திருப்புகழ் 592 நீலமஞ்சான குழல் (திருச்செங்கோடு)

Thiruppugal 592 Neelamanjanakuzhal

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தானனந் தானதன தானனந் தானதன
தானனந் தானதன தானனந் தானதன
தானனந் தானதன தானனந் தானதன
தானனந் தானதன தானனந் தானதன
தானனந் தானதன தானனந் தானதன
தானனந் தானதன தானனந் தானதன – தந்ததான

நீலமஞ் சானகுழல் மாலைவண் டோடுகதி
நீடுபந் தாடுவிழி யார்பளிங் கானநகை
நீலபொன் சாபநுத லாசையின் தோடசையு
நீள்முகந் தாமரையி னார்மொழிந் தாரமொழி
நேர்சுகம் போலகமு கானகந் தாரர்புய
நேர்சுணங் காவிகிளை யேர்சிறந் தார்மலையி – ரண்டுபோல

நீளிபங் கோடிளநிர் தேனிருந் தாரமுலை
நீடலங் காரசர மோடடைந் தார்மருவி
நீள்மணஞ் சாறுபொழி யாவளம் போதிவையி
னீலவண் டேவியநல் காமனங் காரநிறை
நேசசந் தானஅல்குல் காமபண் டாரமுதை
நேருசம் போகரிடை நூலொளிர்ந் தாசையுயிர் – சம்பையாரஞ்


சாலுபொன் தோகையமை பாளிதஞ் சூழ்சரண
தாள்சிலம் போலமிட வேநடந் தானநடை
சாதிசந் தானெகின மார்பரந் தோகையென
தானெழுங் கோலவிலை மாதரின் பார்கலவி
தாவுகொண் டேகலிய நோய்கள்கொண் டேபிறவி
தானடைந் தாழுமடி யேனிடஞ் சாலும்வினை – யஞ்சியோடத்

தார்கடம் பாடுகழல் பாதசெந் தாமரைகள்
தாழ்பெரும் பாதைவழி யேபடிந் தேவருகு
தாபம்விண் டேயமுத வாரியுண் டேபசிகள்
தாபமுந் தீரதுகிர் போனிறங் காழ்கொளுரு
சாரவுஞ் சோதிமுரு காவெனுங் காதல்கொடு
தானிருந் தோதஇரு வோரகம் பேறுறுக – விஞ்சைதாராய்

சூலியெந் தாய்கவுரி மோகசங் காரிகுழை
தோடுகொண் டாடுசிவ காமசுந் தாரிநல
தூளணைந் தாளிநிரு வாணியங் காளிகலை
தோகைசெந் தாமரையின் மாதுநின் றேதுதிசெய்
தூயஅம் பாகழைகொள் தோளிபங் காளக்ருபை
தோய்பரன் சேயெனவு மேபெரும் பார்புகழும் – விந்தையோனே

சூரசங் காரசுரர் லோகபங் காவறுவர்
தோகைமைந் தாகுமர வேள்கடம் பாரதொடை
தோளகண் டாபரம தேசிகந் தாவமரர்
தோகைபங் காஎனவே தாகமஞ் சூழ்சுருதி
தோதகம் பாடமலை யேழுதுண் டாயெழுவர்
சோரிகொண் டாறுவர வேலெறிந் தேநடன – முங்கொள்வேலா


மாலியன் பாறவொரு ஆடகன் சாகமிகு
வாலியும் பாழிமர மோடுகும் பாகனனு
மாழியுங் கோரவலி ராவணன் பாறவிடு
மாசுகன் கோலமுகி லோனுகந் தோதிடையர்
மாதுடன் கூடிவிளை யாடுசம் போகதிரு
மார்பகன் காணமுடி யோனணங் கானமதி – யொன்றுமானை

மார்புடன் கோடுதன பாரமுஞ் சேரஇடை
வார்துவண் டாடமுக மோடுகந் தீரரச
வாயிதங் கோதிமணி நூபுரம் பாடமண
வாசைகொண் டாடுமயி லாளிதுங் காகுறவி
மாதுபங் காமறைகு லாவுசெங் கோடைநகர்
வாழவந் தாய்கரிய மாலயன் தேவர்புகழ் – தம்பிரானே.

பதம் பிரித்தது

தானனந் தானதன தானனந் தானதன
தானனந் தானதன தானனந் தானதன
தானனந் தானதன தானனந் தானதன
தானனந் தானதன தானனந் தானதன
தானனந் தானதன தானனந் தானதன
தானனந் தானதன தானனந் தானதன – தந்ததான

நீல மஞ்சான குழல் மாலை வண்டோடு கதி
நீடு பந்தாடு விழியார் பளிங்கான நகை
நீல பொன் சாப நுதல் ஆசையின்
தோடு அசையு(ம்) நீள் முகம் தாமரையினார் மொழிந்து
ஆர மொழி நேர் சுகம் போல கமுகான கந்தாரர் புய(ம்)
நேர் சுணங்கு ஆவி கிளை ஏர் சிறந்தார் – மலை இரண்டு போல

