திருப்புகழ் 599 தாமா தாம ஆலாபா (திருச்செங்கோடு)

Thiruppugal 599 Thamathamaalaba

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தானா தானா தானா தானா
தானா தானத் – தனதான

தாமா தாமா லாபா லோகா
தாரா தாரத் – தரணீசா

தானா சாரோ பாவா பாவோ
நாசா பாசத் – தபராத

யாமா யாமா தேசா ரூடா
யாரா யாபத் – தெனதாவி

யாமா காவாய் தீயே னீர்வா
யாதே யீமத் – துகலாமோ

காமா காமா தீனா நீணா
காவாய் காளக் – கிரியாய்கங்

காளா லீலா பாலா நீபா
காமா மோதக் – கனமானின்

தேமார் தேமா காமீ பாகீ
தேசா தேசத் – தவரோதுஞ்

சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப் – பெருமாளே.

பதம் பிரித்தது

தானா தானா தானா தானா
தானா தானத் – தனதான

தாமா தாம ஆலாபா லோக
ஆதாரா தார(ம்) – தரணி ஈசா

தான ஆசாரோ பாவா பாவோ
நாசா பாசத்து – அபராத

யாமா யாமா தேசார் ஊடு
ஆராயா ஆபத்து – எனது ஆவி

ஆமா காவாய் தீயேன் நீர்
வாயாதே ஈமத்து – உகலாமோ

காமா காம ஆதீனா நீள் நாகா
வாய் காள – கிரியாய்

கங்காளா லீலா பாலா நீபா
காம ஆமோதக் – கன மானின்

தேம் ஆர் தே மா காமீ பாகீ
தேசா தேசத்தவர் – ஓதும்

சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப் – பெருமாளே.

English

thAmA thAmA lAbA lOkA
thArA thArath – tharaNeesA

thAnA sArO bAvA pAvO
nAsA pAsath – thaparAtha

yAmA yAmA thEsA rUdA
yArA yApath – thenathAvi

yAmA kAvAy theeyE neervA
yAthE yeemath – thukalAmO

kAmA kAmA theenA neeNA
kAvAy kALak – kiriyAykang

kALA leelA bAlA neepA
kAmA mOthak – kanamAnin

thEmAr thEmA kAmee pAkee
thEsA thEsath – thavarOthum

sEyE vELE pUvE kOvE
thEvE thEvap – perumALE.

English Easy Version

thAmA thAma AlAbA lOka
AthArA thAra(m) – tharaNi eesA

thAna AsArO bAvA pAvO
nAsA pAsaththu – aparAtha

yAmA yAmA thEsAr Udu
ArAyA Apaththu – enathu Avi

AmA kAvAy theeyEn neer
vAyAthE eemaththu – ukalAmO

kAmA kAma AtheenA neeL
nAkA vAy kALa – kiriyAy

kangkALA leelA bAlA neepA
kAma AmOthak – kana mAnin

thEm Ar thE mA kAmee pAkee
thEsA thEsaththavar – Othum

sEyE vELE pUvE kOvE
thEvE thEvap – perumALE