Thiruppugal 554 Kumudhavaikkani
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனன தாத்தன தனன தாத்தன
தானா தானா தானா தானா தனதான
குமுத வாய்க்கனி யமுத வாக்கினர்
கோலே வேலே சேலே போலே – அழகான
குழைகள் தாக்கிய விழிக ளாற்களி
கூரா வீறா தீரா மாலா – யவரோடே
உமது தோட்களி லெமது வேட்கையை
ஓரீர் பாரீர் வாரீர் சேரீர் – எனவேநின்
றுடைதொ டாப்பண மிடைபொ றாத்தன
மூடே வீழ்வே னீடே றாதே – யுழல்வேனோ
தமர வாக்கிய அமரர் வாழ்த்திய
தாதா வேமா ஞாதா வேதோ – கையிலேறீ
சயில நாட்டிறை வயலி நாட்டிறை
சாவா மூவா மேவா நீவா – இளையோனே
திமிர ராக்கதர் சமர வேற்கர
தீரா வீரா நேரா தோரா – உமைபாலா
திரிசி ராப்பளி மலையின் மேற்றிகழ்
தேவே கோவே வேளே வானோர் – பெருமாளே.
பதம் பிரித்தது
தனன தாத்தன தனன தாத்தன
தானா தானா தானா தானா தனதான
குமுத வாய்க் கனி அமுத வாக்கினர்
கோலே வேலே சேலே போலே – அழகான
குழைகள் தாக்கிய விழிகளால் களி
கூரா வீறாது ஈரா மாலாய் – அவரோடே
உமது தோள்களில் எமது வேட்கையை
ஓரீர் பாரீர் வாரீர் சேரீர் – எனவே நின்று
உடை தொடாப் பணம் இடை பொறாத் தனம்
ஊடே வீழ்வேன் ஈடேறாதே – உழல்வேனோ
தமர வாக்கிய அமரர் வாழ்த்திய
தாதாவே மா ஞாதாவே – தோகையில் ஏறி
சயில நாட்டு இறை வயலி நாட்டு இறை
சாவா மூவா மேவா நீ வா – இளையோனே
திமிர ராக்கதர் சமர வேல் கர
தீரா வீரா நேரா தோரா – உமை பாலா
திரிசிராப்ப(ள்)ளி மலையின் மேல் திகழ்
தேவே கோவே வேளே வானோர் – பெருமாளே.
English
kumutha vAykkani yamutha vAkkinar
kOlE vElE sElE pOlE – azhakAna
kuzhaikaL thAkkiya vizhika LARkaLi
kUrA veeRA theerA mAlA – yavarOdE
umathu thOtkaLi lemathu vEtkaiyai
Oreer pAreer vAreer sEreer – enavEnin
Rudaitho dAppaNa midaipo RAththana
mUdE veezhvE needE RAthE – yuzhalvEnO
thamara vAkkiya amarar vAzhththiya
thAthA vEmA njAthA vEthO – kaiyilERee
sayila nAttiRai vayali nAttiRai
sAvA mUvA mEvA neevA – iLaiyOnE
thimira rAkkathar samara vERkara
theerA veerA nErA thOrA – umaipAlA
thirisi rAppaLi malaiyin mEtRikazh
thEvE kOvE vELE vAnOr – perumALE.
English Easy Version
kumutha vAyk kani amutha vAkkinar
kOlE vElE sElE pOlE – azhakAna
kuzhaikaL thAkkiya vizhikaLAl kaLi
kUrA veeRAthu eerA mAlAy – avarOdE
umathu thOLkaLil emathu vEtkaiyai
Oreer pAreer vAreer sEreer – enavE ninRu
udai thodAp paNam idai poRAth thanam
UdE veezhvEn eedERAthE – uzhalvEnO
thamara vAkkiya amarar vAzhththiya
thAthAvE mA njAthAvE – thOkaiyil ERi
sayila nAttu iRai vayali nAttu iRai
sAvA mUvA mEvA nee vA – iLaiyOnE
thimira rAkkathar samara vEl kara
theerA veerA nErA thOrA – umai pAlA
thirisirAppa(L)Li malaiyin mEl thikazh
thEvE kOvE vELE vAnOr – perumALE