Thiruppugal 701 Thoduurumkuzhai
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தான தந்தன தானா தானன
தான தந்தன தானா தானன
தான தந்தன தானா தானன – தனதான
தோடு றுங்குழை யாலே கோல்வளை
சூடு செங்கைக ளாலே யாழ்தரு
கீத மென்குர லாலே தூமணி – நகையாலே
தூம மென்குழ லாலே யூறிய
தேனி லங்கித ழாலே யாலவி
லோச னங்களி னாலே சோபித – அழகாலே
பாட கம்புனை தாளா லேமிக
வீசு தண்பனி நீரா லேவளர்
பார கொங்கைக ளாலே கோலிய – விலைமாதர்
பாவ கங்களி னாலே யான்மயல்
மூழ்கி நின்றய ராதே நூபுர
பாத பங்கய மீதே யாள்வது – கருதாயோ
நாட ருஞ்சுடர் தானா வோதுசி
வாக மங்களி னானா பேதவ
நாத தந்த்ரக லாமா போதக – வடிவாகி
நால்வி தந்தரு வேதா வேதமு
நாடி நின்றதொர் மாயா தீதம
னோல யந்தரு நாதா ஆறிரு – புயவேளே
வாட யங்கியவேலா லேபொரு
சூர்த டிந்தருள் வீரா மாமய
லேறு கந்தவி நோதா கூறென – அரனார்முன்
வாச கம்பிற வாதோர் ஞானசு
கோத யம்புகல் வாசா தேசிக
மாடை யம்பதி வாழ்வே தேவர்கள் – பெருமாளே.
பதம் பிரித்தது
தான தந்தன தானா தானன
தான தந்தன தானா தானன
தான தந்தன தானா தானன – தனதான
தோடு உறும் குழையாலே கோல் வளை
சூடு செம் கைகளாலே யாழ் தரு
கீத மென் குரலாலே தூ மணி – நகையாலே
தூமம் மென் குழலாலே ஊறிய
தேன் இலங்கு இதழாலே ஆல
விலோசனங்களினாலே சோபித அழகாலே
பாடகம் புனை தாளாலே மிக
வீசு தண் பனி நீராலே வளர்
பார கொங்கைகளாலே கோலிய – விலைமாதர்
பாவகங்களினாலே யான் மயல்
மூழ்கி நின்று அயராதே நூபுர
பாத பங்கயம் மீதே ஆள்வது – கருதாயோ
நாட அரும் சுடர் தானா ஓது சிவ
ஆகமங்களின் நானா பேத
அநாத (னே) தந்த்ர கலா மா போதக – வடிவாகி
நால் விதம் தரு வேதா வேதமும்
நாடி நின்றது ஒர் மாயா
அதீத மனோலயம் தரு நாதா ஆறிரு – புயவேளே
வாள் தயங்கிய வேலாலே பொரு
சூர் தடிந்து அருள் வீரா மா
மயில் ஏறு கந்த விநோதா கூறு என – அரனார் முன்
வாசகம் பிறவாதோர் ஞான
சுக உதயம் புகல் வாசா தேசிக
மாடையம் பதி வாழ்வே தேவர்கள் – பெருமாளே
English
thOdu Rungkuzhai yAlE kOlvaLai
cUdu sengaika LAlE yAzhtharu
keetha menkura lAlE thUmaNi – nakaiyAlE
thUma menkuzha lAlE yURiya
thEni langitha zhAlE yAlavi
lOsa nangaLi nAlE sOpitha – azhakAlE
pAda kampunai thALA lEmika
veesu thaNpani neerA lEvaLar
pAra kongaika LAlE kOliya – vilaimAthar
pAva kangaLi nAlE yAnmayal
mUzhki ninRaya rAthE nUpura
pAtha pangaya meethE yALvathu – karuthAyO
nAda rumchudar thAnA vOthusi
vAka mangaLi nAnA pEthava
nAtha thanthraka lAmA pOthaka – vadivAki
nAlvi thantharu vEthA vEthamu
nAdi ninRathor mAyA theethama
nOla yantharu nAthA ARiru – puyavELE
vAda yangiyavElA lEporu
cUrtha dintharuL veerA mAmayi
lERu kanthavi nOthA kURena – aranArmun
vAsa kampiRa vAthOr njAnasu
kOtha yampukal vAsA thEsika
mAdai yampathi vAzhvE thEvarkaL – perumALE.
English Easy Version
thOdu uRum kuzhaiyAlE kOl vaLai
cUdu sem kaikaLAlE yAzh tharu
keetha men kuralAlE thU maNi – nakaiyAlE
thUmam men kuzhalAlE URiya
thEn ilangu ithazhAlE Ala
vilOsanangaLinAlE sOpitha – azhakAlE
pAdakam punai thALAlE mika
veesu thaN pani neerAlE vaLar
pAra kongaikaLAlE kOliya – vilai mAthar
pAvakangaLinAlE yAn mayal
mUzhki ninRu ayarAthE nUpura
pAtha pangayam meethE ALvathu – karuthAyO
nAda arum sudar thAnA Othu siva
AkamangkaLin nAnA pEtha
anAtha(nE) thanthra kalA mA pOthaka – vadivAki
nAl vitham tharu vEthA vEthamum
nAdi ninRathu or mAyA atheetha
manOlayam tharu nAthA ARiru – puyavELE
vAL thayangiya vElAlE poru
cUr thadinthu aruL veerA mA mayil
ERu kantha vinOthA kURu ena – aranAr mun
vAsakam piRavAthOr njAna
suka uthayam pukal vAsA thEsika
mAdaiyam pathi vAzhvE thEvarkaL – perumALE