Thiruppugal 563 Kudaththaiththagarththu
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனத்தத் தனத்தத் தனத்தத் தனத்தத்
தனத்தத் தனத்தத் தனதான
குடத்தைத் தகர்த்துக் களிற்றைத் துரத்திக்
குவட்டைச் செறுத்துக் – ககசாலக்
குலத்தைக் குமைத்துப் பகட்டிச் செருக்கிக்
குருத்தத் துவத்துத் – தவர்சோரப்
புடைத்துப் பணைத்துப் பெருக்கக் கதித்துப்
புறப்பட் டகச்சுத் – தனமாதர்
புணர்ச்சிச் சமுத்ரத் திளைப்பற் றிருக்கப்
புரித்துப் பதத்தைத் – தருவாயே
கடத்துப் புனத்துக் குறத்திக் குமெத்தக்
கருத்திச் சையுற்றுப் – பரிவாகக்
கனக்கப் ரியப்பட் டகப்பட் டுமைக்கட்
கடைப்பட் டுநிற்கைக் – குரியோனே
தடத்துற் பவித்துச் சுவர்க்கத் தலத்தைத்
தழைப்பித் தகொற்றத் – தனிவேலா
தமிழ்க்குக் கவிக்குப் புகழ்ச்செய்ப் பதிக்குத்
தருக்கற் குடிக்குப் – பெருமாளே.
பதம் பிரித்தது
தனத்தத் தனத்தத் தனத்தத் தனத்தத்
தனத்தத் தனத்தத் தனதான
குடத்தைத் தகர்த்துக் களிற்றைத் துரத்திக்
குவட்டைச் செறுத்து – ககசாலக்
குலத்தைக் குமைத்துப் பகட்டிச் செருக்கி
குருத் தத்துவத்துத் – தவர் சோரப்
புடைத்துப் பணைத்துப் பெருக்கக் கதித்துப்
புறப்பட்ட கச்சுத் – தனமாதர்
புணர்ச்சிச் சமுத்ரத்து இளைப்பு அற்றிருக்கப்
புரித்துப் பதத்தைத் – தருவாயே
கடத்துப் புனத்துக் குறத்திக்கு மெத்தக்
கருத்து இச்சையுற்றுப் – பரிவாகக்
கனக்க ப்ரியப்பட்டு அகப்பட்டு மைக்கண்
கடைப்பட்டு நிற்கைக்கு – உரியோனே
தடத்து உற்பவித்துச் சுவர்க்கத் தலத்தைத்
தழைப்பித்த கொற்றத் – தனிவேலா
தமிழ்க்குக் கவிக்குப் புகழ்ச்செய்ப் பதிக்குத்
தருக் கற்குடிக்குப் – பெருமாளே.
English
kudaththaith thakarththuk kaLitRaith thuraththik
kuvattaic cheRuththuk – kakasAlak
kulaththaik kumaiththup pakattic cherukkik
kuruththath thuvaththuth – thavarsOrap
pudaiththup paNaiththup perukkak kathiththup
puRappat takacchuth – thanamAthar
puNarcchic chamuthrath thiLaippat Rirukkap
puriththup pathaththaith – tharuvAyE
kadaththup punaththuk kuRaththik kumeththak
karuththic chaiyutRup – parivAkak
kanakkap riyappat takappat tumaikkat
kadaippat tuniRkaik – kuriyOnE
thadaththuR paviththuc chuvarkkath thalaththaith
thazhaippith thakotRath – thanivElA
thamizhkkuk kavikkup pukazhccheyp pathikkuth
tharukkaR kudikkup – perumALE.
English Easy Version
kudaththaith thakarththuk kaLitRaith thuraththik
kuvattaic cheRuththu – kakasAlak
kulaththaik kumaiththup pakattic cherukki
kuruth thaththuvaththuth – thavar sOrap
pudaiththup paNaiththup perukkak kathiththup
puRappatta kacchuth – thanamAthar
puNarcchic chamuthraththu iLaippu atRirukkap
puaiththup pathaththaith – tharuvAyE
kadaththup punaththuk kuRaththikku meththak
karuththu icchaiyutRup – parivAkak
kanakka priyappattu akappattu maikkaN
kadaippattu niRkaikku – uriyOnE
thadaththu uRpaviththuc chuvarkkath thalaththaith
thazhaippiththa kotRath – thanivElA
thamizhkkuk kavikkup pukazhccheyp pathikkuth
tharuk kaRkudikkup – perumALE.