திருப்புகழ் 671 பரவி உனது (விரிஞ்சிபுரம்*)

Thiruppugal 671 Paraviunadhu

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனன தனதனத் தனன தனதனத்
தனன தனதனத் தனன தனதனத்
தனன தனதனத் தனன தனதனத் – தனதானா

பரவி யுனதுபொற் கரமு முகமுமுத்
தணியு முரமுமெய்ப் ப்ரபையு மருமலர்ப்
பதமும் விரவுகுக் குடமு மயிலுமுட் – பரிவாலே

படிய மனதில்வைத் துறுதி சிவமிகுத்
தெவரு மகிழ்வுறத் தரும நெறியின்மெய்ப்
பசியில் வருமவர்க் கசன மொருபிடிப் – படையாதே

சருவி யினியநட் புறவு சொலிமுதற்
பழகு மவரெனப் பதறி யருகினிற்
சரச விதமளித் துரிய பொருள்பறித் – திடுமானார்

தமது ம்ருகமதக் களப புளகிதச்
சயில நிகர்தனத் திணையின் மகிழ்வுறத்
தழுவி யவசமுற் றுருகி மருளெனத் – திரிவேனோ

கரிய நிறமுடைக் கொடிய அசுரரைக்
கெருவ மதமொழித் துடல்கள் துணிபடக்
கழுகு பசிகெடக் கடுகி அயில்விடுத் – திடுதீரா

கமல அயனுமச் சுதனும் வருணனக்
கினியு நமனுமக் கரியு லுறையுமெய்க்
கணனு மமரரத் தனையு நிலைபெறப் – புரிவோனே

இரையு முததியிற் கடுவை மிடறமைத்
துழுவை யதளுடுத் தரவு பணிதரித்
திலகு பெறநடிப் பவர்மு னருளுமுத் – தமவேளே

இசையு மருமறைப் பொருள்கள் தினமுரைத்
தவனி தனிலெழிற் கரும முனிவருக்
கினிய கரபுரப் பதியி லறுமுகப் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனன தனதனத் தனன தனதனத்
தனன தனதனத் தனன தனதனத்
தனன தனதனத் தனன தனதனத் – தனதானா

பரவி உனது பொன் கரமும் முகமும் முத்து
அணியும் உரமும் மெய்ப் ப்ரபையும் மரு மலர்ப்
பதமும் விரவு குக்குடமும் மயிலும் உள் – பரிவாலே

படிய மனதில் வைத்து உறுதி சிவம் மிகுத்து
எவரும் மகிழ் உற தரும நெறியின் மெய்ப்
பசியில் வரும் அவர்க்கு அசனம் ஒரு பிடிப் – படையாதே

சருவி இனிய நட்பு உறவு சொ(ல்)லி முதல்
பழகும் அவர் எனப் பதறி அருகினில்
சரச விதம் அளித்து உரிய பொருள் பறித்திடும் – மானார்

தமது ம்ருகமதக் களப புளகிதச்
சயிலம் நிகர் தனத்து இணையில் மகிழ் உறத்
தழுவி அவசம் உற்று உருகி மருள் எனத் – திரிவேனோ

கரிய நிறம் உடை கொடிய அசுரரை
கெருவ(ம்) மதம் ஒழித்து உடல்கள் துணி பட
கழுகு பசி கெடக் கடுகி அயில் – விடுத்திடு தீரா

கமல அயனும் அச்சுதனும் வருணன்
அக்கினியும் நமனும் அக் கரியில் உறையும் மெய்க்
க(ண்)ணனும் அமரர் அத்தனையும் நிலை பெறப் – புரிவோனே

இரையும் உததியில் கடுவை மிடறு அமைத்து
உழுவை அதள் உடுத்து அரவு பணி தரித்து
இலகு பெற நடிப்பவர் முன் அருளும் – உத்தம வேளே

இசையும் அரு மறைப் பொருள்கள் தினம் உரைத்து
அவனி தனில் எழில் கரும முனிவருக்கு
இனிய கர புரப் பதியில் அறு முகப் – பெருமாளே

English

paravi yunathupoR karamu mukamumuth
thaNiyu muramumeyp prapaiyu marumalarp
pathamum viravukuk kudamu mayilumut – parivAlE

padiya manathilvaith thuRuthi sivamikuth
thevaru makizhvuRath tharuma neRiyinmeyp
pasiyil varumavark kasana morupidip – padaiyAthE

saruvi yiniyanat puRavu solimuthaR
pazhaku mavarenap pathaRi yarukiniR
sarasa vithamaLith thuriya poruLpaRith – thidumAnAr

thamathu mrukamathak kaLapa puLakithac
cayila nikarthanath thiNaiyin makizhvuRath
thazhuvi yavasamut Ruruki maruLenath – thirivEnO

kariya niRamudaik kodiya asuraraik
keruva mathamozhith thudalkaL thuNipadak
kazhuku pasikedak kaduki ayilviduth – thidutheerA

kamala ayanumac chuthanum varuNanak
kiniyu namanumak kariyu luRaiyumeyk
kaNanu mamararath thanaiyu nilaipeRap – purivOnE

iraiyu muthathiyiR kaduvai midaRamaith
thuzhuvai yathaLuduth tharavu paNitharith
thilaku peRanadip pavarmu naruLumuth – thamavELE

isaiyu marumaRaip poruLkaL thinamuraith
thavani thanilezhiR karuma munivaruk
kiniya karapurap pathiyi laRumukap – perumALE.X

English Easy Version

paravi unathu pon karamum mukamum muththu
aNiyum uramum meyp prapaiyum maru malarp
pathamum viravu kukkudamum mayilum uL – parivAlE

padiya manathil vaiththu uRuthi sivam mikuththu
evarum makizh uRa tharuma neRiyin meyp
pasiyil varum avarkku asanam oru pidip – padaiyAthE

saruvi iniya nadpu uRavu so(l)li muthal
pazhakum avar enap pathaRi arukinil
sarasa vitham aLiththu uriya poruL – paRiththidum mAnAr

thamathu mrukamathak kaLapa puLakithac
chayilam nikar thanaththu iNaiyil makizh uRath
thazhuvi avasam utRu uruki maruL enath – thirivEnO

kariya niRam udai kodiya asurarai
keruva(m) matham ozhiththu udalkaL thuNi pada
kazhuku pasi kedak kaduki ayil viduththidu – theerA

kamala ayanum assuthanum varuNan
akkiniyum namanum ak kariyil uRaiyum meyk
ka(N)Nanum amarar aththanaiyum nilai peRap – purivOnE

iraiyum uthathiyil kaduvai midaRu amaiththu
uzhuvai athaL uduththu aravu paNi thariththu
ilaku peRa nadippavar mun aruLum – uththama vELE

isaiyum aru maRaip poruLkaL thinam uraiththu
avani thanil ezhil karuma munivarukku
Iniya kara purap pathiyil aRu mukap – perumALE