திருப்புகழ் 555 குவளை பூசல் (திருசிராப்பள்ளி)

Thiruppugal 555 Kuvalaipusal

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனன தானன தத்தன தந்தன
தனன தானன தத்தன தந்தன
தனன தானன தத்தன தந்தன தனதான

குவளை பூசல்வி ளைத்திடு மங்கயல்
கடுவ தாமெனு மைக்கண்ம டந்தையர்
குமுத வாயமு தத்தைநு கர்ந்திசை – பொருகாடை

குயில்பு றாமயில் குக்கில்சு ரும்பினம்
வனப தாயுத மொக்குமெ னும்படி
குரல்வி டாஇரு பொற்குட மும்புள – கிதமாகப்

பவள ரேகைப டைத்தத ரங்குறி
யுறவி யாளப டத்தைய ணைந்துகை
பரிச தாடன மெய்க்கர ணங்களின் – மதனூலின்

படியி லேசெய்து ருக்கிமு யங்கியெ
அவச மாய்வட பத்ரநெ டுஞ்சுழி
படியு மோகச முத்ரம ழுந்துத – லொழிவேனோ

தவள ரூபச ரச்சுதி யிந்திரை
ரதிபு லோமசை க்ருத்திகை ரம்பையர்
சமுக சேவித துர்க்கைப யங்கரி – புவநேசை

சகல காரணி சத்திப ரம்பரி
யிமய பார்வதி ருத்ரிநி ரஞ்சனி
சமய நாயகி நிஷ்களி குண்டலி – யெமதாயி

சிவைம நோமணி சிற்சுக சுந்தரி
கவுரி வேதவி தக்ஷணி யம்பிகை
த்ரிபுரை யாமளை யற்பொடு தந்தருள் – முருகோனே

சிகர கோபுர சித்திர மண்டப
மகர தோரண ரத்நஅ லங்க்ருத
திரிசி ராமலை அப்பர்வ ணங்கிய – பெருமாளே.

பதம் பிரித்தது

தனன தானன தத்தன தந்தன
தனன தானன தத்தன தந்தன
தனன தானன தத்தன தந்தன தனதான

குவளை பூசல் விளைத்திடும் அம் கயல்
கடுவது ஆம் எனும் மை கண் மடந்தையர்
குமுத வாய் அமுதத்தை நுகர்ந்து இசை – பொரு காடை

குயில் புறா மயில் குக்கில் சுரும்பு அ(ன்)னம்
வன பதாயுதம் ஒக்கும் எனும்படி
குரல் விடா இரு பொன் குடமும் – புளகிதமாக

பவள ரேகை படைத்த அதரம் குறி
உற வியாள படத்தை அணைந்து கை
பரிசம் தாடனம் மெய் கரணங்களின் – மதன் நூலின்

படியிலே செய்து உருக்கி முயங்கியெ
அவசமாய் வட பத்ர நெடும் சுழி
படியும் மோக சமுத்ரம் அழுந்துதல் – ஒழிவேனோ

தவள ரூப சரச்சுதி இந்திரை
ரதி புலோமசை க்ருத்திகை ரம்பையர் சமுக
சேவித துர்க்கை பயங்கரி – புவநேசை

சகல காரணி சத்தி பரம்பரி
இமய பார்வதி ருத்ரி நிரஞ்சனி
சமய நாயகி நிஷ்களி குண்டலி – எமது ஆயி

சிவை மநோமணி சிற்சுக சுந்தரி
கவுரி வேத விதக்ஷணி அம்பிகை
த்ரிபுரை யாமளை அற்பொடு தந்து – அருள் முருகோனே

சிகர கோபுர சித்திர மண்டப
மகர தோரண ரத்ந அலங்க்ருத
திரிசிரா மலை அப்பர் வணங்கிய – பெருமாளே.

English

kuvaLai pUsalvi Laiththidu mangayal
kaduva thAmenu maikkaNma danthaiyar
kumutha vAyamu thaththainu karnthisai – porukAdai

kuyilpu RAmayil kukkilsu rumpanam
vanapa thAyutha mokkume numpadi
kuralvi dariru poRkuda mumpuLa – kithamAkap

pavaLa rEkaipa daiththatha ranguRi
yuRavi yALapa daththaiya Nainthukai
parisa thAdana meykkara NangaLin – mathanUlin

padiyi lEseythu rukkimu yangiye
avasa mAyvada pathrane dunjuzhi
padiyu mOkasa muthrama zhunthutha – lozhivEnO

thavaLa rUpasa racchuthi yinthirai
rathipu lOmasai kruththikai rampaiyar
samuka sEvitha thurkkaipa yangari – puvanEsai

sakala kAraNi saththipa rampari
yimaya pArvathi ruthrini ranjani
samaya nAyaki nishkaLi kuNdali – yemathAyi

sivaima nOmaNi siRchuka sunthari
kavuri vEthavi thakshaNi yampikai
thripurai yAmaLai yaRpodu thantharuL – murukOnE

sikara kOpura siththira maNdapa
makara thOraNa rathnaa langrutha
thirisi rAmalai apparva Nangiya – perumALE.

English Easy Version

kuvaLai pUsal viLaiththidum am kayal
kaduvathu Am enum mai kaN madanthaiyar
kumutha vAy amuthaththai nukarththu isai – poru kAdai

kuyil puRA mayil kukkil surumpu a(n)nam
vana pathAyutham okkum enumpadi
kural vidA iru pon kudamum – puLakithamAka

pavaLa rEkai padaiththa atharam kuRi
uRa viyALa padaththai aNainthu kai
parisam thAdanam mey karaNangaLin – mathan nUlin

padiyilE seythu urukki muyangiye
avasamAy vada pathra nedum suzhi
padiyum mOka samuthram azhunthuthal – ozhivEnO

thavaLa rUpa saracchuthi inthirai
rathi pulOmasai kruththikai rampaiyar
samuka sEvitha thurkkai payangari – puvanEsai

sakala kAraNi saththi parampari
imaya pArvathi ruthri niranjani
samaya nAyaki nishkaLi kuNdali – emathu Ayi

sivai manOmaNi siRchuka sunthari
kavuri vEtha vithaxaNi ampikai
thripurai yAmaLai aRpodu thanthu aruL – murukOnE

sikara kOpura siththira maNdapa
makara thOraNa rathna alangrutha
thirisirA malai appar vaNangiya – perumALE.