திருப்புகழ் 664 வதன சரோருக (வெள்ளிகரம்)

Thiruppugal 664 Vadhanasaroruga

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனன தனாதன தனன தனாதன தய்ய தனத்த தந்த
தானாதன தானந் தானன – தந்ததான

வதன சரோருக நயன சிலீமுக வள்ளி புனத்தில் நின்று
வாராய்பதி காதங் காதரை – யொன்றுமூரும்

வயலு மொரேவிடை யெனவொரு காவிடை வல்லப மற்றழிந்து
மாலாய்மட லேறுங் காமுக – எம்பிரானே

இதவிய காணிவை ததையென வேடுவ னெய்திடு மெச்சில் தின்று
லீலாசல மாடுந் தூயவன் – மைந்தநாளும்

இளையவ மூதுரை மலைகிழ வோனென வெள்ள மெனக் கலந்து
நூறாயிர பேதஞ் சாதமொ – ழிந்தவாதான்

கதைகன சாபதி கிரிவளை வாளொடு கைவசி வித்தநந்த
கோபாலம கீபன் தேவிம – கிழ்ந்துவாழக்

கயிறொ டுலூகல முருள வுலாவிய கள்வ னறப் பயந்து
ஆகாயக பாலம் பீறநி – மிர்ந்துநீள

விதரண மாவலி வெருவ மகாவ்ருத வெள்ள வெளுக்க நின்ற
நாராயண மாமன் சேயைமு – னிந்தகோவே

விளைவய லூடிடை வளைவிளை யாடிய வெள்ளிநகர்க் கமர்ந்த
வேலாயுத மேவுந் தேவர்கள் – தம்பிரானே.

பதம் பிரித்தது

தனன தனாதன தனன தனாதன தய்ய தனத்த தந்த
தானாதன தானந் தானன – தந்ததான

வதன சரோருக நயன சிலீமுக வள்ளி புனத்தில் நின்று
வாராய்பதி காதங் காதரை – ஒன்றுமூரும்

வயலும் ஒரே இடை எனவொரு காவிடை வல்லபம் அற்றழிந்து
மாலாய் மடல் ஏறுங் காமுக – எம்பிரானே

இதவிய காண் இவை ததையென வேடுவன் எய்திடும் எச்சில் தின்று
லீலாசலம் ஆடுந் தூயவன் – மைந்த நாளும்

இளையவ மூதுரை மலைகிழவோனென வெள்ள மெனக் கலந்து
நூறாயிர பேதஞ் சாதம் – ஒழிந்தவாதான்


கதை கன சாப திகிரி வளை வாளொடு கை வசிவித்த
நந்த கோபால மகீபன் தேவி – மகிழ்ந்துவாழ

கயிறொடு உலூகலம் உருள உலாவிய கள்வன் அறப் பயந்து
ஆகாய கபாலம் பீற – நிமிர்ந்துநீள

விதரண மாவலி வெருவ மகாவ்ருத வெள்ள வெளுக்க நின்ற
நாராயண மாமன் சேயை – முனிந்தகோவே

விளைவயலூடிடை வளைவிளையாடிய வெள்ளிநகர்க் கமர்ந்த
வேலாயுத மேவுந் தேவர்கள் – தம்பிரானே

English

vadhana sarOruga nayana sileemuka vaLLi punaththil nindru
vArAy padhi kAdhang kAdharai – ondrumUrum

vayalu morEvidai enavoru kAvidai vallabam
atrazhindhu mAlAy madalERung kAmuka – embirAnE

idhaviya kANivai thadhaiyena vEduvan eydhidum echchil thindru
leelAchalam Adun thUyavan main – dhanALum

iLaiyava mUdhurai malaikizha vOnena veLLa menak kalandhu
nURAyira bEdham jAtham ozhin – dhavAdhAn

gadhaigana chApa thigiri vaLai vALodu kaivasi viththa nandha
gOpAla mageepan dhEvi ma – gizhndhuvAzha

kayiRod ulUkalam uruLa ulAviya kaLva naRap payandhu
AgAya kapAlam peeRa ni – mirndhuneeLa

vitharaNa mAvali veruva mahAvrutha veLLa veLukka nindra
nArAyaNa mAman sEyai mu – nindhakOvE

viLai vayalUdidai vaLaiviLai yAdiya veLLinagark amarndha
vElAyudha mEvun dhEvargaL – thambiRAnE.

English Easy Version

vadhana sarOruga nayana sileemuka vaLLi punaththil nindru
vArAy padhi kAdhang kAdharai – ondrumUrum

vayalu morEvidai enavoru kAvidai vallabam atrazhindhu
mAlAy madalERung kAmuka – embirAnE

idhaviya kANivai thadhaiyena vEduvan eydhidum echchil thindru
leelAchalam Adum thUyavan – maindha nALum

iLaiyava mUdhurai malaikizha vOnena veLLa menak kalandhu
nURAyira bEdham jAtham – ozhindhavAdhAn

gadhaigana chApa thigiri vaLai vALodu kaivasi viththa
nandhagOpAla mageepan dhEvi – magizhndhuvAzha

kayiRod ulUkalam uruLa ulAviya kaLvan aRap payandhu
AgAya kapAlam peeRa – nimirndhuneeLa

vitharaNa mAvali veruva mahAvrutha veLLa veLukka nindra
nArAyaNa mAman sEyai – munindhakOvE

viLai vayalUdidai vaLaiviLai yAdiya veLLinagark amarndha
vElAyudha mEvun dhEvargaL – thambiRAnE