திருப்புகழ் 589 இடம் பார்த்து (திருச்செங்கோடு)

Thiruppugal 589 Idamparththu

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனந்தாத் தனந்தாத் தனந்தாத் தனந்தாத்
தனந்தாத் தனத்தம் – தனதான

இடம்பார்த் திடம்பார்த் திதங்கேட் டிரந்தேற்
றிணங்காப் பசிப்பொங் – கனல்மூழ்கி

இறுங்காற் கிறுங்கார்க் கிரும்பார்க் குநெஞ்சார்க்
கிரங்கார்க் கியற்றண் – டமிழ்நூலின்

உடம்பாட் டுடன்பாட் டியம்பாத் தயங்காத்
துளங்காத் திடப்புன் – கவிபாடி

ஒதுங்காப் பொதுங்காப் பதுங்காப் புகன்றேத்
துறும்பாற் குணக்கன் – புறலாமோ

கடந்தோற் கடந்தோற் றறிந்தாட் கருந்தாட்
கணைந்தாட் கணித்திண் – புயமீவாய்

கரும்போற் கரும்போர்க் குளங்காட் டிகண்டேத்
துசெங்கோட் டில்நிற்குங் – கதிர்வேலா

அடைந்தோர்க் குணந்தோர்க் களிந்தோர்க் கமைந்தோர்க்
கவிழ்ந்தோர்க் குணற்கொன் – றிலதாகி


அலைந்தோர்க் குலைந்தோர்க் கினைந்தோர்க் கலந்தோர்க்
கறிந்தோர்க் களிக்கும் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனந்தாத் தனந்தாத் தனந்தாத் தனந்தாத்
தனந்தாத் தனத்தம் – தனதான

இடம் பார்த்து இடம் பார்த்து இதம் கேட்டு இரந்து ஏற்று
இணங்காப் பசிப் பொங்கி – அனல் மூழ்கி

இறும் காற்கு இறுங்கார்க்கு இரும்பு ஆர்க்கு நெஞ்சார்க்கு
இரங்கார்க்கு இயல் தண் – தமிழ் நூலின்

உடம் பாட்டுடன் பாட்டு இயம்பா தயங்காத்
துளங்காத் திடப் புன் – கவி பாடி

ஒதுங்காப் பொதுங்காப் பதுங்காப் புகன்று ஏத்து
உறும் பால் குணக்கு – அன்புறலாமோ

கடம் தோல் கடம் தோற்ற அறிந்தாட்கு அரும் தாட்கள்
அணைந்தாட்கு அணித் திண் – புயம் ஈவாய்

கரும்போர்க்கு அரும்போரக் குளம் காட்டி கண்டு ஏத்து
செங்கோட்டில் நிற்கும் – கதிர் வேலா

அடைந்தோர்க்கு உணந்தோர்க்கு அளிந்தோர்க்கு அமைந்தோர்க்கு
அவிழ்ந்தோர்க்கு உணற்கு ஒன்று – இலதாகி

அலைந்தோர்க்கு குலைந்தோர்க்கு இனைந்தோர்க்கு அலந்தோர்க்கு
அறிந்தோர்க்கு அளிக்கும் – பெருமாளே

English

idampArth thidampArth thithangkEt tiranthEt
RiNangAp pasippong – kanalmUzhki

iRungkAR kiRungkArk kirumpArk kunenjArk
kirangkArk kiyataN – damizhnUlin

udampAt tudanpAt tiyampAth thayangAth
thuLangAth thidappun – kavipAdi

othungAp pothungAp pathungAp pukanREth
thuRumpAR kuNakkan – puRalAmO

kadanthOR kadanthOt RaRinthAt karunthAt
kaNainthAt kaNiththiN – puyameevAy

karumpOR karumpOrk kuLangkAt tikaNdEth
thusengOt tilniRkung – kathirvElA

adainthOrk kuNanthOrk kaLinthOrk kamainthOrk
kavizhnthOrk kuNaRkon – RilathAki

alainthOrk kulainthOrk kinainthOrk kalanthOrk
kaRinthOrk kaLikkum – perumALE.

English Easy Version

idam pArththu idam pArththu itham kEttu iranthu EtRu
iNangAp pasip pongi – anal mUzhki

iRum kARku iRungkArkku irumpu Arkku nenjArkku
irangArkku iyal thaN – thamizh nUlin

udam pAttudan pAttu iyampA thayangAth
thuLangAth thidap pun – kavi pAdi

othungAp pothungAp pathungAp pukanRu
Eththu uRum pAl kuNakku – anpuRalAmO

kadam thOl kadam thOtRa aRinthAtku arum
thAtkaL aNainthAtku aNith thiN – puyam eevAy

karumpOrkku arumpOrak kuLam kAtti kaNdu
Eththu sengOttil niRkum – kathir vElA

adainthOrkku uNanthOrkku aLinthOrkku amainthOrkku
avizhnthOrkku uNaRku onRu – ilathAki

alainthOrkku kulainthOrkku inainthOrkku alanthOrkku
aRinthOrkku aLikkum – perumALE