Thiruppugal 607 Thollaimudhal
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தய்யதன தானந்த தய்யதன தானந்த
தய்யதன தானந்த – தனதான
தொல்லைமுதல் தானொன்று மெல்லியிரு பேதங்கள்
சொல்லுகுண மூவந்த – மெனவாகி
துய்யசதுர் வேதங்கள் வெய்யபுல னோரைந்து
தொய்யுபொரு ளாறங்க – மெனமேவும்
பல்லபல நாதங்கள் அல்கபசு பாசங்கள்
பல்குதமிழ் தானொன்றி – யிசையாகிப்
பல்லுயிரு மாயந்த மில்லசொரு பாநந்த
பெளவமுற வேநின்ற – தருள்வாயே
கல்லுருக வேயின்கண் அல்லல்படு கோவம்பு
கல்வருக வேநின்று – குழலூதுங்
கையன் மிசை யேறும்பன் நொய்யசடை யோனெந்தை
கைதொழமெய்ஞ் ஞானஞ்சொல் – கதிர்வேலா
கொல்லைமிசை வாழ்கின்ற வள்ளிபுன மேசென்று
கொள்ளைகொளு மாரன்கை – யலராலே
கொய்துதழை யேகொண்டு செல்லுமழ வாகந்த
கொல்லிமலை மேனின்ற – பெருமாளே.
பதம் பிரித்தது
தய்யதன தானந்த தய்யதன தானந்த
தய்யதன தானந்த – தனதான
தொல்லைமுதல் தானொன்று மெல்லியிரு பேதங்கள்
சொல்லுகுண மூவு – அந்தமெனவாகி
துய்யசதுர் வேதங்கள் வெய்யபுலன் ஓரைந்து
தொய்யுபொருள் ஆறங்கம் – எனமேவும்
பல்லபல நாதங்கள் அல்கபசு பாசங்கள்
பல்குதமிழ் தானொன்றி – யிசையாகி
பல்லுயிருமாய் அந்தமில்ல சொருபாநந்த
பெளவமுறவே நின்ற – தருள்வாயே
கல்லுருக வேயின்கண் அல்லல்படு கோ அம் புகல்
வருகவே நின்று – குழலூதுங்
கையன் மிசையேறு உம்பன் நொய்யசடையோன் எந்தை
கைதொழமெய்ஞ் ஞானஞ்சொல் – கதிர்வேலா
கொல்லைமிசை வாழ்கின்ற வள்ளிபுனமேசென்று
கொள்ளைகொளு – மாரன்கையலராலே
கொய்துதழையேகொண்டு செல்லுமழவாகந்த
கொல்லிமலை மேனின்ற – பெருமாளே
English
thollaimudhal thAnondru melliyiru bEdhangaL
solluguNa mUvandham – enavAgi
thuyyachathur vEdhangaL veyyapula nOraindhu
thoyyuporu LARangam – enamEvum
pallapala nAdhangaL algapasu pAsangaL
palguthamizh thAnondri – isaiyAgip
palluyiru mAyantha millasoru pAnandha
bauvamuRa vEnindra – dharuLvAyE
kalluruga vEyinkaN allalpadu gO ampu
galvaruga vEnindru – kuzhalUdhum
kaiyanmisai ERumban noyyasadai yOnendhai
kaithozhamey nyAnamsol – kadhirvElA
kollaimisai vAzhgindra vaLLipuna mEsendru
koLLaikoLu mArankai – alarAlE
koydhuthazhai yEkoNdu sellumazha vAkandha
kollimalai mEnindra – perumALE.
English Easy Version
thollaimudhal thAnondru melliyiru bEdhangaL
solluguNa mUvandham – enavAgi
thuyyachathur vEdhangaL veyyapula nOraindhu
thoyyuporuL ARangam – enamEvum
pallapala nAdhangaL algapasu pAsangaL
palguthamizh thAnondri – isaiyAgi
palluyiru mAyantha millasoru pAnandha
bauvamuRa vE nindra – dharuLvAyE
kalluruga vEyinkaN allalpadu gO ampugal
varugavE nindru – kuzhalUdhum
Kaiyan misai ERumban noyyasadai yOnendhai
kaithozhamey nyAnamsol – kadhirvElA
kollaimisai vAzhgindra vaLLipuna mEsendru
koLLaikoLu mArankai – alarAlE
koydhuthazhai yEkoNdu sellumazhavAkandha
kollimalai mEnindra – perumALE