திருப்புகழ் 700 தலங்களில் வரும் (பெருங்குடி)

Thiruppugal 700 Thalangkalilvarum

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனந்தன தனந்தன தனந்தன தனந்தன
தனந்தன தனந்தன – தனதான

தலங்களில் வருங்கன இலங்கொடு மடந்தையர்
தழைந்தவு தரந்திகழ் – தசமாதஞ்

சமைந்தனர் பிறந்தனர் கிடந்தன ரிருந்தனர்
தவழ்ந்தனர் நடந்தனர் – சிலகாலந்

துலங்குந லபெண்களை முயங்கினர் மயங்கினர்
தொடுந்தொழி லுடன்தம – க்ரகபாரஞ்

சுமந்தன ரமைந்தனர் குறைந்தன ரிறந்தனர்
சுடும்பினை யெனும்பவ – மொழியேனோ

இலங்கையி லிலங்கிய இலங்களு ளிலங்கரு
ளிலெங்கணு மிலங்கென – முறையோதி

இடுங்கனல் குரங்கொடு நெடுங்கடல் நடுங்கிட
எழுந்தருள் முகுந்தனன் – மருகோனே

பெலங்கொடு விலங்கலு நலங்கஅ யில்கொண்டெறி
ப்ரசண்டக ரதண்டமிழ் – வயலூரா

பெரும்பொழில் கரும்புக ளரம்பைகள் நிரம்பிய
பெருங்குடி மருங்குறை – பெருமாளே.

பதம் பிரித்தது

தனந்தன தனந்தன தனந்தன தனந்தன
தனந்தன தனந்தன – தனதான

தலங்களில் வரும் கன இ(ல்)லம் கொ(ண்)டு மடந்தையர்
தழைந்த உதரம் திகழ் – தச மாதம்

சமைந்தனர் பிறந்தனர் கிடந்தனர் இருந்தனர்
தவழ்ந்தனர் நடந்தனர் – சில காலம்

துலங்கு ந(ல்)ல பெண்களை முயங்கினர் மயங்கினர்
தொடும் தொழிலுடன் தம(து) – க்ரக பாரம்

சுமந்தனர் அமைந்தனர் குறைந்தனர் இறந்தனர்
சுடும் பினை எ(ன்)னும் பவம் – ஒழியேனோ

இலங்கையில் இலங்கிய இ(ல்)லங்களுள் இலங்கு அருள்
இல் எங்கணும் இலங்கு என – முறை ஓதி

இடும் கனல் குரங்கொடு நெடும் கடல் நடுங்கிட
எழுந்தருள் முகுந்தன் நன் – மருகோனே

பெலம் கொ(ண்)டு விலங்கலும் நலங்க அயில் கொண்டு எறி
ப்ரசண்டகர தண் தமிழ் – வயலூரா

பெரும் பொழில் கரும்புகள் அரம்பைகள் நிரம்பிய
பெருங்குடி மருங்கு உறை – பெருமாளே

English

thalangaLil varungana ilangodu madanthaiyar
thazhainthavu tharanthikazh – thasamAthanj

samainthanar piRanthanar kidanthana rirunthanar
thavazhnthanar nadanthanar – silakAlam

thulanguna lapeNkaLai muyanginar mayanginar
thodunthozhi ludanthama – krakapAranj

sumanthana ramainthanar kuRainthana riRanthanar
sudumpinai yenumpava – mozhiyEnO

ilangaiyi lilangiya ilangaLu Lilangaru
LilengaNu milangena – muRaiyOthi

idumkanal kurangodu nedunkadal nadungida
ezhuntharuL mukunthanan – marukOnE

pelankodu vilangalu nalangA yilkoNdeRi
prasaNdaka rathaNdamizh – vayalUrA

perumpozhil karumpuka LarampaikaL nirampiya
perungkudi marunguRai – perumALE.

English Easy Version

thalangaLil varum kana i(l)lam ko(N)du madanthaiyar
thazhaintha utharam thikazh – thasa mAtham

Samainthanar piRanthanar kidanthanar irunthanar
thavazhnthanar nadanthanar – sila kAlam

thulangu na(l)la peNkaLai muyanginar mayanginar
thodum thozhiludan thama(thu) – kraka pAram

Sumanthanar amainthanar kuRainthanar iRanthanar
sudum pinai e(n)num pavam – ozhiyEnO

ilangaiyil ilangiya i(l)langaLuL ilangu aruL
il engaNum ilangu ena – muRai Othi

idum kanal kurangodu nedum kadal nadungida
ezhuntharuL mukunthan nan – marukOnE

pelam ko(N)du vilangalum nalanga ayil koNdu eRi
prasaNdakara thaN thamizh – vayalUrA

perum pozhil karumpukaL arampaikaL nirampiya
perungkudi marungu uRai – perumALE