திருப்புகழ் 588 கரை அற உருகுதல் (திருச்செங்கோடு)

Thiruppugal 588 Karaiaraurugudhal

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதன தனதன தனதன தனதன
தந்தான தந்த – தனதான

கரையற வுருகுதல் தருகயல் விழியினர்
கண்டான செஞ்சொல் – மடமாதர்

கலவியில் முழுகிய நெறியினி லறிவுக
லங்காம யங்கும் – வினையேனும்

உரையையு மறிவையும் உயிரையு முணர்வையும்
உன்பாத கஞ்ச – மலர்மீதே

உரவொடு புனைதர நினைதரு மடியரொ
டொன்றாக என்று – பெறுவேனோ

வரையிரு துணிபட வளைபடு சுரர்குடி
வந்தேற இந்த்ர – புரிவாழ

மதவித கஜரத துரகத பததியின்
வன்சேனை மங்க – முதுமீன

திரைமலி சலநிதி முறையிட நிசிசரர்
திண்டாட வென்ற – கதிர்வேலா

ஜெகதல மிடிகெட விளைவன வயலணி
செங்கோட மர்ந்த – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதன தனதன தனதன தனதன
தந்தான தந்த – தனதான

கரை அற உருகுதல் தரு கயல் விழியினர்
கண்டு ஆன செம் சொல் – மடமாதர்

கலவியில் முழுகிய நெறியினில் அறிவு
கலங்கா மயங்கும் – வினையேனும்

உரையையும் அறிவையும் உயிரையும் உணர்வையும்
உன் பாத கஞ்ச – மலர் மீதே

உரவொடு புனை தர நினைதரும் அடியரொடு
ஒன்றாக என்று – பெறுவேனோ

வரை இரு துணி பட வளை படு சுரர் குடி
வந்து ஏற இந்த்ர – புரி வாழ

மத வித கஜ ரத துரக பத(தா)யின்
வன் சேனை மங்க – முது மீன

திரை மலி சல நிதி முறை இட நிசிசரர்
திண்டாட வென்ற – கதிர்வேலா

ஜெகதல மிடி கெட விளைவன வயல் அணி
செங்கோடு அமர்ந்த – பெருமாளே

English

karaiyaRa vurukuthal tharukayal vizhiyinar
kaNdAna senjol – madamAthar

kalaviyil muzhukiya neRiyini laRivuka
langAma yangum – vinaiyEnum

uraiyaiyu maRivaiyum uyiraiyu muNarvaiyum
unpAtha kanja – malarmeethE

uravodu punaithara ninaitharu madiyaro
donRAka enRu – peRuvEnO

varaiyiru thuNipada vaLaipadu surarkudi
vanthERa inthra – purivAzha

mathavitha gajaratha thurakatha pathathiyin
vansEnai manga – muthumeena

thiraimali salanithi muRaiyida nisisarar
thiNdAda venRa – kathirvElA

jekathala midikeda viLaivana vayalaNi
sengOda marntha – perumALE.

English Easy Version

karai aRa urukuthal tharu kayal vizhiyinar
kaNdu Ana sem sol – madamAthar

kalaviyil muzhukiya neRiyinil aRivu
kalangA mayangum – vinaiyEnum

uraiyaiyum aRivaiyum uyiraiyum uNarvaiyum
un pAtha kanja – malar meethE

uravodu punai thara ninaitharum adiyarodu
onRAka enRu – peRuvEnO

varai iru thuNi pada vaLai padu surar kudi
vanthu ERa inthra – puri vAzha

matha vitha kaja ratha thuraka patha(a)thiyin
van sEnai manga – muthu meena

thirai mali sala nithi muRai ida nisisarar
thiNdAda venRa – kathirvElA

jekathala midi keda viLaivana vayal aNi
sengOdu amarntha – perumALE.