திருப்புகழ் 593 பொன்றலைப் பொய் (திருச்செங்கோடு)

Thiruppugal 593 Pondralaippoi

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தந்த தத்தத் தந்த தத்தத்
தந்த தத்தத் தந்த தத்தத்
தந்த தத்தத் தந்த தத்தத் – தனதான

பொன்ற லைப்பொய்க் கும்பி றப்பைத்
தும்ப றுத்திட் டின்று நிற்கப்
புந்தி யிற்சற் றுங்கு றிக்கைக் – கறியாமே

பொங்கி முக்கிச் சங்கை பற்றிச்
சிங்கி யொத்தச் சங்க டத்துப்
புண்ப டைத்துக் கஞ்ச மைக்கட் – கொடியார்மேல்

துன்று மிச்சைப் பண்ட னுக்குப்
பண்ப ளித்துச் சம்ப்ர மித்துத்
தும்பி பட்சிக் கும்ப்ர சச்செய்ப் – பதிமீதே

தொண்டு பட்டுத் தெண்ட னிட்டுக்
கண்டு பற்றத் தண்டை வர்க்கத்
துங்க ரத்தப் பங்க யத்தைத் – தருவாயே

குன்றெ டுத்துப் பந்த டித்துக்
கண்சி வத்துச் சங்க ரித்துக்
கொண்ட லொத்திட் டிந்த்ர னுக்கிச் – சுரலோகா

கொம்பு குத்திச் சம்ப ழுத்தித்
திண்ட லத்திற் றண்டு வெற்பைக்
கொண்ட முக்கிச் சண்டை யிட்டுப் – பொரும்வேழம்

சென்று ரித்துச் சுந்த ரிக்கச்
சந்த விர்த்துக் கண்சு கித்துச்
சிந்தை யுட்பற் றின்றி நித்தக் – களிகூருஞ்

செண்ப கத்துச் சம்பு வுக்குத்
தொம்ப தத்துப் பண்பு ரைத்துச்
செங்கு வட்டிற் றங்கு சொக்கப் – பெருமாளே.

பதம் பிரித்தது

தந்த தத்தத் தந்த தத்தத்
தந்த தத்தத் தந்த தத்தத்
தந்த தத்தத் தந்த தத்தத் – தனதான

பொன்றலைப் பொய்க்கும் பிறப்பைத்
தும்பு அறுத்திட்டு இன்று நிற்கப்
புந்தியில் சற்றும் குறிக்கைக்கு – அறியாமே

பொங்கி முக்கிச் சங்கை பற்றிச்
சிங்கி ஒத்தச் சங்கடத்துப்
புண் படைத்துக் கஞ்ச மைக் கண் – கொடியார் மேல்

துன்றும் இச்சைப் பண்டனுக்குப்
பண்பு அளித்துச் சம்ப்ரமித்து
தும்பி பட்சிக்கும் ப்ரசச் செய்ப்பதி – மீதே

தொண்டு பட்டுத் தெண்டனிட்டு
கண்டு பற்றத் தண்டை வர்க்கத்
துங்க ரத்தப் பங்கயத்தைத் – தருவாயே

குன்று எடுத்துப் பந்தடித்துக்
கண் சிவத்துச் சங்கரித்துக்
கொண்டல் ஒத்திட்டு இந்திரனுக்கு இச் – சுர லோகா

கொம்பு குத்திச் சம்பு அழுத்தித்
திண் தலத்தில் தண்டு வெற்பைக்
கொண்டு அமுக்கிச் சண்டை இட்டுப் – பொரும் வேழம்

சென்று உரித்துச் சுந்தரிக்கு
அச்சம் தவிர்த்துக் கண் சுகித்துச்
சிந்தையுள் பற்று இன்றி நித்த(ம்) – களி கூரும்

செண்பகத்துச் சம்புவுக்குத்
தொம் பதத்துப் பண்பு உரைத்து
செங்குவட்டில் தங்கு சொக்கப் – பெருமாளே.

English

ponRa laippoyk kumpi Rappaith
thumpa Ruththit tinRu niRkap
punthi yiRchat Rungu Rikkaik – kaRiyAmE

pongi mukkic changai patRic
chingi yoththac changa daththup
puNpa daiththuk kanja maikkat – kodiyArmEl

thunRu micchaip paNda nukkup
paNpa Liththuc champra miththuth
thumpi patchik kumpra saccheyp – pathimeethE

thoNdu pattuth theNda nittuk
kaNdu patRath thaNdai varkkath
thunga raththap panga yaththaith – tharuvAyE

kunRe duththup pantha diththuk
kaNsi vaththuc changa riththuk
koNda loththit tinthra nukkic – churalOkA

kompu kuththic champa zhuththith
thiNda laththit RaNdu veRpaik
koNda mukkic chaNdai yittup – porumvEzham

senRu riththuc chuntha rikkac
chantha virththuk kaNsu kiththuc
chinthai yutpat RinRi niththak – kaLikUrum

seNpa kaththuc champu vukkuth
thompa thaththup paNpu raiththuc
chengu vattit Rangu chokkap – perumALE.

English Easy Version

ponRalaip poykkum piRappaith
thumpu aRuththittu inRu niRkap
punthiyil satRum kuRikkaikku – aRiyAmE

pongi mukkic changai patRic
chingi oththac changadaththup
puN padaiththuk kanja maik kaN – kodiyAr mEl

thunRum icchaip paNdanukkup
paNpu aLiththuc champramiththu
thumpi patchikkum prasac cheyppathi – meethE

thoNdu pattuth theNdanittu
kaNdu patRath thaNdai varkkath
thunga raththap pangayaththaith – tharuvAyE

kunRu eduththup panthadiththuk
kaN sivaththuc changariththuk
koNdal oththittu inthiranukku ic – chura lOkA

kompu kuththic champu azhuththith
thiN thalaththil thaNdu veRpaik
koNdu amukkic chaNdai ittup – porum vEzham

senRu uriththuc chuntharikku
accham thavirththuk kaN sukiththuc
chinthaiyuL patRu inRi niththa(m) – kaLi kUrum

seNpakaththuc champuvukkuth
thom pathaththup paNpu uraiththu
chenguvattil thangu chokkap – perumALE.