நீள் இபம் கோடு இள நீர் தேன் இருந்த ஆர முலை
நீடு அலங்கார சரமோடு அடைந்தார் மருவி
நீள் மணம் சாறு பொழி அவ் வ(ள்)ளம் போது இவையில்
நீல வண்டு ஏவிய நல் காமன் அங்கார(ம்) நிறை
நேச சந்தான அல்குல் காம பண்டார அமுதை
நேரு சம்போகர் இடை நூல் ஒளிர்ந்து ஆசை உயிர் – சம்பையார்

அம்சாலு பொன் தோகை அமை பாளிதம் சூழ் சரண
தாள் சிலம்பு ஓலம் இடவே நடந்து ஆன நடை
சாதி சந்தான எகின(ம்) மார்பர் அம் தோகை என
தான் எழும் கோல விலை மாதர் இன்பு ஆர் கலவி
தாவு கொண்டே கலிய நோய்கள் கொண்டே பிறவி
தான் அடைந்து ஆழும் அடியேன் இடம் சாலும் வினை – அஞ்சி ஓட

தார் கடம்பு ஆடு கழல் பாத செந்தாமரைகள்
தாழ் பெரும் பாதை வழியே படிந்தே வருகு
தாபம் விண்டே அமுத வாரி உண்டே பசிகள்
தாபமும் தீர துகிர் போல் நிறம் காழ் கொள் உரு
சாரவும் சோதி முருகா எனும் காதல் கொடு
தான் இருந்து ஓத இரு ஓர் அகம் பேறு உறுக – விஞ்சை தாராய்

சூலி எம் தாய் கவுரி மோக சங்காரி குழை
தோடு கொண்டு ஆடு சிவகாம சுந்தாரி ந(ல்)ல
தூள் அணைந்து ஆளி நிருவாணி அம் காளி கலை
தோகை செந்தாமரையின் மாது நின்றே துதி செய்
தூய அம்பா கழை கொள் தோளி பங்காள க்ருபை
தோய் பரன் சேய் எனவுமே பெரும் பார் புகழும் – விந்தையோனே

சூர சங்கார சுரர் லோக பங்கா அறுவர்
தோகை மைந்தா குமர வேள் கடம்பு ஆர தொடை
தோள கண்டா பரம தேசிக அந்தா அமரர்
தோகை பங்கா எனவே வேத ஆகமம் சூழ் சுருதி
தோதகம் பாட மலை ஏழு துண்டாய் எழுவர்
சோரி கொண்டு ஆறு வர வேல் எறிந்தே நடனமும – கொள் வேலா

மாலியன் பாற ஒரு ஆடகன் சாக மிகு
வாலியும் பாழி மரமோடு கும்பாகனனும்
ஆழியும் கோர வலி இராவணன் பாற விடும்
ஆசுகன் கோல முகிலோன் உகந்து ஓதி இடையர்
மாதுடன் கூடி விளையாடு(ம்) சம்போக திரு
மார்பகன் காண முடியோன் அணங்கான மதி – ஒன்றும் ஆனை

மார்புடன் கோடு தன பாரமும் சேர இடை
வார் துவண்டு ஆட முகமோடு உகந்து ஈர
ரச வாய் இதம் கோதி மணி நூபுரம் பாட மண
ஆசை கொண்டாடும் மயிலாளி துங்கா குறவி
மாது பங்கா மறை குலாவு செம் கோடை நகர்
வாழ வந்தாய் கரிய மால் அயன் தேவர் புகழ் – தம்பிரானே

English

neelamanj Anakuzhal mAlaivaN dOdukathi
needupan thAduvizhi yArpaLing kAnanakai
neelapon sApanutha lAsaiyin thOdasaiyu
neeLmukan thAmaraiyi nArmozhin thAramozhi
nErsukam pOlakamu kAnakan thArarpuya
nErsuNang kAvikiLai yErsiRan thArmalaiyi – raNdupOla

neeLipang kOdiLanir thEnirun thAramulai
needalang kArasara mOdadain thArmaruvi
neeLmaNanj chARupozhi yAvaLam pOthivaiyi
neelavaN dEviyanal kAmanang kAraniRai
nEsasan thAnaalkul kAmapaN dAramuthai
nErusam pOkaridai nUloLirn thAsaiyuyir – sampaiyAranj


chAlupon thOkaiyamai pALithanj chUzhcharaNa
thALsilam pOlamida vEnadan thAnanadai
sAthisan thAnekina mArparan thOkaiyena
thAnezhung kOlavilai mAtharin pArkalavi
thAvukoN dEkaliya nOykaLkoN dEpiRavi
thAnadain thAzhumadi yEnidanj chAlumvinai – yanjiyOdath

