திருப்புகழ் 652 மங்கைக் கணவனும் (காசி)

Thiruppugal 652 Mangaikkanavanum

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தந்தத் தனதன தானன தானன
தந்தத் தனதன தானன தானன
தந்தத் தனதன தானன தானன – தனதான

மங்கைக் கணவனும் வாழ்சிவ ணாமயல்
பங்கப் படமிசை யேபனி போல்மதம்
வந்துட் பெருகிட வேவிதி யானவ – னருள்மேவி

வண்டுத் தடிகைபொ லாகியெ நாள்பல
பந்துப் பனைபழ மோடிள நீர்குட
மண்டிப் பலபல வாய்வினை கோலும – வழியாலே

திங்கட் பதுசெல வேதலை கீழுற
வந்துப் புவிதனி லேமத லாயென
சிந்தைக் குழவியெ னாவனை தாதையு – மருள்கூரச்

செம்பொற் றடமுலை பால்குடி நாள்பல
பண்புத் தவழ்நடை போய்வித மாய்பல
சிங்கிப் பெருவிழி யாரவ மாயதி – லழிவேனோ

அங்கைத் தரியென வேயொரு பாலக
னின்பக் கிருபைய தாயொரு தூண்மிசை
அம்பற் கொடுவரி யாயிரண் யாசுர – னுடல்பீறி

அண்டர்க் கருள்பெரு மான்முதி ராவணி
சங்குத் திகிரிக ரோனரி நாரவ
ரங்கத் திருவணை மேல்துயில் நாரணன் – மருகோனே

கங்கைச் சடைமுடி யோனிட மேவிய
தங்கப் பவளொளி பால்மதி போல்முக
கங்குற் றரிகுழ லாள்பர மேசுரி – யருள்பாலா

கந்துப் பரிமயில் வாகன மீதிரு
கொங்கைக் குறமக ளாசையொ டேமகிழ்
கங்கைப் பதிநதி காசியில் மேவிய – பெருமாளே.

பதம் பிரித்தது

தந்தத் தனதன தானன தானன
தந்தத் தனதன தானன தானன
தந்தத் தனதன தானன தானன – தனதான

மங்கைக் கணவனும் வாழ் சிவணா மயல்
பங்கப்பட மிசையே பனி போல் மதம்
வந்து உள் பெருகிடவே விதியானவன் – அருள் மேவி

வண்டுத் தடிகை பொ(போ)ல் ஆகியே நாள் பல
பந்துப் பனை பழமோடு இள நீர் குடம்
மண்டிப் பல பலவாய் வினை கோலும் – அவ்வழியாலே

திங்கள் ப(த்)து செலவே தலை கீழ் உற
வந்துப் புவி தனிலே மதலாய் என
சிந்தைக் குழவி எனா அ(ன்)னை தாதையும் – அருள் கூர

செம் பொன் தட முலை பால் குடி நாள் பல
பண்புத் தவழ் நடை போய் விதமாய் பல
சிங்கிப் பெரு விழியார் அவமாய் அதில் – அழிவேனோ

அம் கைத்து அரி எனவே ஒரு பாலகனின்
இன்பக் கிருபையதாய் ஒரு தூண் மிசை
அம் பல் கொ(ண்)டு அரியாய் இரண்ய அசுரன் – உடல் பீறி

அண்டர்க்கு அருள் பெருமான் முதிரா அணி
சங்குத் திகிரிகரோன் அரி நார
அரங்கத்து இரு அணை மேல் துயில் நாரணன் – மருகோனே

கங்கைச் சடை முடியோன் இடம் மேவிய
தங்கப் பவள ஒளி பால் மதி போல் முக
கங்குல் தரி குழலாள் பரமேசுரி – அருள் பாலா

கந்துப் பரி மயில் வாகன மீது இரு
கொங்கைக் குற மகள் ஆசையொடே மகிழ்
கங்கைப் பதி நதி காசியில் மேவிய – பெருமாளே

English

mangaik kaNavanum vAzhsiva NAmayal
pangap padamisai yEpani pOlmatham
vanthut perukida vEvithi yAnava – naruLmEvi

vaNduth thadikaipo lAkiye nALpala
panthup panaipazha mOdiLa neerkuda
maNdip palapala vAyvinai kOluma – vazhiyAlE

thingat pathusela vEthalai keezhuRa
vanthup puvithani lEmatha lAyena
sinthaik kuzhaviye nAvanai thAthaiyu – maruLkUrac

chempot Radamulai pAlkudi nALpala
paNputh thavazhnadai pOyvitha mAypala
singip peruvizhi yArava mAyathi – lazhivEnO

angaith thariyena vEyoru pAlaka
ninpak kirupaiya thAyoru thUNmisai
ampaR koduvari yAyiraN yAsura – nudalpeeRi

aNdark karuLperu mAnmuthi rAvaNi
sanguth thikirika rOnari nArava
rangath thiruvaNai mElthuyil nAraNan – marukOnE

kangaic chadaimudi yOnida mEviya
thangap pavaLoLi pAlmathi pOlmuka
kangut Rarikuzha lALpara mEsuri – yaruLbAlA

kanthup parimayil vAkana meethiru
kongaik kuRamaka LAsaiyo dEmakizh
kangaip pathinathi kAsiyil mEviya – perumALE.

English Easy Version

mangaik kaNavanum vAzh sivaNA mayal
pangappada misaiyE pani pOl matham
vanthu uL perukidavE vithiyAnavan – aruL mEvi

vaNduth thadikai pOl AkiyE nAL pala
panthup panai pazhamOdu iLa neer kudam
maNdip pala palavAy vinai kOlum – avvazhiyAlE

thingaL pa(th)thu selavE thalai keezh uRa
vanthup puvi thanilE mathalAy ena
sinthaik kuzhavi enA a(n)nai thAthaiyum – aruL kUra

sem pon thada mulai pAl kudi nAL pala
paNputh thavazh nadai pOy vithamAy pala
singip peru vizhiyAr avamAy athil – azhivEnO

am kaiththu ari enavE oru pAlakanin
inpak kirupaiyathAy oru thUN misai
am pal ko(N)du ariyAy iraNya asuran – udal peeRi

aNdarkku aruL perumAn muthirA aNi
sanguth thikirikarOn ari nAra
arangaththu iru aNai mEl thuyil nAraNan – marukOnE

kangaic chadai mudiyOn idam mEviya
thangap pavaLa oLi pAl mathi pOl muka
kangul thari kuzhalAL paramEsuri – aruL bAlA

kanthup pari mayil vAkana meethu iru
kongaik kuRa makaL AsaiyodE makizh
kangaip pathi nathi kAsiyil mEviya – perumALE