திருப்புகழ் 586 பந்து ஆடி அம் கை (திருச்செங்கோடு)

Thiruppugal 586 Pandhuadiamkai

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தந்தான தந்த தந்தான தந்த
தந்தான தந்த – தனதான

பந்தாடி யங்கை நொந்தார் பரிந்து
பைந்தார் புனைந்த – குழல்மீதே

பண்பார் சுரும்பு பண்பாடு கின்ற
பங்கே ருகங்கொள் – முகமீதே

மந்தார மன்றல் சந்தார மொன்றி
வன்பாத கஞ்செய் – தனமீதே

மண்டாசை கொண்டு விண்டாவி நைந்து
மங்காம லுன்ற – னருள்தாராய்

கந்தா அரன்றன் மைந்தா விளங்கு
கன்றா முகுந்தன் – மருகோனே

கன்றா விலங்க லொன்றாறு கண்ட
கண்டா வரம்பை – மணவாளா

செந்தா தடர்ந்த கொந்தார் கடம்பு
திண்டோள் நிரம்ப – அணிவோனே

திண்கோ டரங்க ளெண்கோ டுறங்கு
செங்கோட மர்ந்த – பெருமாளே.

பதம் பிரித்தது

தந்தான தந்த தந்தான தந்த
தந்தான தந்த – தனதான

பந்து ஆடி அம் கை நொந்தார் பரிந்து
பைம் தார் புனைந்த – குழல் மீதே

பண்பு ஆர் சுரும்பு பண் பாடுகின்ற
பங்கேருகம் கொள் – முகம் மீதே

மந்தார மன்றல் சந்து ஆரம் ஒன்றி
வன் பாதகம் செய் – தனம் மீதே

மண்டு ஆசை கொண்டு விண்டு ஆவி நைந்து
மங்காமல் உன் தன் – அருள் தாராய்

கந்தா அரன் தன் மைந்தா விளங்கு
கன்று ஆ முகுந்தன் – மருகோனே

கன்றா விலங்கல் ஒன்று ஆறு கண்ட
கண்டா அரம்பை – மணவாளா

செம் தாது அடர்ந்த கொந்து ஆர் கடம்பு
திண் தோள் நிரம்ப – அணிவோனே

திண் கோடரங்கள் எண்கோடு உறங்கு
செங்கோடு அமர்ந்த – பெருமாளே.

English

panthAdi yangkai nonthAr parinthu
painthAr punaintha – kuzhhalmeethE

paNpAr surumpu paNpAdu kinRa
pangE rukangkoL – mukameethE

manthAra manRal santhAra monRi
vanpAtha kamcey – thanameethE

maNdAsai koNdu viNdAvi nainthu
mangAma lunRa – naruLthArAy

kanthA aranRan mainthA viLangu
kanRA mukunthan – marukOnE

kanRA vilanga lonRARu kaNda
kaNdA varampai – maNavALA

senthA thadarntha konthAr kadampu
thiNdOL nirampa – aNivOnE

thiNkO daranga LeNkO duRangu
sengOda marntha – perumALE.

English Easy Version

panthu Adi am kai nonthAr parinthu
paim thAr punaintha – kuzhhal meethE

paNpu Ar surumpu paN pAdukinRa
pangErukam koL – mukam meethE

manthAra manRal santhu Aram onRi
van pAthakam sey – thanam meethE

maNdu Asai koNdu viNdu Avi nainthu
mangAmal un than – aruL thArAy

kanthA aran than mainthA viLangu
kanRu A mukunthan – marukOnE

kanRA vilangal onRu ARu kaNda
kaNdA arampai – maNavALA

sem thAthu adarntha konthu Ar kadampu
thiN thOL nirampa – aNivOnE

thiN kOdarangaL eNkOdu uRangu
sengOdu amarntha – perumALE