திருப்புகழ் 11 தவள மதியம் (குன்றக்குடி)

Thiruppugal 11 Thavalamadhiyam

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனன தனன தனத்தந் -தனதான

தவள மதிய மெறிக்குந் -தணலாலே
சரச மதனன் விடுக்குங் -கணையாலே

கவன மிகவு முரைக்குங் -குயிலாலே
கருதி மிகவு மயக்கம் -படவோநான்

பவள நிகரு மிதழ்ப்பைங் -குறமானின்
பரிய வரையை நிகர்க்குந் -தனமேவுந்

திவளு மணிகள் கிடக்குந் -திருமார்பா
திகழு மயிலின் மலைக்கண் -பெருமாளே.

பதம் பிரித்தது

தனன தனன தனத்தந் -தனதான

தவள(ம்) மதியம் எறிக்கும் – தணலாலே
சரச மதனன் விடுக்கும் – கணையாலே

கவன(ம்) மிகவும் உரைக்கும் – குயிலாலே
கருதி மிகவு(ம்) மயக்கம் – படவோ நான்

பவள(ம்) நிகரும் இதழ்ப் பைங் – குறமானின்
பரிய வரையை நிகர்க்கும் – தனம் மேவும்

திவளு(ம்) மணிகள் கிடக்கும் – திருமார்பா
திகழு(ம்) மயிலின் மலை கண் – பெருமாளே.

English

thavaLa mathiya meRikkum – thaNalAlE
sarasa mathanan vidukkung – kaNaiyAlE

kavana mikavu muraikkung – kuyilAlE
karuthi mikavu mayakkam – padavOnAn

pavaLa nikaru mithazhppaing – kuRamAnin
pariya varaiyai nikarkkum – thanamEvum

thivaLu maNikaL kidakkum – thirumArpA
thikazhu mayilin malaikkaN – perumALE.

English Easy Version

thavaLa(m) mathiyam eRikkum – thaNalAlE
sarasa mathanan vidukkum – kaNaiyAlE

kavana(m) mikavum uraikkum – kuyilAlE
karuthi mikavu(m) mayakkam – padavO nAn

pavaLa(m) nikarum ithazhp paing – kuRamAnin
pariya varaiyai nikarkkum thanam – mEvum

thivaLu(m) maNikaL kidakkum – thirumArpA
thikazhu(m) mayilin malai kaN – perumALE.