திருப்புகழ் 618 அரிவையர்கள் (கநகமலை)

Thiruppugal 618 Arivaiyargal

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதனன தனன தந்தத்
தனதனன தனன தந்தத்
தனதனன தனன தந்தத் – தனதான

அரிவையர்கள் தொடரு மின்பத்
துலகுநெறி மிகம ருண்டிட்
டசடனென மனது நொந்திட் – டயராமல்

அநுதினமு முவகை மிஞ்சிச்
சுகநெறியை விழைவு கொண்டிட்
டவநெறியின் விழையு மொன்றைத் – தவிர்வேனோ

பரிதிமதி நிறைய நின்றஃ
தெனவொளிரு முனது துங்கப்
படிவமுக மவைகள் கண்டுற் – றகமேவும்

படர்கள்முழு வதும கன்றுட்
பரிவினொடு துதிபு கன்றெற்
பதயுகள மிசைவ ணங்கற் – கருள்வாயே

செருவிலகு மசுரர் மங்கக்
குலகிரிகள் நடுந டுங்கச்
சிலுசிலென வலைகு லுங்கத் – திடமான

செயமுதவு மலர்பொ ருங்கைத்
தலமிலகு மயில்கொ ளுஞ்சத்
தியைவிடுதல் புரியு முன்பிற் – குழகோனே

கருணைபொழி கிருபை முந்தப்
பரிவினொடு கவுரி கொஞ்சக்
கலகலென வருக டம்பத் – திருமார்பா

கரிமுகவர் தமைய னென்றுற்
றிடுமிளைய குமர பண்பிற்
கநககிரி யிலகு கந்தப் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதனன தனன தந்தத்
தனதனன தனன தந்தத்
தனதனன தனன தந்தத் – தனதான

அரிவையர்கள் தொடரு மின்பத்து
உலகுநெறி மிக மருண்டிட்டு
அசடனென மனது நொந்திட்டு – அயராமல்

அநுதினமும் உவகை மிஞ்சி
சுகநெறியை விழைவு கொண்டிட்டு
அவநெறியின் விழையும் ஒன்றைத் – தவிர்வேனோ

பரிதிமதி நிறைய நின்ற
அஃதெனவொளிரும் உனது துங்கப்
படிவமுக மவைகள் கண்டுற்று – அகமேவும்

படர்கள் முழுவதும் அகன்று
பரிவினொடு துதிபுகன்று
பதயுகள மிசை வணங்கற்கு – அருள்வாயே

செருவிலகு மசுரர் மங்க
குலகிரிகள் நடுநடுங்க
சிலுசிலென வலைகுலுங்க – திடமான

செயமுதவு மலர்பொருங்கை
தலமிலகும் அயில்கொளுஞ்
சத்தியை விடுதல் புரியு முன்பிற் – குழகோனே

கருணைபொழி கிருபை முந்த
பரிவினொடு கவுரி கொஞ்ச
கலகலென வரு கடம்பத் – திருமார்பா

கரிமுகவர் தமையனென்று
உற்றிடும் இளைய குமர பண்பிற்
கநககிரி யிலகு கந்தப் – பெருமாளே

English

arivaiyarkaL thodaru minpath
thulakuneRi mikama rundit
tacadenana manathu nonthit – tayarAmal

anuthinamu muvakai minjich
cukaneRiyai vizhaivu koNdit
tavaneRiyin vizhaiyu monRaith- thavirvEnO

parithimathi niRaiya ninRah
thenavoLiru munathu thungap
padivamuka mavaikaL kaNduR – RakamEvum

padarkaLmuzhu vathuma kanRut
parivinodu thuthipu kanReR
pathayukaLa micaiva NangaR – karuLvAyE

ceruvilaku macurar mangak
kulakirikaL naduna dungach
cilucelena valaiku lungath – thidamAna

ceyamuthavu malarpo rungkaith
thalamilaku mayilko Lunjcath
thiyaividuthal puriyu munpiR – kuzhakOnE

karunaipozhi kirupai munthap
parivinodu kavuri konjak
kalakalena varuka dampath – thirumArpa

karimukavar thamaiya nenRuR
RidumiLaiya kumara paNpiR
kanakakiri yilaku kanthap – perumALE.

English Easy Version

arivaiyarkaL thodaru minpaththu
ulakuneRi mika marunditta
acadenana manathu nonthit – tayarAmal

anuthinamu muvakai minjich
cukaneRiyai vizhaivu koNdittu
avaneRiyin vizhaiyu monRaith – thavirvEnO

parithimathi niRaiya ninRah
thenavoLirum unathu thungap
Padivamukam avaikaL kaNduRRu – akamEvum

padarkaLmuzhuvathum akanRu
utparivinodu thuthi pukanRu
eRpathayukaLa micai vaNangaRK – aruLvAyE

ceruvilakum acurar manga
kulakirikaL nadunadunga
cilucelena valaikulunga – thidamAna

ceyamuthavu malarporung kaith
thalamilakum ayilkoLunj caththiyai
viduthal puriyu munpiR – kuzhakOnE

karunaipozhi kirupai muntha
parivinodu kavuri konjak
kalakalena varuka dampath – thirumArpa

karimukavar thamaiya nenRuRRidum
iLaiya kumara paNpiR
kanakakiri yilaku kanthap – perumALE