Thiruppugal 702 Vilaiyarukkavum
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனன தத்தன தனன தத்தன
தனந்தந் தந்த தந்தா
தனன தத்தன தனன தத்தன
தனந்தந் தந்த தந்தா
தனன தத்தன தனன தத்தன
தனந்தந் தந்த தந்தா – தனதனா தனனா
விலைய றுக்கவு முலைம றைக்கவு
மணந்துன் றுஞ்செ ழுந்தார்
புனைமு கிற்குழல் தனைய விழ்க்கவும்
விடங்கஞ் சஞ்ச ரஞ்சேர்
விழிவெ ருட்டவு மொழிபு ரட்டவு
நிணந்துன் றுஞ்ச லம்பா – யுதிரநீ ருடனே
வெளியி னிற்கவும் வலிய முட்டரை
யெதிர்ந்தும் பின்தொ டர்ந்தே
யிலைசு ணப்பொடி பிளவெ டுத்திடை
திரும்பும் பண்ப ரன்றே
யெனவு ரைத்தவர் தமைவ ரப்பணி
யுடன்கொண் டன்பு டன்போய் – சயனபா யலின்மேல்
கலைநெ கிழ்க்கவு மயல்வி ளைக்கவு
நயங்கொண் டங்கி ருந்தே
குணுகி யிட்டுள பொருள்ப றித்தற
முனிந்தங் கொன்று கண்டே
கலக மிட்டவ ரகல டித்தபின்
வரும்பங் கங்கு ணங்கோர் – புதியபே ருடனே
கதைகள் செப்பவும் வலச மர்த்திகள்
குணங்கண் டுந்து ளங்கா
மனித னிற்சிறு பொழுது முற்றுற
நினைந்துங் கண்டு கந்தே
கடிம லர்ப்பத மணுகு தற்கறி
விலன் பொங் கும்பெ ரும்பா – தகனையா ளுவையோ
சிலைத னைக்கொடு மிகஅ டித்திட
மனந்தந் தந்த ணந்தா
மரைம லர்ப்பிர மனைந டுத்தலை
யரிந்துங் கொண்டி ரந்தே
திரிபு ரத்தெரி புகந கைத்தருள்
சிவன்பங் கங்கி ருந்தா – ளருளுமா முருகா
செருவி டத்தல கைகள்தெ னத்தென
தெனந்தெந் தெந்தெ னந்தா
எனஇ டக்கைகள் மணிக ணப்பறை
டிகுண்டிங் குண்டி குண்டா
டிகுகு டிக்குகு டிகுகு டிக்குகு
டிகுண்டிங் குண்டி குண்டீ – யெனஇரா வணனீள்
மலையெ னத்திகழ் முடிகள் பத்தையு
மிரண்டஞ் சொன்ப தொன்றேய்
பணைபு யத்தையு மொருவ கைப்பட
வெகுண்டம் பொன்றெ றிந்தோன்
மதலை மைத்துன அசுர ரைக்குடல்
திறந்தங் கம்பி ளந்தே – மயிலின்மேல் வருவாய்
வயல்க ளிற்கய லினமி குத்தெழு
வரம்பின் கண்பு ரண்டே
பெருக யற்கொடு சொரியு நித்தில
நிறைந்தெங் குஞ்சி றந்தே
வரிசை பெற்றுயர் தமனி யப்பதி
யிடங்கொண் டின்பு றுஞ்சீர் – இளையநா யகனே.
