Thiruppugal 585 Anbagavandhu
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தந்தான தந்த தந்தான தந்த
தந்தான தந்த – தனதான
அன்பாக வந்து உன்றாள் பணிந்து
ஐம்பூத மொன்ற – நினையாமல்
அன்பால் மிகுந்து நஞ்சாரு கண்க
ளம்போரு கங்கள் – முலைதானும்
கொந்தே மிகுந்து வண்டாடி நின்று
கொண்டாடு கின்ற – குழலாரைக்
கொண்டே நினைந்து மன்பேது மண்டி
குன்றா மலைந்து – அலைவேனோ
மன்றாடி தந்த மைந்தா மிகுந்த
வம்பார் கடம்பை – யணிவோனே
வந்தே பணிந்து நின்றார் பவங்கள்
வம்பே தொலைந்த – வடிவேலா
சென்றே யிடங்கள் கந்தா எனும்பொ
செஞ்சேவல் கொண்டு – வரவேணும்
செஞ்சாலி கஞ்ச மொன்றாய் வளர்ந்த
செங்கோ டமர்ந்த – பெருமாளே.
பதம் பிரித்தது
தந்தான தந்த தந்தான தந்த
தந்தான தந்த – தனதான
அன்பாக வந்து உன்தாள் பணிந்து
ஐம்பூதம் ஒன்ற – நினையாமல்
அன்பால் மிகுந்து நஞ்சாரு கண்கள்
அம்போருகங்கள் – முலைதானும்
கொந்தே மிகுந்து வண்டாடி நின்று
கொண்டாடுகின்ற – குழலாரைக்
கொண்டே நினைந்து மன்பேது மண்டி
குன்றா மலைந்து – அலைவேனோ
மன்றாடி தந்த மைந்தா மிகுந்த
வம்பார் கடம்பை – அணிவோனே
வந்தே பணிந்து நின்றார் பவங்கள்
வம்பே தொலைந்த – வடிவேலா
சென்றே யிடங்கள் கந்தா எனும்பொ
செஞ்சேவல் கொண்டு – வரவேணும்
செஞ்சாலி கஞ்சம் ஒன்றாய் வளர்ந்த
செங்கோடு அமர்ந்த – பெருமாளே
English
anbAga vandhu unthAL paNindhu
aimbUtha mondra – ninaiyAmal
anbAl migundhu nanjAru kaNgaL
ambOru gangaL – mulaithAnum
kondhE migundhu vaNdadi nindru
koNdAdu gindra – kuzhalAraik
koNdE ninaindhu manbEdhu maNdi
kundrA malaindhu – alaivEnO
mandrAdi thandha maindhA migundha
vambAr kadambai – aNivOnE
vandhE paNindhu nindrAr bavangaL
vambE tholaindha – vadivElA
sendrE idangaL kandhA enumpo
senchEval koNdu – varavENum
senchAli kanja mondrAy vaLarndha
sengkOdamarndha – perumALE.
English Easy Version
anbAga vandhu unthAL paNindhu
aimbUtha mondra – ninaiyAmal
anbAl migundhu nanjAru kaNgaL
ambOru gangaL – mulaithAnum
kondhE migundhu vaNdadi nindru
koNdAdu gindra – kuzhalAraik
koNdE ninaindhu manbEdhu maNdi
kundrA malaindhu – alaivEnO
mandrAdi thandha maindhA migundha
vambAr kadambai – aNivOnE
vandhE paNindhu nindrAr bavangaL
vambE tholaindha – vadivElA
sendrE idangaL kandhA enumpo
senchEval koNdu – varavENum
senchAli kanja mondrAy vaLarndha
sengkOdamarndha – perumALE