Thiruppugal 613 Garudanmisaivaru
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனன தனதன தனன தனதன
தனன தனதன – தனதான
கருடன் மிசைவரு கரிய புயலென
கமல மணியென – வுலகோரைக்
கதறி யவர்பெயர் செருகி மனமது
கருதி முதுமொழி – களைநாடித்
திருடி யொருபடி நெருடி யறிவிலர்
செவியில் நுழைவன – கவிபாடித்
திரியு மவர்சில புலவர் மொழிவது
சிறிது முணர்வகை – யறியேனே
வருடை யினமது முருடு படுமகில்
மரமு மருதமு – மடிசாய
மதுர மெனுநதி பெருகி யிருகரை
வழிய வகைவகை – குதிபாயுங்
குருடி மலையுறை முருக குலவட
குவடு தவிடெழ – மயிலேறுங்
குமர குருபர திமிர தினகர
குறைவி லிமையவர் – பெருமாளே.
பதம் பிரித்தது
தனன தனதன தனன தனதன
தனன தனதன – தனதான
கருடன் மிசை வரு கரிய புயல் என
கமல மணி என – உலகோரை
கதறி அவர் பெயர் செருகி மனம் அது
கருதி முது மொழி – களை நாடி
திருடி ஒரு படி நெருடி அறிவிலர்
செவியில் நுழைவன – கவி பாடி
திரியும் அவர் சில புலவர் மொழிவது
சிறிதும் உணர் வகை – அறியேனே
வருடை இனம் அது முருடு படும் அகில்
மரமும் மருதமும் – அடி சாய
மதுரம் எனு(ம்) நதி பெருகி இரு கரை
வழிய வகை வகை – குதி பாயும்
குருடி மலை உறை முருக குல வட
குவடு தவிடு எழ – மயில் ஏறும்
குமர குருபர திமிர தினகர
குறைவில் இமையவர் – பெருமாளே
English
garudan misaivaru kariya puyalena
kamala maNiyena – vulakOraik
kathaRi yavarpeyar seruki manamathu
karuthi muthumozhi – kaLainAdith
thirudi yorupadi nerudi yaRivilar
seviyil nuzhaivana – kavipAdith
thiriyu mavarsila pulavar mozhivathu
siRithu muNarvakai – yaRiyEnE
varudai yinamathu murudu padumakil
maramu maruthamu – madisAya
mathura menunathi peruki yirukarai
vazhiya vakaivakai – kuthipAyung
kurudi malaiyuRai muruka kulavada
kuvadu thavidezha – mayilERung
kumara gurupara thimira thinakara
kuRaivi limaiyavar – perumALE.
English Easy Version
garudan misaivaru kariya puyalena
kamala maNiyena – ulakOrai
kkathaRi yavarpeyar seruki manamathu
karuthi muthumozhi – kaLainAdith
thirudi yorupadi nerudi yaRivilar
seviyil nuzhaivana – kavipAdith
thiriyu mavarsila pulavar mozhivathu
siRithu muNarvakai – yaRiyEnE
varudai yinamathu murudu padumakil
maramu maruthamu – madisAya
mathura menunathi peruki yirukarai
Vazhiya vakaivakai – kuthipAyung
kurudi malaiyuRai muruka kulavada
kuvadu thavidezha – mayilERung
kumara gurupara thimira thinakara
kuRaivi limaiyavar – perumALE.