திருப்புகழ் 632 குதலை மொழியினார் (கழுகுமலை)

Thiruppugal 632 Kudhalaimozhiyinar

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனன தனதனா தனத்த தானன
தனன தனதனா தனத்த தானன
தனன தனதனா தனத்த தானன – தனதான

குதலை மொழியினார் நிதிக்கொள் வாரணி
முலையை விலைசெய்வார் தமக்கு மாமயல்
கொடிது கொடிததால் வருத்த மாயுறு – துயராலே

மதலை மறுகிவா லிபத்தி லேவெகு
பதகர் கொடியவா ளிடத்தி லேமிக
வறுமை புகல்வதே யெனக்கு மோஇனி – முடியாதே

முதல வரிவிலோ டெதிர்த்த சூருடல்
மடிய அயிலையே விடுத்த வாகரு
முகிலை யனையதா நிறத்த மால்திரு – மருகோனே

கதலி கமுகுசூழ் வயற்கு ளேயளி
யிசையை முரலமா வறத்தில் மீறிய
கழுகு மலைமகா நகர்க்குள் மேவிய – பெருமாளே.

பதம் பிரித்தது

தனன தனதனா தனத்த தானன
தனன தனதனா தனத்த தானன
தனன தனதனா தனத்த தானன – தனதான

குதலை மொழியினார் நிதிக் கொள்வார் அணி
முலையை விலை செய்வார் தமக்கு மா மயல்
கொடிது கொடிது அதால் வருத்தமாய் உறு – துயராலே

மதலை மறுகி வாலிபத்திலே வெகு
பதகர் கொடியவாள் இடத்திலே
மிக வறுமை புகல்வதே எனக்குமோ இனி – முடியாதே

முதல வரி வி(ல்)லோடு எதிர்த்த சூர் உடல்
மடிய அயிலையே விடுத்தவா கரு
முகிலை அனையதா நிறத்த மால் திரு – மருகோனே

கதலி கமுகு சூழ் வயற்குளே அளி
இசையை முரல மா அறத்தில் மீறிய
கழுகு மலை மகா நகர்க்குள் மேவிய – பெருமாளே

English

kuthalai mozhiyinAr nithikkoL vAraNi
mulaiyai vilaiseyvAr thamakku mAmayal
kodithu kodithathAl varuththa mAyuRu – thuyarAlE

mathalai maRukivA lipaththi lEveku
pathakar kodiyavA Lidaththi lEmika
vaRumai pukalvathE yenakku mOini – mudiyAthE

muthala varivilO dethirththa cUrudal
madiya ayilaiyE viduththa vAkaru
mukilai yanaiyathA niRaththa mAlthiru – marukOnE

kathali kamukusUzh vayaRku LEyaLi
yisaiyai muralamA vaRaththil meeRiya
kazhuku malaimakA nakarkkuL mEviya – perumALE.

English Easy Version

kuthalai mozhiyinAr nithik koLvAr aNi
mulaiyai vilai seyvAr thamakku mA mayal
kodithu kodithu athAl varuththamAy uRu – thuyarAlE

mathalai maRuki vAlipaththilE veku
pathakar kodiyavAL idaththilE mika
vaRumai pukalvathE enakkumO ini – mudiyAthE

muthala vari vi(l)lOdu ethirththa cUr udal
madiya ayilaiyE viduththavA karu
mukilai anaiyathA niRaththa mAl thiru – marukOnE

kathali kamuku sUzh vayaRkuLE aLi
isaiyai murala mA aRaththil meeRiya
kazhuku malai makA nakarkkuL mEviya – perumALE