திருப்புகழ் 560 பொருள்கவர் சிந்தை (திருசிராப்பள்ளி)

Thiruppugal 560 Porulkavarsindhai

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதன தந்த தனதன தந்த
தனதன தந்த தனதான

பொருள்கவர் சிந்தை அரிவையர் தங்கள்
புழுககில் சந்து – பனிநீர்தோய்

புளகித கொங்கை யிளகவ டங்கள்
புரளம ருங்கி – லுடைசோர

இருள்வளர் கொண்டை சரியஇ சைந்து
இணைதரு பங்க – அநுராகத்

திரிதலொ ழிந்து மனதுக சிந்து
னிணையடி யென்று – புகழ்வேனோ

மருள்கொடு சென்று பரிவுட னன்று
மலையில்வி ளைந்த – தினைகாவல்

மயிலை மணந்த அயிலவ எங்கள்
வயலியில் வந்த – முருகோனே

தெருளுறு மன்பர் பரவ விளங்கு
திரிசிர குன்றில் – முதனாளில்

தெரிய இருந்த பெரியவர் தந்த
சிறியவ அண்டர் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதன தந்த தனதன தந்த
தனதன தந்த தனதான

பொருள் கவர் சிந்தை அரிவையர் தங்கள்
புழுகு அகில் சந்து – பனி நீர் தோய்

புளகித கொங்கை இளக வடங்கள்
புரள மருங்கில் – உடை சோர

இருள் வளர் கொண்டை சரிய இசைந்து
இணை தரு பங்க – அநுராகத்

திரிதல் ஒழிந்து மனது கசிந்து
உன் இணை அடி என்று – புகழ்வேனோ

மருள் கொடு சென்று பரிவுடன் அன்று
மலையில் விளைந்த – தினை காவல்

மயிலை மணந்த அயிலவ எங்கள்
வயலியில் வந்த – முருகோனே

தெருள் உறும் அன்பர் பரவ விளங்கு
திரி சிர குன்றில் – முதல் நாளில்

தெரிய இருந்த பெரியவர் தந்த
சிறியவ அண்டர் – பெருமாளே.

English

poruLkavar sinthai arivaiyar thangaL
puzhukakil santhu – panineerthOy

puLakitha kongai yiLakava dangaL
puraLama rungi – ludaisOra

iruLvaLar koNdai sariyai sainthu
iNaitharu panga – anurAkath

thirithalo zhinthu manathuka sinthu
niNaiyadi yenRu – pukazhvEnO

maruLkodu senRu parivuda nanRu
malaiyilvi Laintha – thinaikAval

mayilai maNantha ayilava engaL
vayaliyil vantha – murukOnE

theruLuRu manpar parava viLangu
thirisira kunRil – muthanALil

theriya iruntha periyavar thantha
siRiyava aNdar – perumALE.

English Easy Version

poruL kavar sinthai arivaiyar thangaL
puzhuku akil santhu – pani neer thOy

puLakitha kongai iLaka vadangaL
puraLa marungil – udai sOra

iruL vaLar koNdai sariya isainthu
iNai tharu panga – anurAkath

thirithal ozhinthu manathu kasinthu
un iNai adi enRu – pukazhvEnO

maruL kodu senRu parivudan anRu
malaiyil viLaintha – thinai kAval

mayilai maNantha ayilava engaL
vayaliyil vantha – murukOnE

theruL uRum anpar parava viLangu
thiri sira kunRil – muthal nALil

theriya iruntha periyavar thantha
siRiyava aNdar – perumALE