திருப்புகழ் 703 ஆதிமுதன் நாளில் (கோடைநகர்)

Thiruppugal 703 Adhimudhannalil

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தானதன தான தந்த தானதன தான தந்த
தானதன தான தந்த – தனதான

ஆதிமுத னாளி லென்றன் தாயுடலி லேயி ருந்து
ஆகமல மாகி நின்று – புவிமீதில்

ஆசையுட னேபி றந்து நேசமுட னேவ ளர்ந்து
ஆளழக னாகி நின்று – விளையாடிப்

பூதலமெ லாம லைந்து மாதருட னேக லந்து
பூமிதனில் வேணு மென்று – பொருள்தேடிப்

போகமதி லேயு ழன்று பாழ்நரகெய் தாம லுன்றன்
பூவடிகள் சேர அன்பு – தருவாயே

சீதைகொடு போகு மந்த ராவணனை மாள வென்ற
தீரனரி நார ணன்றன் – மருகோனே.

தேவர்முநி வோர்கள் கொண்டல் மாலரிபிர் மாவு நின்று
தேடஅரி தான வன்றன் – முருகோனே

கோதைமலை வாழு கின்ற நாதரிட பாக நின்ற
கோமளிய நாதி தந்த – குமரேசா

கூடிவரு சூரர் தங்கள் மார்பையிரு கூறு கண்ட
கோடைநகர் வாழ வந்த – பெருமாளே.

பதம் பிரித்தது

தானதன தான தந்த தானதன தான தந்த
தானதன தான தந்த – தனதான

ஆதிமுதன் நாளில் என்றன் தாயுடலி லேயி ருந்து
ஆகமல மாகி நின்று – புவிமீதில்

ஆசையுடனே பிறந்து நேசமுடனே வளர்ந்து
ஆள் அழகனாகி நின்று – விளையாடி

பூதலமெலாம் அலைந்து மாதருடனேகலந்து
பூமிதனில் வேணுமென்று – பொருள்தேடி

போகமதிலே உழன்று பாழ்நரகெய்தாமல் உன்றன்
பூவடிகள் சேர அன்பு – தருவாயே

சீதைகொடு போகும் அந்த ராவணனை மாள வென்ற
தீரனரி நாரணன்றன் – மருகோனே

தேவர்முநிவோர்கள் கொண்டல் மால் அரி பிர்மாவு நின்று
தேட அரிதானவன்தன் – முருகோனே

கோதை மலை வாழுகின்ற நாதரிட பாக நின்ற
கோமளி அநாதி தந்த -குமரேசா

கூடிவரு சூரர் தங்கள் மார்பையிரு கூறு கண்ட
கோடைநகர் வாழ வந்த – பெருமாளே.

English

Athimutha nALi lenRan thAyudali lEyi runthu
Akamala mAki ninRu – puvimeethil

Asaiyuda nEpi Ranthu nEsamuda nEvaLarnthu
ALazhaka nAki ninRu – viLaiyAdip

pUthalame lAma lainthu mAtharuda nEka lanthu
pUmithanil vENu menRu – poruLthEdip

pOkamathi lEyu zhanRu pAzhnarakey thAma lunRan
pUvadikaL sEra anpu – tharuvAyE

seethaikodu pOku mantha rAvaNanai mALa venRa
theeranari nAra NanRan – marukOnE.

thEvarmuni vOrkaL koNdal mAlaripir mAvu ninRu
thEda ari thAna vanRan – murukOnE

kOthaimalai vAzhu kinRa nAtharida pAka ninRa
kOmaLiya nAthi thantha – kumarEsA

kUdivaru sUrar thangaL mArpaiyiru kURu kaNda
kOdainakar vAzha vantha – perumALE.

English Easy Version

Athimutha nALi lenRan thAyudali lEyi runthu
Akamala mAki ninRu – puvimeethil

Asaiyuda nEpi Ranthu nEsamuda nEvaLarnthu
ALazhaka nAki ninRu – viLaiyAdip

pUthalame lAma lainthu mAtharuda nEka lanthu
pUmithanil vENu menRu – poruLthEdip

pOkamathi lEyu zhanRu pAzhnarakey thAma lunRan
pUvadikaL sEra anpu – tharuvAyE

seethaikodu pOku mantha rAvaNanai mALa venRa
theeranari nAra NanRan – marukOnE

thEvarmuni vOrkaL koNdal mAlaripir mAvu ninRu
thEda ari thAna vanRan – murukOnE

kOthaimalai vAzhu kinRa nAtharida pAka ninRa
kOmaLiya nAthi thantha – kumarEsA

kUdivaru sUrar thangaL mArpaiyiru kURu kaNda
kOdainakar vAzha vantha – perumALE.