Thiruppugal 587 Vandarmadhangkal
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தந்தான தந்த தந்தான தந்த
தந்தான தந்த – தனதான
வண்டார்ம தங்க ளுண்டேம யங்கி
வந்தூரு கொண்ட – லதனோடும்
வண்காம னம்பு தன்கால்ம டங்க
வன்போர்ம லைந்த – விழிவேலும்
கொண்டேவ ளைந்து கண்டார்தி யங்க
நின்றார்கு ரும்பை – முலைமேவிக்
கொந்தார ரும்பு நின்தாள்ம றந்து
குன்றாம லுன்ற – னருள்தாராய்
பண்டாழி சங்கு கொண்டாழி தங்கு
பண்போனு கந்த – மருகோனே
பண்சார நைந்து நண்போது மன்பர்
பங்காகி நின்ற – குமரேசா
செண்டாடி யண்டர் கொண்டாட மன்றில்
நின்றாடி சிந்தை – மகிழ்வாழ்வே
செஞ்சாலி மிஞ்சி மஞ்சாடு கின்ற
செங்கோட மர்ந்த – பெருமாளே
பதம் பிரித்தது
தந்தான தந்த தந்தான தந்த
தந்தான தந்த – தனதான
வண்டார் மதங்கள் உண்டே மயங்கி
வந்து ஊரு(ம்) கொண்டல் – அதனோடும்
வண் காமன் அம்பு தன் கால் மடங்க
வன் போர் மலைத்த – விழி வேலும்
கொண்டே வளைந்து கண்டார் தியங்க
நின்றார் குரும்பை – முலை மேவி
கொந்து ஆர் அரும்பு(ம்) நின் தாள் மறந்து
குன்றாமல் உன் தன் – அருள் தாராய்
பண்டு ஆழி சங்கு கொண்டு ஆழி தங்கு
பண்போன் உகந்த – மருகோனே
பண் சார நைந்து நண்பு ஓதும் அன்பர்
பங்காகி நின்ற – குமரேசா
செண்டு ஆடி அண்டர் கொண்டாட மன்றில்
நின்று ஆடி சிந்தை மகிழ் – வாழ்வே
செம் சாலி மிஞ்சி மஞ்சு ஆடுகின்ற
செங்கோடு அமர்ந்த – பெருமாளே
English
vaNdArma thanga LuNdEma yangi
vanthUru koNda – lathanOdum
vaNkAma nampu thankAlma danga
vanpOrma laintha – vizhivElum
koNdEva Lainthu kaNdArthi yanga
ninRArku rumpai – mulaimEvik
konthAra rumpu ninthALma Ranthu
kunRAma lunRa – naruLthArAy
paNdAzhi sangu koNdAzhi thangu
paNpOnu kantha – marukOnE
paNsAra nainthu naNpOthu manpar
pangAki ninRa – kumarEsA
seNdAdi yaNdar koNdAda manRil
ninRAdi sinthai – makizhvAzhvE
senchAli minji manjAdu kinRa
sengOda marntha – perumALE.
English Easy Version
vaNdAr mathangaL uNdE mayangi
vanthu Uru(m) koNdal – athanOdum
vaN kAman ampu than kAl madanga
van pOr malaiththa – vizhi vElum
koNdE vaLainthu kaNdAr thiyanga
ninRAr kurumpai – mulai mEvi
konthu Ar arumpu(m) nin thAL maRanthu
kunRAmal un than – aruL thArAy
paNdu Azhi sangu koNdu Azhi thangu
paNpOn ukantha – marukOnE
paN sAra nainthu naNpu Othum anpar
pangAki ninRa – kumarEsA
seNdu Adi aNdar koNdAda manRil
ninRu Adi sinthai – makizh vAzhvE
senchAli minji manju AdukinRa
sengOdu amarntha – perumALE