Thiruppugal 600 Aththugirinnal
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தத்த தனதனன தத்த தனதனன
தத்த தனதனன – தனதான
அத்து கிரினலத ரத்து அலனவள
கத்து வளர்செய்புள – கிதபூத
ரத்தி ருகமலக ரத்தி தயமுருகி
யத்தி யிடனுறையு – நெடுமாம
ரத்து மலர்கனிய லைத்து வருமிடைத
லத்து ரகசிகரி – பகராதே
யத்தி மலவுடல்ந டத்தி யெரிகொள்நிரை
யத்தி னிடையடிமை – விழலாமோ
தத்து கவனவரி ணத்து வுபநிடவி
தத்து முநியுதவு – மொழியாறுத்
தத்தை நறவையமு தத்தை நிகர்குறவர்
தத்தை தழுவியப – னிருதோளா
தத்து ததிதுரக தத்து மிகுதிதிசர்
தத்து மலையவுணர் – குலநாகந்
தத்த மிசைமரக தத்த மனியமயில்
தத்த விடுமமரர் – பெருமாளே.
பதம் பிரித்தது
தத்த தனதனன தத்த தனதனன
தத்த தனதனன – தனதான
அத் துகிரின் நல் அதரத்து அல் அன
அளகத்து வளர் செய் – புளகித பூதரத்து
இரு கமல கரத்து இதயம் உருகி
அத்தி இடன் உறையும் – நெடு
மாமரத்து மலர் கனி அலைத்து வரும் இடைத்
தலத்து உரக சிகரி – பகராதே
அத்தி மல உடல் நடத்தி எரி கொள்
நிரையத்தின் இடை அடிமை – விழலாமோ
தத்து கவன அரிணத்து உபநிட
விதத்து முநி உதவு – மொழியால்
துத்தத்தை நறவை அமுதத்தை நிகர் குறவர்
தத்தை தழுவிய – ப(ன்)னிரு தோளா
தத்து உததி துரகதத்து மிகு திதிசர்
தத்து மலை அவுணர் – குல நாகம்
தத்த மிசை மரகதத் தமனிய மயில்
தத்த விடும் அமரர் – பெருமாளே
English
aththu kirinalatha raththu alanavaLa
kaththu vaLarseypuLa – kithapUtha
raththi rukamalaka raththi thayamuruki
yaththi yidanuRaiyu – nedumAma
raththu malarkaniya laiththu varumidaitha
laththu rakasikari – pakarAthE
yaththi malavudalna daththi yerikoLnirai
yaththi nidaiyadimai – vizhalAmO
thaththu kavanavari Naththu vupanidavi
thaththu muniyuthavu – mozhiyARuth
thaththai naRavaiyamu thaththai nikarkuRavar
thaththai thazhuviyapa – niruthOLA
thaththu thathithuraka thaththu mikuthithisar
thaththu malaiyavuNar – kulanAkam
thaththa misaimaraka thaththa maniyamayil
thaththa vidumamarar – perumALE.
English Easy Version
ath thukirin nal atharaththu al ana
aLakaththu vaLar sey – puLakitha
pUtharaththu iru kamala karaththu ithayam uruki
aththi idan uRaiyum – nedu
mAmaraththu malar kani alaiththu varum idaith
thalaththu uraka sikari – pakarAthE
aththi mala udal nadaththi eri koL
niraiyaththin idai adimai – vizhalAmO
thaththu kavana ariNaththu upanida
vithaththu muni uthavu – mozhiyAl
thuththaththai naRavai amuthaththai nikar kuRavar
Thaththai thazhuviya – pa(n)niru thOLA
thaththu uthathi thurakathaththu miku thithisar
thaththu malai avuNar – kula nAkam
Thaththa misai marakathath thamaniya mayil
thaththa vidum amarar – perumALE.