thArkadam pAdukazhal pAthasen thAmaraikaL
thAzhperum pAthaivazhi yEpadin thEvaruku
thApamviN dEyamutha vAriyuN dEpasikaL
thApamun theerathukir pOniRang kAzhkoLuru
sAravun jOthimuru kAvenung kAthalkodu
thAnirun thOthairu vOrakam pERuRuka – vinjaithArAy

cUliyen thAykavuri mOkasang kArikuzhai
thOdukoN dAdusiva kAmasun thArinala
thULaNain thALiniru vANiyang kALikalai
thOkaisen thAmaraiyin mAthunin REthuthisey
thUyaam pAkazhaikoL thOLipang kALakrupai
thOyparan sEyenavu mEperum pArpukazhum – vinthaiyOnE

cUrasang kArasurar lOkapang kAvaRuvar
thOkaimain thAkumara vELkadam pArathodai
thOLakaN dAparama thEsikan thAvamarar
thOkaipang kAenavE thAkamanj cUzhsuruthi
thOthakam pAdamalai yEzhuthuN dAyezhuvar
sOrikoN dARuvara vEleRin thEnadana – mungkoLvElA

mAliyan pARavoru Adakan sAkamiku
vAliyum pAzhimara mOdukum pAkananu
mAzhiyung kOravali rAvaNan pARavidu
mAsukan kOlamuki lOnukan thOthidaiyar
mAthudan kUdiviLai yAdusam pOkathiru
mArpakan kANamudi yOnaNang kAnamathi – yonRumAnai

mArpudan kOduthana pAramunj chEraidai
vArthuvaN dAdamuka mOdukan theerarasa
vAyithang kOthimaNi nUpuram pAdamaNa
vAsaikoN dAdumayi lALithung kAkuRavi
mAthupang kAmaRaiku lAvuseng kOdainakar
vAzhavan thAykariya mAlayan thEvarpukazh – thambirAnE.

English Easy Version

neela manjAna kuzhal mAlai vaNdOdu kathi
needu panthAdu vizhiyAr paLingAna nakai
neela pon sApa nuthal Asaiyin thOdu asaiyu(m)
neeL mukam thAmaraiyinAr mozhinthu Ara mozhi
nEr sukam pOla kamukAna kanthArar puya(m)
nEr suNangu Avi kiLai Er siRanthAr malai – iraNdu pOla

neeL ipam kOdu iLa neer thEn iruntha Ara mulai
needu alangAra saramOdu adainthAr maruvi
neeL maNam chARu pozhi av va(L)Lam pOthu ivaiyil
neela vaNdu Eviya nal kAman angAra(m) niRai
nEsa santhAna alkul kAma paNdAra amuthai
nEru sampOkar idai nUl oLirnthu Asai uyir – sampaiyAr amchAlu

pon thOkai amai pALitham cUzh saraNa
thAL silampu Olam idavE nadanthu Ana nadai
sAthi santhAna ekina(m) mArpar am thOkai ena
thAn ezhum kOla vilai mAthar inpu Ar kalavi
thAvu koNdE kaliya nOykaL koNdE piRavi
thAn adainthu Azhum adiyEn idam chAlum – vinai anji Oda

thAr kadampu Adu kazhal pAtha senthAmaraikaL
thAzh perum pAthai vazhiyE padinthE varuku
thApam viNdE amutha vAri uNdE pasikaL
thApamum theera thukir pOl niRam kAzh koL uru
sAravum jOthi murukA enum kAthal kodu
thAn irunthu Otha iru Or akam pERu uRuka – vinjai thArAy

cUli em thAy kavuri mOka sangAri kuzhai
thOdu koNdu Adu sivakAma sunthAri na(l)la
thUL aNainthu ALi niruvANi am kALi
kalai thOkai senthAmaraiyin mAthu ninRE thuthi sey
thUya ampA kazhai koL thOLi pangALa krupai
thOy paran sEy enavumE perum pAr pukazhum – vinthaiyOnE

cUra sangAra surar lOka pangA aRuvar
thOkai mainthA kumara vEL kadampu Ara thodai
thOLa kaNdA parama thEsika anthA amarar
thOkai pangA enavE vEtha Akamam cUzh suruthi
thOthakam pAda malai Ezhu thuNdAy ezhuvar
chOri koNdu ARu vara vEl eRinthE nadanamum – koL vElA

mAliyan pARa oru Adakan sAka miku
vAliyum pAzhi maramOdu kumpAkananum
Azhiyum kOra vali irAvaNan pARa vidum
Asukan kOla mukilOn ukanthu Othi idaiyar
mAthudan kUdi viLaiyAdu(m) sampOka thiru
mArpakan kANa mudiyOn aNangAna mathi – onRum Anai

mArpudan kOdu thana pAramum sEra idai
vAr thuvaNdu Ada mukamOdu ukanthu eera rasa
vAy itham kOthi maNi nUpuram pAda maNa
Asai koNdAdum mayilALi thungA kuRavi
mAthu pangA maRai kulAvu sem kOdai nakar
vAzha vanthAy kariya mAl ayan thEvar pukazh – thambirAnE.