பதம் பிரித்தது
தனன தத்தன தனன தத்தன
தனந்தந் தந்த தந்தா
தனன தத்தன தனன தத்தன
தனந்தந் தந்த தந்தா
தனன தத்தன தனன தத்தன
தனந்தந் தந்த தந்தா – தனதனா தனனா
விலை அறுக்கவு(ம்) முலை மறைக்கவு(ம்)
மணம் துன்றும் செழும் தார்
புனை முகில் குழல் தனை அவிழ்க்கவும்
விடம் கஞ்சம் சரம் சேர்
விழி வெருட்டவு(ம்) மொழி புரட்டவு(ம்)
நிணம் துன்றும் சலம் பாய் உதிர – நீருடனே
வெளியில் நிற்கவும் வலிய முட்டரை
எதிர்த்தும் பின் தொடர்ந்தே
இலை சு(ண்)ணப் பொடி பிளவு எடுத்து இடை
திரும்பும் பண்பர் அன்றே
என உரைத்து அவர் தமை வரப் ப(ண்)ணி
உடன் கொண்டு அன்புடன் போய் – சயன பாயிலின் மேல்
கலை நெகிழ்க்கவு(ம்) மயல் விளைக்கவு(ம்)
நயம் கொண்டு அங்கு இருந்தே
குணுகியிட்டு உ(ள்)ள பொருள் பறித்து
அற முனிந்து அங்கு ஒன்று கண்டே
கலகம் இட்டு அவர் அகல அடித்த பின்
வரும் பங்கு அங்கு உணங்க ஓர் – புதிய பேருடனே
கதைகள் செப்பவும் வ(ல்)ல சமர்த்திகள்
குணம் கண்டும் துளங்கா
மனிதனில் சிறு பொழுதும் உற்று உற
நினைந்தும் கண்டு உகந்தே
கடி மலர்ப் பதம் அணுகுதற்கு
அறிவிலன் பொங்கும் பெரும் பாதகனை – ஆளுவையோ
சிலை தனைக் கொ(ண்)டு மிக அடித்திட
மனம் தந்து அந்தணன்
தாமரை மலர்ப் பிரமனை நடுத் தலை
அரிந்தும் கொண்டு இரந்தே
திரி புரத்து எரி புக நகைத்து அருள்
சிவன் பங்கு அங்கு இருந்தாள் – அருளு(ம்) மா முருகா
செரு இடத்து அலகைகள் தெனத்தென
தெனந்தெந்தெந் தெனந்தா
என இடக்கைகள் மணி கணப் பறை
டிகுண்டிங்குண் டிகுண்டா
டிகுகுடிக்குகு டிகுகுடிக்குகு
டிகுண்டிங்குண் டிகுண்டீ என – இராவணன் நீள்
மலை எனத் திகழ் முடிகள் பத்தையும்
இரண்டு அஞ்சு ஒன்பது ஒன்று ஏய்
பணை புயத்தையும் ஒரு வகைப்பட
வெகுண்டு அம்பு ஒன்று எறிந்தோன்
மதலை மைத்துன அசுரரைக் குடல்
திறந்து அங்கம் பிளந்தே மயிலின் – மேல் வருவாய்
வயல்களில் கயல் இன(ம்) மிகுத்து எழு
வரம்பின் கண் புரண்டே
பெருகு அயல் (கொ)டு சொரியு(ம்) நித்தில(ம்)
நிறைந்து எங்கும் சிறந்தே
வரிசை பெற்று உயர் தமனியப் பதி
இடம் கொண்டு இன்புறும் சேர் – இளைய நாயகனே
English
vilaiya Rukkavu mulaima Raikkavu
maNanthun Rumche zhunthAr
punaimu kiRkuzhal thanaiya vizhkkavum
vidangkanj anja ranjEr
vizhive ruttavu mozhipu rattavu
niNanthun Runja lampA – yuthiranee rudanE
veLiyi niRkavum valiya muttarai
yethirnthum pintho darnthE
yilaisu Nappodi piLave duththidai
thirumpum paNpa ranRE
yenavu raiththavar thamaiva rappaNi
yudankoN danpu danpOy – sayanapA yalinmEl
kalaine kizhkkavu mayalvi Laikkavu
nayamkoN dangi runthE
kuNuki yittuLa poruLpa RiththaRa
muninthan gonRu kaNdE
kalaka mittava rakala diththapin
varumpang kangu NangOr – puthiyapE rudanE
kathaikaL cheppavum valacha marththikaL
kuNangaN dunthu LangA
manitha niRchiRu pozhuthu mutRuRa
ninainthung kaNdu kanthE
kadima larppatha maNuku thaRkaRi
vilanpong kumpe rumpA – thakanaiyA LuvaiyO
