திருப்புகழ் 590 கலக்கும் கோது (திருச்செங்கோடு)

Thiruppugal 590 Kalakkumkodhu

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனத்தந் தானன தனத்தந் தானன
தனத்தந் தானன – தனதான

கலக்குங் கோதற வடிக்குஞ் சீரிய
கருப்பஞ் சாறெனு – மொழியாலே

கருத்தும் பார்வையு முருக்கும் பாவிகள்
கடைக்கண் பார்வையி – லழியாதே

விலக்கும் போதக மெனக்கென் றேபெற
விருப்பஞ் சாலவு – முடையேனான்

வினைக்கொண் டேமன நினைக்குந் தீமையை
விடற்கஞ் சேலென – அருள்வாயே

அலைக்குந் தானவர் குலத்தின் சேனையை
அறுக்குங் கூரிய – வடிவேலா

அழைத்துன் சீரிய கழற்செந் தாமரை
யடுக்கும் போதக – முடையோராம்

சிலர்க்கன் றேகதி பலிக்குந் தேசிக
திருச்செங் கோபுர – வயலூரா

திதிக்கும் பார்வயின் மதிப்புண் டாகிய
திருச்செங் கோடுறை – பெருமாளே.

பதம் பிரித்தது

தனத்தந் தானன தனத்தந் தானன
தனத்தந் தானன – தனதான

கலக்கும் கோது அற வடிக்கும் சீரிய
கருப்பஞ்சாறு எனு – மொழியாலே

கருத்தும் பார்வையும் உருக்கும் பாவிகள்
கடைக் கண் பார்வையில் – அழியாதே

விலக்கும் போதகம் எனக்கு என்றே பெற
விருப்பம் சாலவும் – உடையேன்

நான் வினைக் கொண்டே மன(ம்) நினைக்கும் தீமையை
விடற்கு அஞ்சேல் என – அருள்வாயே

அலைக்கும் தானவர் குலத்தின் சேனையை
அறுக்கும் கூரிய – வடி வேலா

அழைத்து உன் சீரிய கழல் செம் தாமரை
அடுக்கும் போதகம் – உடையோராம்

சிலர்க்கு அன்றே கதி பலிக்கும் தேசிக
திருச் செம் கோபுர – வயலூரா

திதிக்கும் பார் வயின் மதிப்பு உண்டாகிய
திருச் செங்கோடு உறை – பெருமாளே.

English

kalakkung kOthaRa vadikkunj ceeriya
karuppanj cARenu – mozhiyAlE

karuththum pArvaiyu murukkum pAvikaL
kadaikkaN pArvaiyi – lazhiyAthE

vilakkum pOthaka menakken REpeRa
viruppanj cAlavu – mudaiyEnAn

vinaikkoN dEmana ninaikkun theemaiyai
vidaRkanj cElena – aruLvAyE

alaikkun thAnavar kulaththin sEnaiyai
aRukkung kUriya – vadivElA

azhaiththun seeriya kazhaRcen thAmarai
yadukkum pOthaka – mudaiyOrAm

silarkkan REkathi palikkun thEsika
thiruchcheng kOpura – vayalUrA

thithikkum pArvayin mathippuN dAkiya
thiruchcheng kOduRai – perumALE.

English Easy Version

kalakkum kOthu aRa vadikkum seeriya
karuppanjcARu enu – mozhiyAlE

karuththum pArvaiyum urukkum pAvikaL
kadaik kaN pArvaiyil – azhiyAthE

vilakkum pOthakam enakku enRE peRa
viruppam sAlavum – udaiyEn

nAn vinaik koNdE mana(m) ninaikkum theemaiyai
vidaRku anjsEl ena – aruLvAyE

alaikkum thAnavar kulaththin sEnaiyai
aRukkum kUriya – vadi vElA

azhaiththu un seeriya kazhal sem thAmarai
adukkum pOthakam – udaiyOrAm

silarkku anRE kathi palikkum thEsika
thiruc chem kOpura – vayalUrA

thithikkum pAr vayin mathippu uNdAkiya
thiruc chengOdu uRai – perumALE