திருப்புகழ் 636 திருமகள் உலாவும் (கதிர்காமம்)

Thiruppugal 636 Thirumagalulavum

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதனன தான தனதனன தான
தனதனன தானத் – தனதான

திருமகளு லாவு மிருபுயமு ராரி
திருமருக நாமப் – பெருமாள்காண்

செகதலமும் வானு மிகுதிபெறு பாடல்
தெரிதருகு மாரப் – பெருமாள்காண்

மருவுமடி யார்கள் மனதில்விளை யாடு
மரகதம யூரப் – பெருமாள்காண்

மணிதரளம் வீசி யணியருவி சூழ
மருவுகதிர் காமப் – பெருமாள்காண்

அருவரைகள் நீறு படஅசுரர் மாள
அமர்பொருத வீரப் – பெருமாள்காண்

அரவுபிறை வாரி விரவுசடை வேணி
அமலர்குரு நாதப் – பெருமாள்காண்

இருவினையி லாத தருவினைவி டாத
இமையவர்கு லேசப் – பெருமாள்காண்

இலகுசிலை வேடர் கொடியினதி பார
இருதனவி நோதப் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதனன தான தனதனன தான
தனதனன தானத் – தனதான

திருமகள் உலாவும் இருபுய முராரி
திருமருக நாமப் – பெருமாள்காண்

செகதலமும் வானும் மிகுதிபெறு பாடல்
தெரிதரு குமாரப் – பெருமாள்காண்

மருவும் அடியார்கள் மனதில்விளையாடு
மரகதமயூரப் – பெருமாள்காண்

மணிதரளம் வீசி யணியருவி சூழ
மருவு கதிர்காமப் – பெருமாள்காண்

அருவரைகள் நீறு படஅசுரர் மாள
அமர்பொருத வீரப் – பெருமாள்காண் .

அரவுபிறை வாரி விரவுசடை வேணி
அமலர்குரு நாதப் – பெருமாள்காண்

இருவினையிலாத தருவினைவி டாத
இமையவர் குலேசப் – பெருமாள்காண்

இலகுசிலை வேடர் கொடியின் அதிபார
இருதனவிநோதப் – பெருமாளே.

English

thirumagaL ulAvum irubuya murAri
thirumaruga nAmap – perumALkAN

jegathalamum vAnu migudhipeRu pAdal
theritharu kumArap – perumALkAN

maruvumadi yArgaL manadhil viLaiyAdu
marakatha mayUrap – perumALkAN

maNitharaLam veesi aNiyaruvi sUzha
maruvu kadhir kAmap – perumALkAN

aruvaraigaL neeRu pada asurar mALa
amarporudha veerap – perumALkAN

aravupiRai vAri viravusadai vENi
amalarguru nAthap – perumALkAN

iruvinaiy ilAdha tharuvinai vidAdha
imaiyavar kulEsap – perumALkAN

ilagusilai vEdar kodiyinadhi bAra
iruthana vinOdhap – perumALE.

English Easy Version

thirumagaL ulAvum irubuya murAri
thirumaruga nAmap – perumALkAN

jegathalamum vAnu migudhipeRu pAdal
theritharu kumArap – perumALkAN

maruvumadi yArgaL manadhil viLaiyAdu
marakatha mayUrap – perumALkAN

maNitharaLam veesi aNiyaruvi sUzha
maruvu kadhir kAmap – perumALkAN

aruvaraigaL neeRu pada asurar mALa
amarporudha veerap – perumALkAN

aravupiRai vAri viravusadai vENi
amalarguru nAthap – perumALkAN

iruvinaiy ilAdha tharuvinai vidAdha
imaiyavar kulEsap – perumALkAN

ilagusilai vEdar kodiyin adhi bAra
iruthana vinOdhap – perumALE.