திருப்புகழ் 606 கட்ட மன்னும் (கொல்லிமலை)

Thiruppugal 606 Kattamannum

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தத்த தன்ன தய்ய தத்த தன்ன தய்ய
தத்த தன்ன தய்ய – தனதான

கட்ட மன்னு மள்ளல் கொட்டி பண்ணு மைவர்
கட்கு மன்னு மில்ல – மிதுபேணி

கற்ற விஞ்ஞை சொல்லி யுற்ற வெண்மை யுள்ளு
கக்க எண்ணி முல்லை – நகைமாதர்

இட்ட மெங்ங னல்ல கொட்டி யங்ங னல்கி
யிட்டு பொன்னை யில்லை – யெனஏகி

எத்து பொய்ம்மை யுள்ள லுற்று மின்மை யுள்ளி
யெற்று மிங்ங னைவ – தியல்போதான்

முட்ட வுண்மை சொல்லு செட்டி திண்மை கொள்ள
முட்ட நன்மை விள்ள – வருவோனே

முத்து வண்ண வல்லி சித்ர வண்ண வல்லி
முத்தி விண்ண வல்லி – மணவாளா

பட்ட மன்ன வல்லி மட்ட மன்ன வல்லி
பட்ட துன்னு கொல்லி – மலைநாடா

பச்சை வன்னி யல்லி செச்சை சென்னி யுள்ள
பச்சை மஞ்ஞை வல்ல – பெருமாளே.

பதம் பிரித்தது

தத்த தன்ன தய்ய தத்த தன்ன தய்ய
தத்த தன்ன தய்ய – தனதான

கட்ட மன்னும் அள்ளல் கொட்டி பண்ணும் ஐவர்கட்கு
மன்னும் இல்லம் – இது பேணி

கற்ற விஞ்ஞை சொல்லி உற்ற எண்மை உள்
உகக்க எண்ணி முல்லை – நகை மாதர்

இட்டம் எங்ஙன் நல்ல கொட்டி அங்ஙன் நல்கி
இட்டு பொன்னை இல்லை – என ஏகி

எத்து பொய்ம்மை உள்ளல் உற்றும் இன்மை உள்ளி
எற்றும் இங்ஙன் நைவது – இயல்போ தான்

முட்ட உண்மை சொல்லு செட்டி திண்மை கொள்ள
முட்ட நன்மை விள்ள – வருவோனே

முத்து வண்ண வல்லி சித்ர வண்ண வல்லி
முத்தி விண்ண வல்லி – மணவாளா

பட்டம் மன்னு அ(வ்) வல்லி மட்ட மன்ன வல்லிவ
பட்ட துன்னு கொல்லி – மலை நாடா

பச்சை வன்னி அல்லி செச்சை சென்னி உள்ள
பச்சை மஞ்ஞை வல்ல – பெருமாளே

English

katta mannu maLLal kotti paNNu maivar
katku mannu milla – mithupENi

katRa vinjnjai solli yutRa veNmai yuLLu
kakka eNNi mullai – nakaimAthar

itta mengnga nalla kotti yangnga nalki
yittu ponnai yillai – yenaEki

eththu poymmai yuLLa lutRu minmai yuLLi
yetRu mingnga naiva – thiyalpOthAn

mutta vuNmai sollu chetti thiNmai koLLa
mutta nanmai viLLa – varuvOnE

muththu vaNNa valli cithra vaNNa valli
muththi viNNa valli – maNavALA

patta manna valli matta manna valli
patta thunnu kolli – malainAdA

pacchai vanni yalli secchai cenni yuLLa
pacchai manjnjai valla – perumALE.

English Easy Version

katta mannum aLLal kotti paNNum aivarkatku
mannum illam – ithu pENi

katRa vinjnjai solli utRa eNmai uL
ukakka eNNi mullai – nakai mAthar

ittam engngan nalla kotti angngan nalki
ittu ponnai illai – ena Eki

eththu poymmai uLLal utRum inmai uLLi
etRum ingngan naivathu – iyalpO thAn

mutta uNmai sollu chetti thiNmai koLLa
mutta nanmai viLLa – varuvOnE

muththu vaNNa valli sithra vaNNa valli
muththi viNNa valli – maNavALA

pattam mannu a(v) valli matta manna valli
patta thunnu kolli – malai nAdA

pacchai vanni alli secchai cenni uLLa
pacchai manjnjai valla – perumALE