silaitha naikkodu mikaa diththida
mananthan thantha NanthA
maraima larppira manaina duththalai
yarinthung koNdi ranthE
thiripu raththeri pukana kaiththaruL
sivanpang kangi runthA – LaruLumA murukA
cheruvi daththala kaikaLthe naththena
thenanthen thenthe nanthA
enai dakkaikaL maNika NappaRai
dikuNding kuNdi kuNdA
dikuku dikkuku dikuku dikkuku
dikuNding kuNdi kuNdee – yenairA vaNaneeL
malaiye naththikazh mudikaL paththaiyu
miraNdanj chonpa thonREy
paNaipu yaththaiyu moruva kaippada
vekuNdam ponRe RinthOn
mathalai maiththuna asura raikkudal
thiRanthang kampi LanthE – mayilinmEl varuvAy
vayalka LiRkaya linami kuththezhu
varampin kaNpu raNdE
peruka yaRkodu soriyu niththila
niRaintheng kunji RanthE
varisai petRuyar thamani yappathi
yidangkoN dinpu Rumcheer – iLaiyanA yakanE.
English Easy Version
vilai aRukkavu(m) mulai maRaikkavu(m)
maNam thunRum chezhum thAr
punai mukil kuzhal thanai avizhkkavum
vidam kanjam saram sEr
vizhi veruttavu(m) mozhi purattavu(m)
niNam thunRum chalam pAy – uthira neerudanE
veLiyil niRkavum valiya muttarai
ethirththum pin thodarnthE
ilai su(N)Nap podi piLavu eduththu idai
thirumpum paNpar anRE
ena uraiththu avar thamai varap pa(N)Ni
udan koNdu anpudan pOy sayana – pAyilin mEl
kalai nekizhkkavu(m) mayal viLaikkavu(m)
nayam koNdu angu irunthE
kuNukiyittu u(L)La poruL paRiththu aRa
Muninthu angu onRu kaNdE
kalakam ittu avar akala adiththa pin
varum pangu angu uNanga Or – puthiya pErudanE
kathaikaL cheppavum va(l)la chamarththikaL
kuNam kaNdum thuLangkA
manithanil chiRu pozhuthum utRu
ninainthum kaNdu ukanthE
kadi malarp patham aNukuthaRku
aRivilan pongum perum – pAthakanai ALuvaiyO
silai thanaik ko(N)du mika adiththida
manam thanthu anthaNan
thAmarai malarp piramanai naduth thalai
arinthum koNdu iranthE
thiri puraththu eri puka nakaiththu aruL
sivan pangu angu irunthAL – aruLu(m) mA murukA
cheru idaththu alakaikaL thenaththena
thenanthenthen thenanthA
ena idakkaikaL maNi kaNap paRai
dikuNdingkuN dikuNdA
dikukudikkuku dikukudikkuku
dikuNdingkuN dikuNdee ena – irAvaNan neeL
malai enath thikazh mudikaL paththaiyum
iraNdu anju onpathu onRu Ey
paNai puyaththaiyum oru vakaippada
vekuNdu ampu onRu eRinthOn
mathalai maiththuna asuraraik kudal
thiRanthu angam piLanthE – mayilin mEl varuvAy
vayalkaLil kayal ina(m) mikuththu ezhu
varampin kaN puraNdE
peruku ayal (ko)du soriyu(m) niththila(m)
niRainthu engum siRanthE
varisai petRu uyar thamaniyap pathi
idam koNdu inpuRum sEr iLaiya – nAyakanE