திருப்புகழ் 645 மரு அறா வெற்றி (கதிர்காமம்)

Thiruppugal 645 Maruaravetri

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதனா தத்த தனதனா தத்த
தனதனா தத்த – தனதான

மருவறா வெற்றி மலர்தொடா விற்கை
வலிசெயா நிற்கு – மதனாலும்

மதில்கள்தா வுற்ற கலைபடா வட்ட
மதிசுடா நிற்கு – மதனாலும்

இருகணால் முத்த முதிரயா மத்தி
னிரவினால் நித்த – மெலியாதே

இடருறா மெத்த மயல்கொளா நிற்கு
மிவளைவாழ் விக்க – வரவேணும்

கரிகள்சேர் வெற்பி லரியவே டிச்சி
கலவிகூர் சித்ர – மணிமார்பா

கனகமா ணிக்க வடிவனே மிக்க
கதிரகா மத்தி – லுறைவோனே

முருகனே பத்த ரருகனே முத்தி
முதல்வனே பச்சை – மயில்வீரா

முடுகிமே லிட்ட கொடியசூர் கெட்டு
முறியவேல் தொட்ட – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதனா தத்த தனதனா தத்த
தனதனா தத்த – தனதான

மரு அறா வெற்றி மலர் தொடா வில் கை
வலி செயா நிற்கு(ம்) – மதனாலும்

மதில்கள் தாவுற்ற கலை படா வட்ட
மதி சுடா நிற்கும் – அதனாலும்

இரு க(ண்)ணால் முத்தம் உதிர யாமத்தின்
இரவினால நித்தம் – மெலியாதே

இடர் உறா மெத்த மயல் கொ(ள்)ளா நிற்கும்
இவளை வாழ்விக்க – வர வேணும்

கரிகள் சேர் வெற்பில் அரிய வேடிச்சி
கலவி கூர் சித்ர மணி – மார்பா

கனக மாணிக்க வடிவனே மிக்க
கதிரகாமத்தில் – உறைவோனே

முருகனே பத்தர் அருகனே முத்தி
முதல்வனே பச்சை – மயில் வீரா

முடுகி மேலிட்ட கொடிய சூர் கெட்டு
முறிய வேல் தொட்ட – பெருமாளே

English

maruvaRA vetRi malarthodA viRkai
valiseyA niRku – mathanAlum

mathilkaLthA vutRa kalaipadA vatta
mathisudA niRku – mathanAlum

irukaNAl muththa muthirayA maththi
niravinAl niththa – meliyAthE

idaruRA meththa mayalkoLA niRku
mivaLaivAzh vikka – varavENum

karikaLsEr veRpi lariyavE dicchi
kalavikUr sithra – maNimArpA

kanakamA Nikka vadivanE mikka
kathirakA maththi – luRaivOnE

murukanE paththa rarukanE muththi
muthalvanE pacchai – mayilveerA

mudukimE litta kodiyacUr kettu
muRiyavEl thotta – perumALE.

English Easy Version

maru aRA vetRi malar thodA vil kai
vali seyA niRku(m) – mathanAlum

mathilkaL thAvutRa kalai padA vatta
mathi sudA niRkum – athanAlum

iru ka(N)NAl muththam uthira yAmaththin
iravinAl niththam – meliyAthE

idar uRA meththa mayal ko(L)LA niRkum
ivaLai vAzhvikka – vara vENum

karikaL sEr veRpil ariya vEdicchi
kalavi kUr sithra – maNi mArpA

kanaka mANikka vadivanE mikka
kathirakAmaththil – uRaivOnE

murukanE paththar arukanE muththi
muthalvanE pacchai – mayil veerA

muduki mElitta kodiya cUr kettu
muRiya vEl thotta – perumALE