Thiruppugal 559 Porulinmerpriya
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனன தாத்தன தானா தானன
தனன தாத்தன தானா தானன
தனன தாத்தன தானா தானன தந்ததான
பொருளின் மேற்ப்ரிய காமா காரிகள்
பரிவு போற்புணர் க்ரீடா பீடிகள்
புருஷர் கோட்டியில் நாணா மோடிகள் – கொங்கைமேலே
புடைவை போட்டிடு மாயா ரூபிகள்
மிடிய ராக்குபொ லாமூ தேவிகள்
புலையர் மாட்டும றாதே கூடிகள் – நெஞ்சமாயம்
கருதொ ணாப்பல கோடா கோடிகள்
விரகி னாற்பலர் மேல்வீழ் வீணிகள்
கலவி சாத்திர நூலே யோதிகள் – தங்களாசைக்
கவிகள் கூப்பிடு மோயா மாரிகள்
அவச மாக்கிடு பேய்நீ ரூணிகள்
கருணை நோக்கமி லாமா பாவிக – ளின்பமாமோ
குருக டாக்ஷக லாவே தாகம
பரம வாக்கிய ஞானா சாரிய
குறைவு தீர்த்தருள் ஸ்வாமி கார்முக – வன்பரான
கொடிய வேட்டுவர் கோகோ கோவென
மடிய நீட்டிய கூர்வே லாயுத
குருகு க்ஷேத்ரபு ரேசா வாசுகி – அஞ்சமாறும்
செருப ராக்ரம கேகே வாகன
சரவ ணோற்பவ மாலா லாளித
திரள்பு யாத்திரி யீரா றாகிய கந்தவேளே
சிகர தீர்க்கம காசீ கோபுர
முகச டாக்கர சேணா டாக்ருத
திரிசி ராப்பளி வாழ்வே தேவர்கள் – தம்பிரானே.
பதம் பிரித்தது
தனன தாத்தன தானா தானன
தனன தாத்தன தானா தானன
தனன தாத்தன தானா தானன தந்ததான
பொருளின் மேல் ப்ரிய காமா காரிகள்
பரிவு போல் புணர் க்ரீடா பீடிகள்
புருஷர் கோட்டியில் நாணா மோடிகள் – கொங்கை மேலே
புடைவை போட்டிடு மாயா ரூபிகள்
மிடியர் ஆக்கு பொ(ல்)லா மூதேவிகள்
புலையர் மாட்டும் அறாதே கூடிகள் – நெஞ்ச மாயம்
கருத ஒணா பல கோடா கோடிகள்
விரகினால் பலர் மேல் வீழ் வீணிகள்
கலவி சாத்திர நூலே ஓதிகள் – தங்கள் ஆசைக்
கவிகள் கூப்பிடும் ஓயா மாரிகள்
அவசம் ஆக்கிடு பேய் நீர் ஊணிகள்
கருணை நோக்கம் இ(ல்)லா மா பாவிகள் – இன்பம் ஆமோ
குரு கடாக்ஷ கலா வேத ஆகம .
பரம வாக்கிய ஞான ஆசாரிய
குறைவு தீர்த்து அருள் சுவாமி கார்முக – வன்பரான
கொடிய வேட்டுவர் கோகோகோ என
மடிய நீட்டிய கூர் வேலாயுத
குருகு த்ர புர* ஈசா வாசுகி – அஞ்ச மாறும்
செரு பராக்ரம கேக(ய)** வாகன
சரவண உற்பவ மாலால் லாளித
திரள் புய அத்திரி ஈராறு ஆகிய – கந்தவேளே
சிகர தீர்க்க மகா சீ கோபுர
முக சடா அக்கர சேண் நாடு ஆக்ருத
திரிசிராப்ப(ள்)ளி வாழ்வே தேவர்கள் – தம்பிரானே
English
poruLin mERpriya kAmA kArikaL
parivu pORpuNar kreedA peedikaL
purushar kOttiyil nANA mOdikaL – kongaimElE
pudaivai pOttidu mAyA rUpikaL
midiya rAkkupo lAmU thEvikaL
pulaiyar mAttuma RAthE kUdikaL – nenjamAyam
karutho NAppala kOdA kOdikaL
viraki nARpalar mElveezh veeNikaL
kalavi sAththira nUlE yOthikaL – thangaLAsaik
kavikaL kUppidu mOyA mArikaL
avasa mAkkidu pEynee rUNikaL
karuNai nOkkami lAmA pAvika – LinpamAmO
kuruka dAkshaka lAvE thAkama
parama vAkkiya njAnA chAriya
kuRaivu theerththaruL SvAmi kArmuka – vanparAna
kodiya vEttuvar kOkO kOvena
madiya neettiya kUrvE lAyutha
kuruku kshEthrapu rEsA vAsuki – anjamARum
cherupa rAkrama kEkE vAkana
sarava NORpava mAlA lALitha
thiraLpu yAththiri yeerA RAkiya – kanthavELE
sikara theerkkama kAsee kOpura
mukacha dAkkara sENA dAkrutha
thirisi rAppaLi vAzhvE thEvarkaL – thambirAnE.
English Easy Version
poruLin mEl priya kAmA kArikaL
parivu pOl puNar kreedA peedikaL
purushar kOttiyil nANA mOdikaL – kongai mElE
pudaivai pOttidu mAyA rUpikaL
midiyar Akku po(l)lA mUthEvikaL
pulaiyar mAttum aRAthE kUdikaL – nenja mAyam
karutha oNA pala kOdA kOdikaL
virakinAl palar mEl veezh veeNikaL
kalavi sAththira nUlE OthikaL – thangaL Asaik
kavikaL kUppidum OyA mArikaL
avasam Akkidu pEy neer UNikaL
karuNai nOkkam i(l)lA mA pAvikaL – inpam AmO
kuru kadAksha kalA vEtha Akama
parama vAkkiya njAna AsAriya
kuRaivu theerththu aruL SvAmi kArmuka – vanparAna
kodiya vEttuvar kOkOkO ena
madiya neettiya kUr vElAyutha
kuruku thra pura* eesA vAsuki – anja mARum
seru parAkrama kEka(ya)** vAkana
saravaNa uRpava mAlAl lALitha
thiraL puya aththiri eerARu Akiya – kanthavELE
sikara theerkka makA see kOpura
muka sadA akkara sEN nAdu Akrutha
thirisirAppa(L)Li vAzhvE thEvarkaL – thambirAnE