Thiruppugal 597 Alakalapadappai
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தான தானன தத்தன தத்தன
தான தானன தத்தன தத்தன
தான தானன தத்தன தத்தன – தனதான
ஆல காலப டப்பைம டப்பியர்
ஈர வாளற வெற்றும்வி ழிச்சியர்
யாவ ராயினு நத்திய ழைப்பவர் – தெருவூடே
ஆடி யாடிந டப்பதொர் பிச்சியர்
பேசி யாசைகொ டுத்தும ருட்டிகள்
ஆசை வீசிய ணைக்குமு லைச்சியர் – பலரூடே
மாலை யோதிவி ரித்துமு டிப்பவர்
சேலை தாழநெ கிழ்த்தரை சுற்றிகள்
வாசம் வீசும ணத்தில்மி னுக்கிகள் – உறவாலே
மாயை யூடுவி ழுத்திய ழுத்திகள்
காம போகவி னைக்குளு னைப்பணி
வாழ்வி லாமல்ம லச்சன னத்தினி – லுழல்வேனோ
மேலை வானொரு ரைத்தச ரற்கொரு
பால னாகியு தித்தொர்மு நிக்கொரு
வேள்வி காவல்ந டத்திய கற்குரு – அடியாலே
மேவி யேமிதி லைச்சிலை செற்றுமின்
மாது தோள்தழு விப்பதி புக்கிட
வேறு தாயட விக்குள்வி டுத்தபி – னவனோடே
ஞால மாதொடு புக்கவ னத்தினில்
வாழும் வாலிப டக்கணை தொட்டவ
னாடி ராவண னைச்செகு வித்தவன் – மருகோனே
ஞான தேசிக சற்குரு உத்தம
வேல வாநெரு வைப்பதி வித்தக
நாக மாமலை சொற்பெற நிற்பதொர் – பெருமாளே.
பதம் பிரித்தது
தான தானன தத்தன தத்தன
தான தானன தத்தன தத்தன
தான தானன தத்தன தத்தன – தனதான
ஆலகால படப் பை மடப்பியர்
ஈர வாள் அற எற்றும் விழிச்சியர்
யாவராயினும் நத்தி அழைப்பவர் – தெரு ஊடே
ஆடி ஆடி நடப்பது ஒர் பிச்சியர்
பேசி ஆசை கொடுத்து மருட்டிகள்
ஆசை வீசி அணைக்கும் முலைச்சியர் – பலர் ஊடே
மாலை ஓதி விரித்து முடிப்பவர்
சேலை தாழ நெகிழ்த்து அரை சுற்றிகள்
வாசம் வீசு மணத்தில் மினுக்கிகள் – உறவாலே
மாயை ஊடு விழுத்தி அழுத்திகள்
காம போக வினைக்குள் உனைப் பணி
வாழ்வு இலாமல் மலச் சனனத்தினில் – உழல்வேனோ
மேலை வானொர் உரைத் தசரற்கு ஒரு
பாலனாகி உதித்து ஒர் முநிக்கு ஒரு
வேள்வி காவல் நடத்தி அ(க்) கற்கு உரு – அடியாலே
மேவியே மிதிலைச் சிலை செற்று மின்
மாது தோள் தழுவிப் பதி புக்கிட
வேறு தாய் அடவிக்குள் விடுத்த – பின்னவனோடே
ஞால மாதொடு புக்கு அ(வ்)வனத்தினில்
வாழும் வாலி படக் கணை தொட்டவன்
நாடி ராவணனைச் செகுவித்தவன் – மருகோனே
ஞான தேசிக சற் குரு உத்தம
வேலவா நெருவைப்பதி வித்தக
நாக மா மலை சொற் பெற நிற்பது ஒர் – பெருமாளே.
English
Ala kAlapa dappaima dappiyar
eera vALaRa vetRumvi zhicchiyar
yAva rAyinu naththiya zhaippavar – theruvUdE
Adi yAdina dappathor picchiyar
pEsi yAsaiko duththuma ruttikaL
Asai veesiya Naikkumu laicchiyar – palarUdE
mAlai yOthivi riththumu dippavar
sElai thAzhane kizhththarai sutRikaL
vAsam veesuma Naththilmi nukkikaL – uRavAlE
mAyai yUduvi zhuththiya zhuththikaL
kAma pOkavi naikkuLu naippaNi
vAzhvi lAmalma lacchana naththini – luzhalvEnO
mElai vAnoru raiththasa raRkoru
pAla nAkiyu thiththormu nikkoru
vELvi kAvalna daththiya kaRkuru – adiyAlE
mEvi yEmithi laicchilai setRumin
mAthu thOLthazhu vippathi pukkida
vERu thAyada vikkuLvi duththapi – navanOdE
njAla mAthodu pukkava naththinil
vAzhum vAlipa dakkaNai thottava
nAdi rAvaNa naiccheku viththavan – marukOnE
njAna thEsika saRguru uththama
vEla vAneru vaippathi viththaka
nAka mAmalai soRpeRa niRpathor – perumALE.
English Easy Version
AlakAla padap pai madappiyar
eera vAL aRa etRum vizhicchiyar
yAvarAyinum naththi azhaippavar – theru UdE
Adi Adi nadappathu or picchiyar
pEsi Asai koduththu maruttikaL
Asai veesi aNaikkum mulaicchiyar – palar UdE
mAlai Othi viriththu mudippavar
sElai thAzha nekizhththu arai sutRikaL
vAsam veesu maNaththil minukkikaL – uRavAlE
mAyai Udu vizhuththi azhuththikaL
kAma pOka vinaikkuL unaip paNi
vAzhvu ilAmal malas sananaththinil – uzhalvEnO
mElai vAnor uraith thasaraRku oru
pAlanAki uthiththu or munikku oru
vELvi kAval nadaththi a(k) kaRku uru – adiyAlE
mEviyE mithilaic chilai setRu min
mAthu thOL thazhuvip pathi pukkida
vERu thAy adavikkuL viduththa – pinnavanOdE
njAla mAthodu pukku a(v)vanaththinil
vAzhum vAli padak kaNai thottavan
nAdi rAvaNanais sekuviththavan – marukOnE
njAna thEsika saR kuru uththama
vElavA neruvaippathi* viththaka
nAka mA malai soR peRa niRpathu or – perumALE