – thiramAkap
payilamu laikkun Rudaiyavar sutRam
parivena vaikkum – paNavAsai
akamakizh thuttan pakidima rutkoN
dazhiyuma vaththan – kuNaveenan
aRivili satRum poRaiyili petRuN
dalaithalo zhiththen – RaruLvAyE
sakalaru mecchum parimaLa pathman
tharuNapa thaththiN – suralOkath
thalaivarma katkung kuRavarma katkun
thazhuvaa Naikkun – thirumArpA
sekathala mecchum pukazhvaya likkun
thikuthike neppong – kiyavOsai
thimilaitha vitRun thumikaLmu zhakkum
sirakiri yiRkum – perumALE.
English Easy Version
pakalavan okkum kanaviya rathnam
pavaLa veN muththam – thiramAkap
Payila mulaik kunRu udaiyavar sutRam
parivu ena vaikkum – paNa Asai
akam makizh thuttan pakidi maruL koNdu
azhiyum avaththan – kuNa veenan
aRivili satRum poRai ili petRu uNdu
alaithal ozhiththu enRu – aruLvAyE
sakalarum mecchum parimaLa pathmam
tharuNa pathath thiN – sura lOkath
thalaivar makatkum kuRavar makatkum
thazhuva aNaikkum – thiru mArpA
seka thalam mecchum pukazh vayalikkum
thikuthiku enap pongiya – Osai
thimilai thavil thunthumikaL muzhakkum
sirakiriyiRkum – perumALE